தமிழகமெங்கும் அல்லது இந்து மதம் என்று சொல்லப்படக்கூடிய பார்ப்பன மதத்தை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடியவர்கள் இடையே நிகழ்ந்த மற்றும் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது.
சாதி என்பது பௌதிக கட்டுமானம் அல்ல அது கண்ணுக்குத் தெரியாது. அறிமுகமில்லாத நூறு பேரை வரிசையாக நிப்பாட்டி இவர் என்ன ஜாதி என்று கேட்டால் யாருக்கும் தெரியாது, தெரிய வாய்ப்பும் இல்லை. அப்படிப்பட்ட, பார்ப்பனர்களிடையே மட்டும் இருந்த, சாதி என்பது இன்று உழைக்கும் மக்களிடையே ஆழமாக வேரூன்றிப் பரவி நிற்கின்றது. அப்படிப்பட்ட சாதி ஒன்றுமறியாத குழந்தைகளிடம் தொடங்கி பிணத்தில் முடிகிறது. இப்படி சாதியின் பெயரால் ஏராளமான வன்முறைகள் நிகழ்ந்திருந்தாலும், அவைகள் இப்பொழுது தேவையில்லை. இங்கு ஒரு வயதான தலை நரைத்த கிழவி ஒருத்தி அப்படிப்பட்ட சாதிய உள்ளுணர்வை இளம் தலைமுறை பெண்ணொருத்திக்கு கடத்துகிறாள் எப்படி என்று பார்ப்போம். அவள், நான் தான் சாகப் போகிறேனே, இது நம்முடைய கடமை என்று அதனை எடுத்துரைத்தாள் போலும்.
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னால், தென்தமிழகத்தின் ஒரு கிராமத்தில், விடியற்காலை ஏழு மணி வாக்கில் தன் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து பாக்கு இடித்துக் கொண்டிருந்தாள் அந்த கிழவி.
அப்பொழுது தன் தாய் இட்ட கட்டளையை ஏற்று வேலைக்கு ஆட்களுக்குச் சொல்லுவதற்காக அந்தப் பக்கம், தனது ஒரு வயதுகூட நிரம்பாத தம்பியை தூக்கிக் கொண்டு சென்றாள் பதினோரு வயதே நிரம்பிய காத்தாயி. கிழவியின் வீட்டை தான்டித்தான் அந்தப்பக்கம் போக வேண்டும். ஒரு வழியில் பார்த்தால், அந்த கிழவி காத்தாயிக்கு அப்பத்தா முறைதான் வேண்டும். அவள் சென்றுகொண்டிருக்கும் போது;
அடியே காத்தாயி என்ற உரத்த குரல் கேட்டது.
என்ன அப்பத்தா?
எங்கடி போற?
எங்கம்மா வேலைக்கு ஆளுக்கு சொல்லச் சொன்னுச்சு அப்பத்தா. அதான் கீழத்தெருவுக்கு ( கிராமத்தில் கீழத்தெரு, காலனித்தெரு என்று சொல்லுவது வழக்கம். நகரத்தில் சேரி என்பது போல) சொல்ல போறேன் அப்பத்தா.
அதுக்கு ஏன்டி காலங்காத்தால புள்ளய தூக்கிட்டு போற. காலையில அதுங்க சாப்புட்டுகிட்டு இருக்குற நேரம், பச்சை புள்ளய தூக்கிட்டு போறியே, அதுங்க சாப்புடுறத பாத்து அழுதான்னா அதுங்க கிட்ட வாங்கி குடுத்தா தூக்கிட்டு வருவ? புள்ளய இங்கே எறக்கி விட்டுட்டு போடி நான் பாத்துக்கிறேன்.
நான் விட்டுட்டு போனா அழுகுவான் அப்பத்தா. நான் தூக்கிட்டே போறேன்.
அடியே புள்ளய அங்கே தூக்கிட்டு போகாதடினு சொல்லிக்கிட்டே இருக்கேன் அடங்குறாளா பாருடா ராமா அடங்காப்புடாரி என்று அருகில் உட்கார்ந்திருந்த தனது மகன்வழி பேரன் ராமனிடம் சொன்னாள்.
ராமன் பக்குவமான வயதுடையன். ஏன் அப்பத்தா அப்புடியே அவன் அழுதாலும் அவங்க ஒருவா சோத்த பெசஞ்சு ஊட்டிவிட்டா என்ன குடியா முழுகிற போகுது.
நாத்திகம் பேசாதடா, சின்ன புள்ளங்கன்னா பெரிய ஆளுங்க சொல்லறத கேக்கனும்டா, அந்த காலத்துல நாங்கல்லாம் எங்க அப்பனாத்தாவ நேருக்கு நேரா கூட பாத்துக்க மாட்டோம். அம்புட்டு அடக்கமா இருப்போம். இந்த காலத்து புள்ளங்க எல்லாம் கெட்டு சீரழிஞ்சு போச்சுக....
பொருத்திடுக......
ராமனை அந்த கிழவி நாத்திகன் என்றல்லவா திட்டினாள். இவ்வளவுக்கும் ராமன் நல்ல பக்திமான். இருந்தும் ஏன் நாத்திகன் என்று திட்டினாள். புரிகிறது அதுதான் பார்ப்பனியம்.
பார்ப்பனியத்தை பொறுத்தமட்டில் கடவுளை மறுப்பவன் நாத்திகன் அல்ல. ஏனென்றால் கடவுளே அவர்களுக்குக் கட்டுப்பட்டவர்.
கரிய மாலினும் கண்ணுதலானினும்
உரிய தாமரை மேலுரைவானினும்
விரியும் பூதமோர் ஐந்தினும் மெய்யினும்
பெரியார் அந்தணர் பேனுதி யுள்ளத்தில்
அதாவது,
கரியமால் - திருமால்
கண்ணுதல் - நெற்றிக்கண் உடையவன் (சிவன்)
கண்ணுதல் - நெற்றிக்கண் உடையவன் (சிவன்)
தாமரயில் உரைபவன் - பிரம்மா
ஐந்து பூதம் மற்றும் உண்மை இவை எல்லாவற்றையும் விட பார்ப்பனர்களே(அந்தணர்) உயர்ந்தவர்கள் என்று ராமாயணத்தில் வசிட்டர் ராமனிடம் சொல்லுகின்றார்.
எனவே பார்பானரே கடவுளை விட உயர்ந்தவர்கள். அப்படியானால் நாத்திகம் என்றால் என்ன? என்ற கேள்வி பதில் சொல்லப்படாமலேயே விடப்பட்டுவிட்டது. கடவுளை மறுப்பவன் நாத்திகன் ஆக மாட்டான்.
நாஸ்திக வேத நிந்திக
அதாவது, எவனொருவன் வேதத்தை மறுக்கிறானோ அவனே நாத்திகன்...
அதாவது, எவனொருவன் வேதத்தை மறுக்கிறானோ அவனே நாத்திகன்...
ஏனென்றால் வேத்தில்தான் வர்ணாசிரம தர்மம் சொல்லப்பட்டுள்ளது. எனவே, வேதத்தை மறுப்பவன் சாதியை மறுப்பவன் சாதியை மறுப்பவன் ஆகிறான்.
இவர்களை பொறுத்தமட்டில் கடவுள் வேதத்திற்கு கட்டுப்பட்டது, வேதம் பார்ப்பனருக்கு கட்டுப்பட்டது.
ஆக A=B=C எனில் A=C என்னும் சுத்திர்ப்படி, கடவுள் பார்ப்பனருக்கு கட்டுப்பட்டது என்றாகிறது. இப்பொழுது தெரிகிறது அந்த கிழவி ஏன் ராமனை நாத்திகன் என திட்டினாள் என்று. பிறகு காத்தாயி புள்ளய தூக்கிக்கொண்டே சென்றாள், கிழவியும் திட்டிக்கொண்டே இருந்தாள், என்னமோ சாதிய கோட்டை தன் கண்முன்னே இடிந்ததை போல நினைத்து.
இவர்களை பொறுத்தமட்டில் கடவுள் வேதத்திற்கு கட்டுப்பட்டது, வேதம் பார்ப்பனருக்கு கட்டுப்பட்டது.
ஆக A=B=C எனில் A=C என்னும் சுத்திர்ப்படி, கடவுள் பார்ப்பனருக்கு கட்டுப்பட்டது என்றாகிறது. இப்பொழுது தெரிகிறது அந்த கிழவி ஏன் ராமனை நாத்திகன் என திட்டினாள் என்று. பிறகு காத்தாயி புள்ளய தூக்கிக்கொண்டே சென்றாள், கிழவியும் திட்டிக்கொண்டே இருந்தாள், என்னமோ சாதிய கோட்டை தன் கண்முன்னே இடிந்ததை போல நினைத்து.
No comments:
Post a Comment