Thursday, April 18, 2019

உயிர்மெய் எழுத்து

உயிர்மெய் எழுத்து என்பது சார்பெழுத்தின் ஒரு வகையாகும்.

உயிர்மெய் = உயிர் + மெய்

மெய்யெழுத்தும் உயிரெழுத்தும் சேர்ந்து பிறப்பது உயிர்மெய் எழுத்து ஆகும்.

உதாரணம்:

க = க் + அ

கா = க் + ஆ      

ஙி = ங் + இ

சே = ச் + ஏ

இதேபோல் தமிழில் உள்ள 18 மெய்யெழுத்துகளும் 12 உயிரெழுத்துகளும் சேர்ந்து ( 18 × 12 = 216) இருநூற்று பதினாறு உயிர்மெய் எழுத்துகளைப் பிறப்பிக்கின்றன.


        உயிர்மெய் எழுத்து அட்டவணை


நீல நிறத்தில் கிடைமட்டமாக மற்றும் செங்குத்தாக உள்ள எழுத்துகள் முறையே, உயிரெழுத்துகள் மற்றும் மெய்யெழுத்துகள் ஆகும்.

( அட்டவணையில் உள்ள எழுத்துகள் மங்கலாக தெரியுமானால், அட்டவணையைத் தொடவும் அல்லது click செய்யவும் )


உயிர்மெய் குறில்

மொத்தமுள்ள 216 உயிர்மெய் எழுத்துகளில் அ, இ, உ, எ மற்றும் ஆகிய ஐந்து குறில் உயிரெழுத்துகளுடன் மெய்யெழுத்து சேர்வதால் பிறக்கும் 18 × 5 = 90 எழுத்துகள் குறில் உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.

உதாரணம்:

க் + அ = கொ

ச் + இ = சி

த் + உ = து

ம் + எ = மெ

ப் + ஒ = பொ


உயிர்மெய் நெடில்

மொத்தமுள்ள 216 உயிர்மெய் எழுத்துகளில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ மற்றும் ஆகிய ஏழு நெடில் உயிரெழுத்துகளுடன் மெய்யெழுத்து சேர்வதால் பிறக்கும் 18 × 7 = 126 எழுத்துகள் நெடில் உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.

உதாரணம்:

க் + ஆ = கா

ச் + ஈ = சீ

த் + ஊ = தூ

ம் + ஏ = மே

ப் + ஐ = பை

ந் + ஓ = நோ

ஞ் + ஔ = ஞௌ







5 comments:

  1. உங்களுடைய பதிவு மிகவும் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள் அதேசமயம் இவற்றில் உள்ளது போல் சிறிது add pannunga
    https://munispeaks.com/tnpsc-podhu-tamil-eluthu-illakanam-study-material-in-tamil/

    ReplyDelete
  2. தேங்காய்

    ReplyDelete