பரஞ்சோதி எனும் முனிவரால் இயற்றப்பட்ட நூல் திருவிளையாடல் புராணம் என்று கூறப்படுகிறது. இதில் அறுபத்து நான்கு படலங்கள் உள்ளன. அவற்றில் சில படலங்களை வைத்து தான் நாம் அணைவரும் அறிந்த சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரி நடித்து 1965 ஆம் ஆண்டு வெளிவந்த திருவிளையாடல் திரைப்படம் உருவானது. அந்த அறுபத்து நான்கு படலங்களில் ஒன்றுதான் கீரைனை(நக்கீரன்) கரையேற்றிய படலம்.
எனது கவிதையில் சொற்சுவையில் குற்றம் கண்டீரா? பொருட்சுவையில் குற்றம் கண்டீரா?
சொல்லில் பிழையில்லை, இருந்தாலும் அது மன்னிக்கப்பட கூடியது, பொருளில் தான் குற்றம் உள்ளது.
அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி பங்கம்பட விரண்டு கால் பரப்பி சங்கதனை கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எனது கவியை ஆராயத்தக்கவன்.
சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலம்? சங்கை அறிந்துண்டு வழ்வோம் அறவே உண்போல் இரந்துண்டு வாழமாட்டோம்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. என்பன போன்ற உரையாடல்கள் வரும். இது புகழ்பெற்ற வசனம். தமிழகத்தில் வாழும் அணைவருக்கும் பெருமளவு தெரியும்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. என்பன போன்ற உரையாடல்கள் வரும். இது புகழ்பெற்ற வசனம். தமிழகத்தில் வாழும் அணைவருக்கும் பெருமளவு தெரியும்.
நிற்க..
நான் ஏதோ திருவிளையாடல் புராணத்தின் பெருமை கூறவோ அல்லது திருவிளையாடல் திரைப்படம் பற்றி பேசவோ இதனை சொல்லவில்லை. திருவிளையாடல் திரைப்படத்தின் இந்த பகுதியை, இயக்குனரின் கற்பனை என்று எவரும் என்னிவிடக்கூடாது என்பதற்காகவே கூறுகிறேன். இந்த பகுதியானது திருவிளையாடல் புராணத்தின் ஐம்பத்து மூன்றாவது படலமான கீரனை கரையேற்றிய படலமாகும். இதைப் போலவே இந்த புராணத்தின் இருபத்து ஆறாவது படலமான மாபாதகம் தீர்த்த படலம் பற்றியே இங்கு நாம் பார்க்க இருக்கிறோம்.
மாபாதகம் தீர்த்த படலம்
உள்ளே செல்லும் முன்பு சிறு விளக்கம். இது என்னுடைய புராணம், என்னுடைய படலம் இல்லை. திருவிளையாடல் புராணம், மாபாதகம் தீர்த்த படலம். சரி உள்ளே செல்லலாம்.
இந்த படலத்தின் படி ஒரு அந்தணர் (பார்ப்பனர்) தனது மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தார். அவருடைய மகனுக்கு தனது தாயின் மீது காம உணர்ச்சி உண்டாகிறது. விருப்பத்தை தனது தாயிடம் சொல்லுகின்றான். அவளும் சம்மதிக்கவே தாயை புணர்ந்தான். நிற்க, மறுபடியும் தெளிவு படுத்துகிறேன், இது என்னுடைய கதை அல்ல திருவிளையாடல் புராணம்.
இவ்வாறு அடிக்கடி அவன் தாயை புணர்கின்றான். இது அவனுடைய தந்தைக்கு தெரியாது. இருப்பினும், அவன் தந்தை இருப்பதை இடையூராக கருதினான். தந்தையை கொலை செய்ய திட்டமிடுகிறான். இதை தன் தாயிடம் சொல்லுகின்றான். அதற்கு அவள், நாம் இப்படி புணர்வதே பாவம், இதில் அவரை வேறு கொலை செய்வதா? அது பெரும் பாவமாக அமைந்துவிடும் வேண்டாம் என்றாள். அவன் அதற்கு செவி சாய்க்கவில்லை, தந்தையை கொலை செய்கின்றான். உடனே அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ( இருப்பதிலேயே மிகப் பெரிய தோஷம். செவ்வாய் தோஷத்தை விட பெரியது) ஏற்றப்பட்டு, அங்கும் இங்கும் அலைகிறான். இதை பார்த்த நம்ம ஹீரோ சொக்கநாதன் அதாவது சிவன்(சிவாஜி இல்லை), அவனுக்கு சில பரிகாரங்களை சொல்கின்றார். அதாவது, தினமும் அதிகாலையில் எழுதல், பசுவிற்கு புல் வைத்தல், தெப்பக்குளத்தில் குளித்தல் போன்றவை. அவனும் அவ்வாறே செய்கிறான் பிறகு குனமாகின்றான்.
இதைப் பார்த்து உமையவள் (பார்வதி), என்னங்க அயோக்கியன எல்லாம் குனப்படுத்துரிங்கனு கேட்கிறாள். இது சிவனின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் ஒரு திருவிளையாடல். இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், தாயை புணரும் போது ஏற்படாத தோஷம், தந்தையை கொலை செய்யும் போதும் ஏற்படாத தோஷம், தந்தை ஒரு பார்ப்பனன்(பிராமணன்) என்பதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்ப்பட்டது. பார்வதி இவன எதுக்கு காப்பாத்துரிங்கனு கேட்டப்போ சிவன் என்ன வேண்டுமானாலும் சொல்லியிருக்கட்டும், இப்போ நமக்கு என்னா தோனுதுனா, அவனும் ஒரு பார்ப்பனன் தானே. அதனால் பக்தாளை காப்பாற்ற வேண்டியது சொக்கநாதனின் கடமை என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
சரி அப்படியானால் அவன் பார்ப்பனன் தானே அவனுக்கு எதற்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பபட வேண்டும். அது வேற ஒன்னும் இல்லை, ஒரு பார்ப்பனருக்கு தீங்கு விளைவித்தால், அவருக்கு நிச்சயம் தண்டனை உண்டு என்பதை காட்டுவதற்க்காவே. மேலும், தீங்கு விளைவித்தவனும் ஒரு பார்ப்பராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு பாவ விமோசனமும் உண்டு என்பதை காட்டுவதற்காக. இவ்வாறாக அப்பேற்பட்ட மாபாதகத்தை சொக்கநாதர் தீர்த்தார் என்று முடிகிறது மாபாதகம் தீர்த்த படலம்.
சரி அப்படியானால் அவன் பார்ப்பனன் தானே அவனுக்கு எதற்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பபட வேண்டும். அது வேற ஒன்னும் இல்லை, ஒரு பார்ப்பனருக்கு தீங்கு விளைவித்தால், அவருக்கு நிச்சயம் தண்டனை உண்டு என்பதை காட்டுவதற்க்காவே. மேலும், தீங்கு விளைவித்தவனும் ஒரு பார்ப்பராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு பாவ விமோசனமும் உண்டு என்பதை காட்டுவதற்காக. இவ்வாறாக அப்பேற்பட்ட மாபாதகத்தை சொக்கநாதர் தீர்த்தார் என்று முடிகிறது மாபாதகம் தீர்த்த படலம்.
என்ன ஒரு ஆச்சர்யம். தாயுடன் புணரும் படி புராணங்களில் இருக்கிறதா..!!
ReplyDeleteஇந்து? மதத்தில் இது போன்ற அசிங்கமான கருத்துக்கள் ஏராளம் ?
ReplyDeleteகதையை முழுமையாக பதிவிடு
ReplyDeleteஅறைகுறையாக அல்ல இது இந்து மதம் அல்ல சைவ மதம்
தாயை புணர்ந்தவன் செய்வது சரி என்றால்! பின் எதற்கு பார்வதி தேவி அவனை பற்றி எதற்கு?தவறாக பேசவேண்டும்? திருவிளையாடல் புராணத்தை பற்றி குறிப்பிட நீ...ஏன் கருடபுராணத்தின் மனிதன் வாழும் போது செய்த தவறுகளுக்கான கொடூரமான தண்டனை பற்றிலா தெரியாதா??? உனக்கு? எவன் வேண்டும் என்றாலும் பார்பனன் ஆகலாமே! அதற்கு பயிற்சி முறை கற்றாலே போதுமே..!
Yenna karumamana kathai
ReplyDeleteஇந்து மதம் இல்லை சைவ மதம் என ஒப்புக்கொண்டமைக்கு நன்றி., அத்துடன் எவர் வேண்டும் என்றாலும் பார்ப்பனர் ஆகலாம் பயிற்சி தேவை, இதைத்தான் தமிழ் அறிஞர்களும் சொல்கிறார்கள். எனவே நன்று செய்தாய் நன்றி.
ReplyDeleteஅட பக்கி பயலுகளா உண்மையான புராணம் தெரியாம பேசாதீங்க
ReplyDeleteமாபாதகம் தீர்த்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 26 ஆவது படலமாகும்.(செய்யுள் பத்திகள்: 1534 - 1574)[1]. இது பழியஞ்சின படலம் என்பதற்கு அடுத்து வருவதாகும். இந்த படலத்தில் கொடூரமாக தந்தையை கொன்று, தாயிடமிருந்து செல்வத்தையும், அணிகலன்களையும் தாசியிடம் கொடுக்கும் இளைஞன், நோயால் அவதியுற்று இறைவன் அடி சேருவதை குறிப்பிட்டுள்ளார்கள். இறைவன் நல்லவர்களுக்கு அருள்வதைப் போல தீயவர்களுக்கும் அருள்கிறான் என்ற கருத்தினை இப்படலம் வலியுறுத்துகிறது.
சுருக்கம்
தொகு
அரசன் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் ஓர் அந்தண இளைஞன் தன்னுடைய பெற்றோர்களை வதைத்து, தாசியிடம் பொருளை கொடுத்து இன்பமாக இருந்தான். பெரும் செல்வேந்தர்களாக இருந்த பெற்றோர்கள், மகனின் நடவெடிக்கையால் குடிசைக்கு வந்தார்கள்.
அவனுடைய இச்செய்கை பிடிக்காமல் தடுத்த தந்தையை இளைஞன் கொன்றான். தாயிடமிருந்து அணிகளன்களைப் பெற்று தாசியிடம் கொடுத்தான். இதனால் அவனுக்கு கடுமையான நோய் உண்டானது. தன்னுடைய தவறுக்கு வருந்தி மதுரை சொக்கநாதர், மீனாட்சியம்மை கோயிலுக்கு வந்தான்.
இளைஞனின் நோயால் அவனுடைய உடல் மெலிந்து போனது. அவனைக் கண்டு இறக்கம் கொண்ட இறைவன் வேடர் வடிவத்தில் வந்து, இறைவனை வணங்கி துன்பம் நீக்க வழிகளை கூறினார். அதன் படியே அந்த இளைஞன் புதின குளத்தில் நீராடி இறைவனை வணங்கி நற்கதி பெற்றான்.[2]