வங்கக் கடல் நீரை மந்திரம் சொல்லி குடிநீராக்குவதற்காக ஒன்னு போச்சு ( சாமியார்). அது பரவாயில்லை, அது அப்படி தான் பன்னும். விட்டால், இந்த உலகமே நான் மந்திரம் ஓதுவதால் தான் இயங்குகிறது என்று சொன்னாலும் சொல்லும்.
நாம் என்னதான் படித்திருந்தாலும், மூடநம்பிக்கைகளுக்கு ஒன்றும் பஞ்சமில்லை. பணம் குடுத்தாலோ அல்லது வாங்கினாலோ வாசலில் நின்று செய்யக்கூடாதாம். ஒன்று வாசலுக்கு உள்ளே நின்று செய்ய வேண்டும் இல்லையென்றால் வாசலுக்கு வெளியே நின்று செய்ய வேண்டும். ஆனால் வாசலில் மட்டும் நின்று செய்ய கூடாதாம். இந்த வரிசையில் ஒன்றுதான் அட்சய திருதியை. அன்று தங்கம் வாங்கினால், தங்கம் பெருகுமாம். காரணம் என்னவேண்டுமானாலும் இருக்கட்டும். எதுவாக இருந்தாலும் மூடநம்பிக்கை தான், அதாவது அன்றைக்கு தான் நகை வாங்க வேண்டும் என்பதற்கு என்ன காரணம் சொன்னாலும் அது மூடநம்பிக்கையின் வெளிப்பாடே.
மூடநம்பிக்கை எந்த ரூபத்திலும் ஏற்புடையது இல்லை. ஆனால், அத்தகைய நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளும் பெரும்பான்மையான மக்களுக்கும் கூட அதை பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பது, உள்ளபடியே வியப்பிற்குறியது. ஆம் புராண காலங்களில், இத்தகு மூடநம்பிக்கையின் பலனை எடுத்துரைக்க நிமித்திகன்(குறி பார்ப்பான்) இருந்தான்.