Thursday, April 4, 2019

அட்சய திருதியை

நாம் என்னதான் படித்திருந்தாலும், மூடநம்பிக்கைகளுக்கு ஒன்றும் பஞ்சமில்லை. பணம் குடுத்தாலோ அல்லது வாங்கினாலோ வாசலில் நின்று செய்யக்கூடாதாம். ஒன்று வாசலுக்கு உள்ளே நின்று செய்ய வேண்டும் இல்லையென்றால் வாசலுக்கு வெளியே நின்று செய்ய வேண்டும். ஆனால் வாசலில் மட்டும் நின்று செய்ய கூடாதாம். இந்த வரிசையில் ஒன்றுதான் அட்சய திருதியை. அன்று தங்கம் வாங்கினால், தங்கம் பெருகுமாம். காரணம் என்னவேண்டுமானாலும் இருக்கட்டும். எதுவாக இருந்தாலும் மூடநம்பிக்கை தான், அதாவது அன்றைக்கு தான் நகை வாங்க வேண்டும் என்பதற்கு என்ன காரணம் சொன்னாலும் அது மூடநம்பிக்கையின் வெளிப்பாடே.

அன்றைக்கு தங்கம் வாங்கினால் நல்லது என்ற ஒரு கருத்தும் பரப்பப்படுகிறது. நல்லதுதான் ஆனால், யாருக்கு? தங்கம் விற்பவனுக்கு. சரி, அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவதற்கு சொல்லப்படும் காரணம் எனக்கு தெரியாமல் கூட இருக்கட்டும். ஆனால், இந்த பதிவு காரணத்தை பற்றியது அல்ல. அட்சய திருதியை என்ற நாள் பற்றியது. சரி இப்போது அட்சய திருதியை என்றால் என்ன என்று பார்ப்போம்.

                            அட்சய திருதியை


முதலில், அட்சய என்றால் என்ன?

இது பலபேருக்கு தெரியாமல் கூட இருக்கலாம். உங்கள் நாள்காட்டியை பார்த்தால் புரியும்.  தமிழில் ஆண்டு கணக்கு என்பது மொத்தம் ஆறுபது தான். ஆங்கில வருடம் போல அறுபதுக்கு பிறகு அறுபத்து ஒன்றாம் வருடம் வராது. அறுபதுக்கு பிறகு மீண்டும் ஒன்று ஆரம்பித்துவிடும். அது அறுபதுக்குமேல் நகராது. பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி, அங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர என அட்சய வரை. அதாவது பிரபவ தொடங்கி அட்சய வரையான அறுபது ஆண்டுகள். இதில் பிரபவ என்பது முதல் ஆண்டு, அட்சய என்பது அறுபதாம் ஆண்டு. இப்பொழுது நடந்து கொண்டிருப்பது விகாரி என்ற வருடம். இது அறுபது ஆண்டு வரிசையில் முப்பத்து மூன்றாவது ஆண்டு. அட்சய வருடம் வருவதற்கு இன்னும் இருபத்து ஏழு ஆண்டுகள் உள்ளன. இதுதான் அட்சய என்பதற்கான விளக்கம்.

சரி இதில் எங்கு தமிழ் இருக்கிறது. பிரபவ முதல் அட்சய வரை வடமொழி தானே என்று கேட்கலாம். என்ன செய்வது, தமிழ் என்று சொல்லி விட்டார்கள், ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இல்லையென்றால் என்ன? நீ தமிழன் இல்லை, வந்தவெட்டி, தெழுங்கன், கன்னடன் என்று சொல்லி விடுவார்கள். அதாவது, mummy என்ற ஆங்கில வார்த்தை மம்மி என்று தமிழ் வார்த்தை ஆனது போல.

திருதியை என்றால் என்ன?

திருதியை என்றால் மூன்றாம் நாள் என்று அர்த்தம்.

சரி என்றையிலிருந்து மூன்றாம் நாள்?

பௌர்ணமி அல்லது அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள். இந்த கணக்கை இப்போது பார்க்கலாம். பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை அல்லது அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை பதினைந்து நாட்கள். இந்த பதினைந்து நாட்களில் மூன்றாவது நாள்தான் திருதியை. இங்கு நாட்கள் திதி என்று அழைக்கப்படுகிறது.
அதாவது,


1.பிரதமை---முதல் நாள்

2.துவிதியை(துவி என்றால் இரண்டு என்று அர்த்தம்)---இரண்டாம் நாள்

3.திருதியை---மூன்றாம் நாள்

4.சதுர்த்தி(உதா. விநாயகர் சதுர்த்தி)---நான்காம் நாள்

5.பஞ்சமி(உதா. பஞ்ச பாண்டவர்கள் ஐந்து)---ஐந்தாம் நாள்

6.சஷ்டி(உதா. கந்தர் சஷ்டி)---ஆறாவது நாள்

7.சப்தமி(உதா. சப்த ஸ்வரங்கள் அதாவது ஏழு ஸ்வரங்கள்)---ஏழாவது நாள்
(##சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா எனக்கோ மயக்கம்)

8.அஷ்டமி(உதா. அஷ்ட லட்சுமி அதாவது எட்டு லட்சுமிகள்)---எட்டாம் நாள்
(அஷ்டமி என்றால் ஆகாது என்பார்கள். ஆனால் பகவான் கிருஷ்ணர் பிறந்தது கோகுலாஷ்டமி. அதாவது அஷ்டமி திதியில். பகவானுக்கு மட்டும் உகந்தது போல)

9.நவமி(உதா. நவகிரகம் அதாவது ஒன்பது கோள்கள்)---ஒன்பதாம் நாள்
(நவமி திதியும் ஆகாது என்று சொல்லுவார்கள். ஆனால் பகவான் ராமர் பிறந்தது ராமநவமி. அதாவது நவமி திதியில்)

10.தஸமி(உதா. விஜயதஸமி, தஸாவதாரம் அதாவது பத்து அவதாரங்கள்)---பத்தாவது நாள்

11.ஏகாதசி(உதா. வைகுண்ட ஏகாதசி)---பதினோறாவது நள்
(##நான் சிரித்தால் தீபாவளி, நாளும் இங்கே ஏகாதசி)

12.துவாதசி---பன்னிரண்டாம் நாள்

13.திரயோதசி---பதின்மூன்றாம் நாள்

14.சதுர்தசி---பதினான்காம் நாள்

15.அமாவஸ்ய/பௌர்ணமி

இன்றைக்கு அமாவாசை என்றால் நாளைக்கு பிரதமை திதி. அடுத்த பதினைந்தாம் நாள் பௌர்ணமி. அதேபோல் இன்றைக்கு பௌர்ணமி என்றால் நாளைக்கு பிரதமை திதி. அடுத்த பதினைந்தாம் நாள் அமாவாசை.

இதுதான் திதி கணக்கு. இன்றைக்கு சதுர்த்தி திதி என்றால் அமாவாசையிலிருந்து நான்காம் நாளா அல்லது பவுர்ணமியிலிருந்து நான்காம் நாளா என்ற சந்தேகம் வரலாம். இதற்குத்தான் கிருஷ்ணபட்சம் மற்றும் சுக்கில பட்சம் என்று இரண்டு உண்டு. கிருஷ்ண பட்சம் என்றால் பவுர்ணமியில் இருந்து அமாவாசையை நோக்கி செல்வது என்று அர்த்தம். தேய்பிறை என்ற அர்த்தம். கிருஷ் என்றாலே கருப்பு என்றுதான் அர்த்தம். கிருஷ்ணன் என்றாலே கருப்பன் என்று தான் அர்த்தம். அதனால்தான் கண்ணன் அதாவது கிருஷ்ணன்  கருப்பாக இருப்பான்(##கண்ணா கருமை நிறக் கண்ணா). நம்ம ஆளுங்க கருப்பண் என்று பேர் வச்சுக்கிற வெட்கப்படுவான் ஆனால் கிருஷ்ணன் என்று பெயர் வைத்துக் கொள்வான். கிருஷ்ணன் என்றாலும் கருப்பன் என்றாலும் ஒரே அர்த்தம் தான். சுக்கில பட்சம் என்றால் அமாவாசையிலிருந்து பௌர்ணமி நோக்கி செல்வது என்று அர்த்தம். அதாவது வளர்பிறை என்று அர்த்தம். சுக்கில என்றாலே வெண்மை என்று அர்த்தம். ஆக கிருஷ்ணபட்சம் சுக்லபட்சம் என்றால் தேய்பிறை வளர்பிறை என்று அர்த்தம்.

ஆக அட்சய திருதியை என்றால் தமிழ் வருடங்களில் அறுபதாவது வருடமான அட்சய வருடத்தின் போது வருகின்ற திருதியை என்கின்ற திதியில் நிகழக்கூடிய ஒரு நாளாகும். ஆக அறுபது வருடங்களுக்கு ஒருமுறை நிகழக்கூடிய அட்சய திருதியை என்கின்ற நாள் எப்படி வருடம் வருடம் நிகழ்கின்றது. மக்களின் அறியாமையை மூலதனமாகக் கொண்டு ஒரு கட்டுக்கதையை பரப்பி அட்சயத் திருதியை அன்று தங்கம் வாங்கினால் நல்லது என்று சொல்லப்படக்கூடிய கதை இன்றளவும் தொடர்கிறது. இதற்கு காரணம் மூட நம்பிக்கை மற்றும் மக்களின் அறியாமை மட்டுமே. இந்த வருடமும் அட்சய திருதியை வரும் அடுத்த வருடமும் அட்சய திருதியை வரும் அட்சய திருதியை வந்துகொண்டே தான் இருக்கும். ஏன் வருகிறது என்றால், நகை கடைக்காரனின் வருமானத்தை பெருக்குவதற்காக வருகிறது. இது போல் இன்னும் ஏராளமான மூடநம்பிக்கைகள் மற்றும் அறியாமைகள் நம்முடைய உழைக்கும் மக்களிடையே பரவி கிடக்கின்றது அவைகளை இனிமேல் வரக்கூடிய பதிவுகளில் காண்போம்.

##பாடல் வரிகள்




No comments:

Post a Comment