பாணர்கள் இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என மூன்று வகைப்படுவர். சிறிய யாழை இசைப்பவர்கள் சிறுபாணர் எனப்படுவர்.
இந்த நூல் 269 அடிகளைக் கொண்டது. சிறிய யாழ் கொண்ட பாணரை ஆற்றுப்படுத்தி பாடியதால் இந்த நூலுக்கு சிறுபாணாற்றுப்படை என்று பெயர் வந்தது.
சேர, சோழ, பாண்டியர் மற்றுமல்லாது கடையெழு வள்ளலாகிய பாரி, காரி, ஓரி, ஆய், பேகன், அதியமான், நள்ளி போன்ற வள்ளல்களின் அருட்செயலும் இந்த நூலில் அறிய முடிகிறது. இந்த நூலைப் பாடிய புலவர் ஓய்மாணாற்று நல்லியகோடனின் கொடை சிறப்பையும், படை சிறப்பையும் விரிவாக எடுத்துக் கூறுகிறார்.
வறுமையின் கொடுமை இந்த நூலில் கீழ்க்கண்டவாறு சித்தரிக்கப்படுகிறது.
பசியால் வாடி இருக்கும் பெண் ஒருத்தி உண்ண உணவு இல்லாமல் குப்பையில் விளையக் கூடிய பயிரான வேலிக் கீரையைப் பறித்து வந்து உப்பில்லாமல் வேக வைத்து உண்பதை வெளியில் உள்ளவர்கள் பார்த்தால் சிரிப்பார்களே என்று நினைத்து வீட்டு வாசல் கதவை பூட்டி வைத்து உறவினர்களுடன் அமர்ந்து உண்டாள் என்று கூறுவது வறுமையின் சித்திரமாக உள்ளது.
இந்த நூலை எழுதிய ஆசிரியர் நத்ததனார் என்பவர். இவரது ஊர் இடைக்கழி நாட்டு நல்லூர் என்று கூறப்படுகிறது. ஓய்மானாற்றின் அரசனான நல்லியகோடனிடம் பரிசு பெற்றுக் கொண்டு வருகிறான் சிறுபாணன் ஒருவன்.
அவன் மேற்கண்டவாறு வறுமையில் இருக்கும் பாணன் ஒருவனிடம் அவன் வறுமையைப் போக்க தான் பரிசு பெற்ற வழியை கூறுவதாக இந்த நூல் அமைந்துள்ளது.
இந்த நூலில் இளவேனிற் காலத்தில் தோன்றும் இன்பக் காட்சியும் பாலை நிலத்து இயல்பும் அங்கு நடந்து வரும் விறலியின் உருவமும் சிறுபாணனின் துன்பமும் சோழநாட்டின் சிறப்பும் உறையூரின் சிறப்பும் கடையெழு வள்ளல்களின் பெருமையும், நல்லியகோடனின் மாவிலங்கை நகரத்தின் சிறப்பும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் சிறுபாணன் அவனிடம் பரிசு பெறும் முன்பு இருந்த வறுமை நிலையையும் தற்போது நிலைமையையும் தெரிவிக்கின்றான். அந்த நாட்டிற்கு செல்லும் வழியில் உள்ள நெய்தல் நிலம் அமைந்த எயிற்பட்டடினத்து சிறப்பும் வேலூருக்கு செல்லும் வழியில் முல்லை நிலத்தின் சிறப்பும், ஆமூருக்கு செல்லும் பாதையில் மருத நிலத்தின் சிறப்பும் நல்லியகோடனின் குணாதிசயங்களும் அவனைப் பாடியவர்களுக்கு அவன் விருந்தோம்பல் செய்யும் நேர்த்தியும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் நல்லியக்கோடன் வழங்கும் கொடையுடன் ஒப்பிட்டால் மூவேந்தர்கள் தரும் பரிசும் மிகவும் சிறியதாகும் என்று கூறுகிறார்.
அத்துடன் கடையெழு வள்ளல்களும் செய்த கொடையை இவன் ஒருவனே செய்கின்றான் என்று சிறப்பிக்கின்றான்.
இந்த நல்லியக்கோடன் சங்க கால சிற்றரசர்களில் ஒருவன். சிறுபாணாற்றுப்படை நூலின் தலைவன். இவன் கடையெழு வள்ளல் களுக்கும் பிற்காலத்தில் வாழ்ந்தவன்.
இவன் வாழ்ந்த காலத்தில் இவனை விட சிறந்த வள்ளல் இல்லை என்று கவிஞன் குறிப்பிடுகிறார்.
இந்த நூலில் நான்கு வகை நிலங்களும், மிகவும் சிறப்பாக வர்ணிக்கப்பட்டுள்ளது. நெய்தல் நிலத்தில் உள்ள தாழை, அன்னம், செலுத்தி, முள்ளி போன்ற பூக்களும் அவை நிறைந்த கடற்கரையும் வர்ணிக்கப்பட்டுள்ளது.
அதுவே முல்லை நிலத்தில் அவரை, பவளம், காய மலர்கள், காந்தள் மலர்கள், முல்லைக் கொடிகள் போன்றவை சூழ்ந்த வேலூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத நிலங்கள் சூழ்ந்திருக்கும் பகுதியில் காஞ்சி மரங்கள் அவற்றில் தங்கியிருக்கும் சிச்சிலி பறவைகள் வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பறவைகள் தங்கள் நகங்களால் தாமரை இலைகளை கிழிப்பதும் தாமரையில் உள்ள தேனை வண்டுகள் உண்பதும் பற்றிப் பாடும்போது மருத நிலத்தில் உள்ள ஆமூர் என்னும் ஊரில் சிறப்பு தெரிகிறது.
யானையின் நாக்குகள், மேல் நோக்கி எரியும் நெருப்பைப் போல உள்ளது. பேய் பிணத்தை தின்று சிரிக்கும்போது தோன்றும் பற்கள் என்பது வர்ணனைகளில் தனித்தன்மை உள்ளது.
மூதூரில் உள்ள நல்லியின் அரண்மனை வாயில்களில் மேரு கண் விழித்தது போலத் தோன்றும் என்றும் அதன் வழியாக சுற்றத்தினருடன் பொருநரும் அறிஞரும் அந்தணர்களும் அரண்மனைக்குள் புகலாம் என்று பாடப்பட்டுள்ளது.
இந்த மன்னனைச் சென்று பாடி பரிசு பெற புலவர்கள் வந்தார்கள் என்றால் அவர்கள் பாடி முடிவதற்குள் முன்பாகவே அவர்களுக்கு புத்தாடை கொடுத்து உடுத்தச் செய்வார்.
மயக்கம் தரக்கூடிய கள்ளை குடிக்க தருவார் சுவையுடன் சமைத்த உணவு தங்க கலத்தில் வைத்து உண்பதற்கு தருவார். எதிரிகள் நாட்டில் போர் செய்து வென்ற பொருட்களை புலவர்களுக்கு வழங்குவான்.
அத்துடன் தேரும், யானையும், குதிரையும், அணிகலன்களும், புலவர்கள் உள்ளம் மகிழும்படி வாரி வழங்குவான். அவை பெறாமல் ஒருவரையும் வெளியேற அனுமதிக்க மாட்டான்.
இந்த நூலில் வறுமை எத்தகைய கொடுமையானது என்பதை ஒரு நாயின் குடும்பத்தைச் சொல்லி ஆசிரியர் உணர வைக்கிறார்.
ஒரு நாய்க்குட்டி மற்றவர்களால் கறக்கப்படாத பாலைக் கொண்ட முலையை கொண்ட தாயிடம் உண்ண இயலாமல் வருந்துகிறது.
அடுக்கலையில் உள்ள சுவரில் இருக்கும் கரையான் தின்ற அட்டில் போய் நிற்கும். இந்த நூலின் ஆசிரியர் தொகை நூல்கள் பாடுவதில் மிக்க அறிவுடையவர் என்றும் பல இடங்களில் சுற்றிப் பார்த்தவர் என்றும் வாழ்க்கை அனுபவம் உள்ளவர் என்பதும் இதுபோன்ற பாட்டின் மூலம் புலனாகிறது.
பாட்டுடைய தலைவனை இவர் சிறப்பிக்கும் போது இவன் நல்லியல்புகளைக் கொண்டவன், சான்றோர்களும் போர் வீரர்களும் அரிவையரும் இவனைப் புகழ்ந்து கொண்டே இருப்பர் என்கிறார் மேலும், இவன் நன்றி மறவாதவன். சிற்றினம் சேராதவன். இனிய முகத்தைக் கொண்டவன். இவன் வீரத்தைக் கண்டு பகைவர்கள் அடிபணிவர்.
இவனுடைய ஆற்றல் பெண்களால் பெரிதும் விரும்பப்படும். இவனை பெண்களும் பாராட்டு கின்றனர். இந்த நூலில் கடையெழு வள்ளல்கள் அவர்களுடைய கொடைத் தன்மை, சிறப்புக்கள் போன்றவற்றை பற்றியும் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளை காண முடிகிறது. அத்துடன் சேர், சோழ, பாண்டிய நாட்டினுடைய இயற்கையும் சிறப்பும் வர்ணனைகளில் காணப்படுகிறது.

கடையெழு வள்ளல்களின் சிறப்பு
பேகன்
வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும் (84 - 87).
பேகன் வாழும் இடத்தில் பருவமழை தவறாது பெய்யும்.
அதனால் வன்மை மிகுந்த மலைப் பக்கத்துக் காட்டில் மயில்கள் சுற்றிக் கொண்டு திரியும்.
அந்த மயில் மழைக் காலத்தில் குளிரால் வாடியது. அதைக் கண்டு வருந்தி தன் போர்வையைக் கொண்டு மயிலுக்குப் போர்த்தியவன். அத்தகைய குணங்களில் வலிமையான இரக்க குணம் கொண்டவன் பேகன் என்றும், வள்ளல் ஆயர் குடியில் தோன்றிய பெருந்தகைமிக்க பேகன் மிகப்பெரிய மலைநாட்டு மன்னனாக விளங்கிய வள்ளல்.
பாரி
நறு வீ உறைக்கும் நாக நெடு வழிச்
சிறு வீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரியும் (88 - 91).
பலரும் உண்ணும்படியாக தேனை வழங்கக் கூடியது அரபுன்னை மிக்க நெடிய வழியின் கண்ணே தன்னுடைய தேரினைத் தடுத்து நின்ற முல்லைக் கொடி அதனை விரும்பியதாக் கருதி, தன்னுடைய மிகப்பெரிய தேரினை முல்லைக் கொடிக்கு அளித்தவன்.
அருவிகள் அளப்பரிந்து துள்ளும் பறம்பு மலைக்கு அரசனாக விளங்கியவன் பாரி என்னும் அந்த வள்ளல்.
காரி
வால் உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல் மொழி இரவலர்க்கு ஈந்த
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடு வேல்
கழல் தொடித் தடக் கை காரியும் (92 - 95).
மணிகளையும், தலையாட்டத்தையும் கொண்டது குதிரை. அத்தகைய குதிரையுடன் தன்னுடைய நாட்டையும், மிகவும் இரக்கம் கொண்ட வார்த்தைகளையும், கேட்போர்கள் ஆச்சர்யம் கொள்ளும்படி இரவலர்கள் கேட்டபோது கொடுத்த வேலையும், கொடியினைக் கொண்ட கையையும் கொண்டவன் காரி என்ற வள்ளல்.
ஆய்
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள்
ஆர்வ நன் மொழி ஆயும் (96 - 99).
ஒளிமிகுந்த நீலமணியினையும், நாகங்கள் கொடுத்த கலிங்கத்தையும், விருப்பத்துடன் ஆல மரத்தின் அடியிலிருந்து இறைவனுக்குக் கொடுத்தவனும், வில்லேந்திய சந்தனம் பூசப்பட்ட அழகிய தோள்களைக் கொண்டவனும் ஆர்வம் மிகுந்த மொழிகளைப் பேசக் கூடியவனுமாக விளங்கக் கூடியவன் ஆய் என்னும் வள்ளல்.
அதியமான்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும் (100 - 103).
மிகப்பெரிய மலையின் சாரலில் போய் நின்று அழகு மிகுந்த நெல்லிக் கனியின் அமுதக் தன்மையுடையது. அந்தக் கனி தனக்குக் கிடைத்த போது அதனைத்தான் உண்டால் உடலுக்கு நன்மை தரும்.
அப்படிப்பட்ட கனியைத் தான் உண்ணாமல் ஒளவைப் பாட்டிக்குக் கொடுத்தவனும், கொற்றவையின் கோபம் கொண்ட ஒளியையும், கடலைப் போல சப்தம் கொண்ட படையையும் கொண்டவன் அதியமான் என்ற வள்ளல்.
நள்ளி
நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த முனை விளங்கு தடக்கை
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு
நளி மலை நாடன் நள்ளியும் (104 - 107).
தன் மனதில் உள்ளதை மறைக்காமல் மற்றவர்களிடம் கூறக்கூடியவன். தன்னை நாடி வந்தவர்கள் மனமகிழ வேண்டும் என்று செயல்பட கூடியவன். பிறரின் இல்லறத்திற்கு தேவையானவற்றைக் குறிப்பறிந்து மற்றவர்களுக்கு வழங்கியவன்.
மழை வளமிக்க நெடிய கோடுகளையுடைய மலை காட்டையுடையவனும், போர் செய்வதில் வல்லமை மிக்கவனுமாக, போர்த் தொழிலில் சிறந்தவன் நள்ளி என்னும் வள்ளல்.
ஓரி
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்து
குறும் பொறை நல் நாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை ஓரியும் (108 - 111).
செறிவு மிக்க கொம்புகளில் நறுமணம் கமழும் பூக்கள் மிக்க அரபுன்னைகளையும், குறும் பொறைகளைக் கொண்ட நல்ல நாடுகளைக் கடத்தர்களுக்கு வழங்கியவன்.
காரி என்னும் குதிரையை உடையவன் காரி என்பவன். அவனுடன் போர் செய்தவன் ஓரி என்னும் குதிரையை உடையவன் ஓரி என்னும் வள்ளல்.

No comments:
Post a Comment