Saturday, May 4, 2019

பெயர்ச்சொல்

பொருள் விளங்கச் சொல்வது பெயர்ச்சொல் ஆகும்.

அதாவது, ஒன்றன் பெயரை உணர்த்துவது அல்லது, ஒன்றன் பெயர் விளங்கச் சொல்வது பெயர்ச்சொல் ஆகும்.

பெயர்ச்சொல்லானது, பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.

பொருட்பெயர்

ஆடு, மாடு, மனிதன், புத்தகம், பாத்திரம் போன்ற பொருட்களைக் குறிக்கின்றது.

இடப்பெயர்

அடந்தணார்கோட்டை, தமிழ்நாடு, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் போன்ற இடங்களைக் குறிக்கின்றது.

காலப்பெயர்

விநாடி, ஆண்டு, வாரம், நாள், மணி, மாதம் போன்ற காலத்தைக் குறிக்கின்றது.

சினைப்பெயர்

சினை என்றால் உறுப்பு என்று பொருள். தலை, கை, கால் போன்ற உறுப்புக்களைக் குறிக்கின்றது.

குணப்பெயர் (அ) பண்புப்பெயர்

ஒன்றன் குணம் அல்லது தன்மை அல்லது பண்பைப் பற்றி சொல்வது பண்பபுப்பெயர் எனப்படும். பச்சை, இனிப்பு, கசப்பு, வட்டம், சதுரம், நீலம் போன்ற பண்புகளைக் குறிக்கின்றது.

தொழிற் பெயர்

படித்தல், எழுதுதல், தூக்குதல், ஓடுதல், பாடுதல், நீந்துதல் போன்ற தொழில்களைக் குறிக்கின்றது.



No comments:

Post a Comment