Saturday, May 4, 2019

ஔகாரக்குறுக்கம்

ஔகாரம் (ஔ) என்பது ஒரு ஔநெடில் எழுத்து ஆகும். நெடில் எழுத்துக்கான கால அளவு இரண்டு மாத்திரைகள் ஆகும்.

ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுது மட்டுமே இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும்.
செய்யுளின் சீர்களில் வரும்போது, இரண்டு மாத்திரை அளவு ஒலிப்பதில்லை.

ஔகாரம் சீர்களில் முதல் எழுத்தாக மட்டுமே வரும். இடை மற்றும் கடையில் ஔகாரம் வராது.

இவ்வாறு, சீர்களின் முதலில் வரும் ஔகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரை அளவே ஒலிக்கும்.

இவ்வாறு, குறுகி ஒலிக்கும் ஔகாரம், ஔகாரக்குறுக்கம் எனப்படும்.

உதாரணம்

வையார் - ஒன்றரை மாத்திரைகள்

டதம் - ஒன்றரை மாத்திரைகள்

ஔடதம் என்றால் மருந்து என்று பொருள்.

மௌவல் - ஒன்றரை மாத்திரைகள்

மௌவல் என்றால் காட்டு மல்லி என்று பொருள்.

மௌயல் - ஒன்றரை மாத்திரைகள்




No comments:

Post a Comment