Saturday, May 4, 2019

ஐகாரக்குறுக்கம்

ஐகாரம் (ஐ) என்பது ஒரு நெடில் எழுத்து ஆகும். நெடில் எழுத்துக்குறிய கால அளவு இரண்டு மாத்திரைகள் ஆகும்.

ஆனால், ஐகாரத்தை பொறுத்தமட்டில், தன்னைச் சுட்டிக் கூறும்பொழுது மட்டுமே இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும்.

சீர்களின் முதல், இடை, மற்றும் கடை ஆகிய இடங்களில் வரும்போது, தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து முறையே ஒன்றரை மாத்திரை, ஒரு மாத்திரை மற்றும் ஒரு மாத்திரையாக குறைந்து ஒலிக்கும்.

சுருங்கக் கூறுமிடத்து, ஐகாரம் சீரின் இடை மற்றும் கடையில் வரும்போது ஒரு மாத்திரை அளவும், சீரின் முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவாகவும் ஒலிக்கும்.

இவ்வாறு, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிப்பது ஐகாரக்குறுக்கம் எனப்படும்.

உதாரணம்

முதல்

ங்குறுநூறு - ஒன்றரை மாத்திரைகள்

இடை

பிணைப்பு - ஒரு மாத்திரை

கடை

லை - ஒரு மாத்திரை





No comments:

Post a Comment