கண்ணகி என்ற பெயரை கேட்டவுடனேயே " மதுரையை எரித்த கண்ணகி" என்பது நினைவுக்கு வந்துவிடும். அசோகன் என்றவுடன் "அசோகர் மரம் நட்டார்" என்பது நினைவுக்கு வருவது போல. கண்ணகி சிலருக்கு "மதுரையை எரித்தவள்". சிலருக்கு "வீரத்தமிழச்சி". இன்னும் சிலருக்கு "அப்பத்தா". இது போன்று ஏராளான முகங்கள் உள்ளன. இவை எல்லாம் மற்றவர்களின் பார்வைக்கு.
ஆனால், இங்கு நாம் கண்ணகியினுள்ளே குடிகொண்டிருந்த பார்ப்பனிய முகத்தைப் பற்றி பார்ப்போம்.
ஆனால், அது கண்ணகியின் பார்ப்பனியமா? அல்லது கண்ணகியின் வழியாக தன்னுடைய பார்ப்பனியத்தை வெளிக்காட்டினாரா நம்ம புலவர் இளங்கோவடிகள் என்பது அவரவர்களின் பார்வைக்கு இருக்கட்டும். ஏனெனில் இது நம்ம இளங்கோவின் கற்பனையே. அப்படி என்னதான் அந்த ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.

அதற்குமுன் இப்பெறும் காப்பியத்தைப் பற்றி தந்தை பெரியாரின் விமர்சனத்தை பார்ப்போம். இது "பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தும் நூல்" என்றும், "விபச்சாரத்தில் ஆரம்பித்து பத்தினித் தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடியும் பொக்கிஷம்" என்றும் விமர்சித்தார். ஏன் பெரியார் அவ்வாறு விமர்சித்தார்? அதில் என்ன பெண்ணடிமைத்தனம் உள்ளது? அப்படி என்ன முட்டாள்தனம், மூடநம்பிக்கை உள்ளது? என்று பார்க்கலாம்.
சிலப்பதிகாரத்தில் கண்ணகி பத்தினியாக போற்றப்படுகிறாள். ஆம் அது மிகவும் முயன்று பெறக்கூடிய பட்டங்களில் ஒன்று. அதுவும் சாதா பத்தினி இல்லை. தர்மபத்தனி, உத்தமபத்தினி.
இவற்றிற்கெல்லாம் என்ன விளக்கம். கோவலன் மாதவியுடன் இருப்பது தெரிந்தும் அவனை போய் அழைத்து கொண்டு வரவில்லை கண்ணகி. இதுவரை இருந்தால் அது சாதா பத்தினி. ஆனால் கண்ணகி செய்தது இதற்கும் மேல். தன் கணவன் மாதவியுடன் இருப்பது தெரிந்தும் அவனை அழைத்து வராதது மட்டும் இல்லாமல், அவனுக்கு தேவைப்படும் பொருளையும் எடுத்து கொடுத்திருக்கிறார். எந்த அளவுக்கு எடுத்து கொடுத்திருக்கிறார் என்றால், பொருட்கள் அனைத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வரும் நிலைமை ஏற்படும் வரையிலும் எடுத்து கொடுத்திருக்கிறார்.
இது சாதா பத்தினி செய்ய கூடிய காரியம் இல்லை. இது தர்மபத்தினியால் மட்டுமே செய்யக்கூடிய காரியம். ஆக, பத்தினி என்றால், தன் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளான் என்பது தெரிந்தும் அவனை ஏன் என்று கேட்காமல் இருந்தால் அந்தப்பெண் பத்தினி என்று போற்றத்தக்கவர். இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், அவனுக்கு தேவைப்படும் போதெல்லாம் பணத்தை கொடுத்து " சென்றுவா கணவா அந்த பெண்ணை நோக்கி" என்று சொல்லி வழியனுப்பி வவைத்தால், அந்த பெண் தர்மபத்தினி மற்றும் உத்தமபத்தினி என்றெல்லாம் போற்றத்தக்கவர்.

கண்ணகி ஒரு சாதுவான பெண் அதனால் தான் கணவனை எதிர்த்து பேசவில்லை என்று நினைக்கலாம். ஆனால், கண்ணகி ஒன்றும் சாதுவான பெண் கிடையாது. மிகவும் துணிச்சலான பெண். எந்தளவுக்கு துணிச்சலான பெண் என்றால், நம்ம பாண்டிய மன்னனையே பார்த்து " தேரா மன்னா" என்று கேட்கும் அளவிற்கு துணிச்சலான பெண் தான். ஆனால், கணவன் இப்படி மாதவி வீட்டில் இருக்கும் போது, அவனை அடித்து இழுத்து கொண்டு வந்திருக்கலாம். ஆனால் என்ன செய்ய, அப்படி செய்தால் பத்தினி என்ற பட்டம் கிடைக்காமல் போய்விடுமே.
இதில் தெள்ளத் தெளிவாக விபச்சாரத்தை பாராட்டி இருப்பது தெரிகிறது. இதனால்தான் தந்தை பெரியார் இதனை விபச்சாரத்தை பாராட்டும் நூல் என்று கூறினார். பெண்கள் மட்டும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று இருக்க வேண்டும். ஆனால் ஆண்களுக்கு இந்த சட்டம் கிடையாது. ஒரு பெண் தனக்கு பிடித்த ஆண்மகனுடன் எல்லாம் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும். இதை நினைத்துப் பார்க்கவே சற்று அசிங்கமாகத்தான் இருக்கும்.
அப்படியானால் ஒரு ஆண் தனக்கு பிடித்த பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் போதும் அவ்வாறே அசிங்கமாக தான் இருக்க வேண்டும். இதை நாங்கள் எடுத்துச் சொன்னாள் பார்த்தீர்களா பார்த்தீர்களா ஒரு தமிழிலக்கியத்தை எப்படி எல்லாம் அவதூறு கூறுகிறார்கள் என்று பேசுவார்கள்.
நாங்கள் ஒன்றும் அவதூறு கூறவில்லை. அந்த இலக்கியத்தில் இருப்பதை எடுத்து சொல்லுகிறோம் அவ்வளவுதான்.
ஒருவேளை நாங்கள் சொல்லுவதை எதிர்ப்பவர்கள், இந்த இலக்கியத்தை பாராட்டக் கூடியவர்கள் இருப்பார்களேயானால் அவர்கள் எதனை ஆதரிக்கிறார்கள் என்பது அவரவர்களின் விருப்பத்திற்கே விட்டு விடுவோம்.
கண்ணகியின் பார்ப்பனியம் இதனோடு மட்டும் நின்று விடவில்லை இன்னும் தொடர்கின்றது. மதுரைக் காண்டத்தின் வஞ்சின மாலை காதையில்,

தனது இடமுலையை திருகி மதுரையை மும்முறை வலம் வந்தார் கண்ணகி என்று சொல்லப்படுகிறது. இது எவ்வளவு முட்டாள்தனமானது அறிவுக்கு புறம்பானது.
மேலும் இந்த நிலையில் தீக்கடவுள் தோன்றுகிறார். அவரும் கூட பார்ப்பனராக தோற்றமளிக்கிறார் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அப்படி தோன்றிய தீக்கடவுள் கண்ணகியிடம் யாரையெல்லாம் விட்டுவிட வேண்டும் என்று எண்ணுகிறாய் என்று கேட்கிறார்.
அதற்கு கண்ணகியின் பதில் மிகவும் வித்தியாசமாக உள்ளது.
"பார்ப்பனர், பசு, பத்தினிப் பெண்டிர், சான்றோர், மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டுத் தீத்தரத்தோர் பக்கம் சாய்க" என்று கண்ணகி கூறுகிறார்.
இதற்கு முன்னால் ஊர்சூழ் வரி என்னும் காதையில்,
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்?
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்?
என்று கேட்கிறார். அப்பொழுது பெண்டிரும் சான்றோரும் இருந்திருந்தால்தான் வந்திருப்பார்களே. ஆனால் யாரும் வரவில்லை. அதுதான்அங்கு பத்தினிப் பெண்டிரும் சான்றோரும் இல்லையே அப்புறம் ஏன் அவர்களை கைவிட வேண்டும். மேலும் ஏன் பார்ப்பனரை கைவிட வேண்டும் அவர்கள் மட்டும் என்ன கண்ணகிக்கு உதவியா செய்தார்கள்? அவர்களும் ஒன்றும் செய்யவில்லை அப்படி என்றால் அவர்களையும் எரிக்க சொல்ல வேண்டியதுதானே.
இது இத்துடன் நிற்கவில்லை மேலும் தொடர்கிறது. அதாவது பசுவையும் விட்டுவிட வேண்டுமாம். அது ஏன் பசுவை மட்டும் விட்டுவிடவேண்டும் எருமை மாடு என்ன செய்தது எருமை மாடும் நல்லா பால் கறக்கும். மற்ற ஆடு கோழி மற்ற விலங்குகள் எல்லாம் என்ன செய்தது? என்ன பாவம் செய்தது? பசுமாட்டை மட்டும் காப்பாற்ற வேண்டுமாம்? பார்ப்பனர்களை முக்கியமாக காப்பாற்ற வேண்டுமாம்?
இதில் பார்ப்பனியம் வெளிப்படையாக தெரிகிறது. இது பரவாயில்லை, "தீ"க்கு எப்படி தெரியும் நல்லவர் கெட்டவர் என்று. ஒருமுறை பற்ற வைத்து விட்டால் பற்றி எரிய கூடிய பொருள்கள் அனைத்திலும் தீ பரவி எரிந்தே தீரும். தீ எரிந்து கொண்டிருக்கும் போது இவரை விட்டுவிட்டு இவரை மட்டும் கொடுத்து என்று சொன்னால் அது கேட்கவா செய்யும். இது அவ்வளவு அறிவுக்குப் பொருந்தாதது. ஆகவே சிலப்பதிகாரம் என்பது தந்தை பெரியாரின் கூற்றுப்படி விபச்சாரத்தில் தொடங்கி பத்தினி தனத்தில் வளர்ந்து மூடத்தனத்தில் முடியும் ஒரு பொக்கிஷமாகும்.
அடேய் வந்தேறி நாய்களா, தமிழ் இனத்தில் அந்தணர்கள் இல்லையா (பார்ப்பனர்கள்), தமிழ் குடி அம்பட்டர்கள்,ஆசாரிகள், பண்டாரங்கள்,அவர்களை தான் கண்ணகி கூறி இருக்கிறார், ஆரிய வந்தேரிகளை இல்லை, உடனே நீங்கள் தமிழ் இனத்தின் ஒற்றுமையை அழிக்க வந்த தேசி (ஈவேரா) மகன்களே சொம்பு தூக்கி கொண்டு வராதீர்கள்...
ReplyDelete