இட ஒதுக்கீட்டை பற்றி தவறான கருத்துகள் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் எவர் இட ஒதுக்கீட்டின் மூலமாக படித்தாரோ, எவர் இட ஒதுக்கீட்டின் மூலமாக சமுதாயத்தில் நல்ல அந்தஸ்த்தில் இருக்கிறாரோ, எவர் ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வருகின்றேரோ அவரே அதைப் பற்றி தவறாக பேசக் கூடிய சூழ்நிலை உள்ளது. எனில் இட ஒதுக்கீடு என்றால் என்ன? வாருங்கள் இட ஒதுக்கீடு என்றால் என்ன அதை குறிப்பிட்ட சிலர் மட்டும் எதிர்ப்பதற்கு காரணம் என்ன போன்றவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
இட ஒதுக்கீடு என்பது பல்வேறு துறைகளில் உதாரணமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் வாய்ப்பு என்ற ஒன்று இருக்கின்றதே தெரியாத, சமுதாயத்தின் பெரும்பான்மையான மக்களின் உரிமைக்கான உத்திரவாதம்.மேலும் இந்த இடத்தில் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தியே ஆக வேண்டும் இட ஒதுக்கீடு என்பது அவர்களுக்கான சலுகை கிடையாது அது அவர்களின் உரிமை. சலுகை என்பது சமுதாயத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருக்க கூடிய மக்களுக்கு அரசாங்கத்தின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் வழங்கப்படும் அந்த உதவித்தொகையை சலுகை எனப்படும். அப்படி என்றால் இட ஒதுக்கீடு என்பது சலுகை இல்லையா. இல்லவே இல்லை. அது உரிமை. சரி அந்த உரிமை எப்படி சமுதாயத்தின் பெரும்பான்மையான மக்களுக்கு மறுக்கப்பட்டது.
இந்தியாவைப் பொருத்தவரை வரலாறு தொடங்கிய காலத்திலிருந்தே படிக்கட்டு முறையிலான சாதிய அமைப்பு இருந்து வந்துள்ளது. இதனை அண்ணல் அம்பேத்கர் "graded inequality' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார். அது என்ன graded inequality. Inequality என்றாலே சமமின்மை என்றுதான் அர்த்தம். இதில் எங்கிருந்து வந்தது graded inequality?
நீ ஏழை நான் பணக்காரன் அதனால் நாம் இருவரும் சமம் இல்லை என்று சொன்னால் அது புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஏழை திருடினாலும் பணக்காரன் திருடினாலும் ஒரே தண்டனைதான் (அப்படித்தான் எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால், சட்டத்தில் all are equal before law என்று தான் சொல்லப்படுகிறது). ஆனால், graded inequality என்றால் நீ தாழ்ந்த சாதி நான் மேல் சாதி என்று சொல்வது. ஒரே குற்றத்திற்கு ஒருவனுக்கு ஒரு தண்டனை இன்னொருவனக்கு வேறு ஒரு தண்டனை என்று சொல்லுவது.
ஒரு பார்ப்பனர் குற்றம் புரிந்தால் அவருக்கு அதிகபட்சமாக முடியை வழித்து மொட்டை அடிக்க வேண்டும் அதுதான் தண்டனை. அதே குற்றத்தை ஒரு சூத்திரன் செய்தால் அவனுடைய தலையை வெட்டி விட வேண்டும். அதாவது பார்ப்பனருக்கு சிகை சேதமும் சூத்திரனுக்கு சிரச்சேதமும் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என்று மனுதர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தான் தந்தை பெரியார் " நம்ம உயிரும் பாப்பான் மயிரும் சமம்" என்று சொன்னார்.
இப்படியான ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த சமுதாயத்தில் படிப்பு என்றால் அது பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரித்தானது. வெள்ளைக்காரன் வந்த பிறகுதான் கல்வி என்றால் நாம் புத்தகத்தை அதிலுள்ள அறிவை படித்து தெரிந்து கொள்கிறோம். அந்தக் காலத்தில் கல்வி என்றால் அது வேதம் தான். சரி அப்படிப்பட்ட வேதத்தை எல்லோரும் படிக்கலாமா என்றால் கூடவே கூடாது அதை சமுதாயத்தின் உயர்ந்த சாதியினர் என்று கருதப்படக்கூடிய பார்ப்பனர்கள் மட்டும் தான் படிக்க வேண்டும். சரி அதை மீறி நாம் வேதத்தை படித்தால் என்ன ஆகும்.
வேறு ஒன்றுமல்ல வேதத்தை சொன்னவன் நாக்கை அறுக்க வேண்டும், வேதத்தை கேட்கின்ற அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றெல்லாம் மனுதர்மத்தில் சொல்லப்பட்டுள்ளது.
சரி சமுதாயத்தில் மிகவும் சிறுபான்மையினராக உள்ள பார்ப்பனர்களால் சமுதாயத்தில் மிகவும் பெரும்பான்மையினராக உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை எப்படி இவ்வாறு நடத்த முடியும்?
முடியவே முடியாது.
அதற்குத்தான் அவர்கள் தங்கள் கைவசம் ஷத்திரியர்கள் என்று அழைக்கப்பட்ட மன்னர்களை வைத்திருந்தார்கள். மன்னர்கள் மூலமே அவர்கள் தங்களுக்குத் தேவையான காரியங்களை நிறைவேற்றிக் கொண்டார்கள்.
அதை இன்றைய காலத்துடன் ஒப்பிடும்பிவோமேயானால், இன்றைக்கு நாங்கள் சத்திரியர்கள் என்று சொல்லிக்கொண்டு பல சாதியினரும் நம்மிடையே உள்ளார்கள். பார்ப்பனியத்தை பற்றி நாம் பேசினால் அவர்கள் நம்மிடமே கோபப்படுவார்கள். அவர்கள் வேண்டுமானால் தங்களை சத்திரியர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம் ஆனால் பார்ப்பனர்கள் ஒருபோதும் அதனை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களைப் பொருத்தவரை இன்றைக்கு இருக்கக்கூடியது இரண்டே இரண்டு வர்ணம் தான் ஒன்று பிராமணர் மற்றொன்று சூத்திரர். இந்த வைசியர் சத்திரியர் போன்றவர்களெல்லாம் பார்ப்பனர்களை பொறுத்தவரை கிடையாது. நாம் வேண்டுமானால் நானும் ஜெயிலுக்கு போறேன் நானும் ஜெயிலுக்கு போறேன் அதனால் நானும் ரவுடிதான் என்று சொல்லிக் கொள்ளலாம். அவர்களைக் கேட்டால் அதெல்லாம் பரசுராமர் உலகத்தில் உள்ள எல்லா சத்திரியர்களையும் பூண்டோடு அழித்து விட்டார் என்று சொல்லிவிடுவார்கள்.
அந்தக் காலத்திலேயே சூத்திரர்களை தவிர மற்ற பார்ப்பனர், சத்திரியர், வைசியர் ஆகிய மூவரும் பூணூல் அணிந்திருந்தனர். ஆனால் அதிலேயும் பாகுபாடு. அதாவது பார்ப்பனர்கள் பஞ்சுநூலாலும், ஷத்திரியர்கள் சணலினால் (jute) ஆளான பூணூலும் வைசியர்கள் வெள்ளாட்டு மயிரினால் ஆன பூணூல் தரித்துக் கொள்ள வேண்டும் என்று மனுதர்மம் கூறுகிறது. இவ்வாறாக ஒவ்வொரு விஷயத்திற்கும் பாகுபாடு பார்க்கப்பட்டது. பார்ப்பனர்கள் எந்த ஒரு வேலையும் செய்யாமல் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பிலேயே வாழ்ந்தார்கள். இப்படி ஆதிகாலத்திலிருந்தே ஒடுக்கப்பட்டு வந்த மக்கள் இன்றைக்குத்தான் ஒரு எழுபது எண்பது ஆண்டுகாலமாக அதாவது தந்தை பெரியாரின் காலத்திலிருந்துதான் (தமிழகத்தை பொறுத்தமட்டில். இந்திய அளவில் அண்ணல் அம்பேத்கரின் பங்கு ஈடு இணையற்றது) ஓரளவுக்கு அந்த மக்கள் நல்ல நிலைமைக்கு வந்துள்ளனர். ஆனால் இந்த வெறும் எழுபது எண்பது ஆண்டுகால வளர்ச்சி கூட பார்ப்பனர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் இட ஒதுக்கீட்டை பற்றி தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். அதற்கு இட ஒதுக்கீட்டின் மூலம் பலன் அடைந்தவர்கள் கூட பலியாகின்றனர்.

அது இருக்கட்டும் சாதியை ஒழிப்பவர்கள் ஏன் சாதியின் பெயரில் இட ஒதுக்கீடு கேட்கிறார்கள் என்று கேட்கலாம்? ஒருவனுக்கு எந்தத் தகுதியின் அடிப்படையில் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதோ அந்த தகுதியின் அடிப்படையிலேயே அவனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். உதாரணமாக காவல்துறைப் பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது உடல் தகுதியினால் வாய்ப்பை இழந்தார்கள் என்றால் அவர்கள் உடற்பயிற்சி செய்து நல்ல உடல் வாகை வைத்துக்கொண்டு, மீண்டும் முயற்சிக்க வேண்டும். அதே போல் ஒருவன் பூசாரியாக வேண்டுமென்றால் மந்திரம் ஓதுவது ஒன்றுதான் தகுதியாக இருக்க வேண்டுமே தவிர அவன் சாதி அல்ல.
ஏன் பூனூல் அணியாதவன் மந்திரம் ஓதினால்தான் என்ன? சாமி ஏற்றுக்கொள்ளாதா? அதனால் தான் பெரியார் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவர பாடுபட்டார். ஆகவே, ஒருவனுக்கு எந்த ஜாதியின் பெயரால் அவனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதோ அதே ஜாதியின் பெயரால் அவனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக மட்டும் தான் இட ஒதுக்கீடே தவிர இவர்கள் சொல்வது போல் மக்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல.
சரி இந்த ஒதுக்கீடு இன்னும் எவ்வளவு காலம் வரை இருக்கும்? நாம் ஒரு சாலையில் சென்று கொண்டிருக்கிறோம் அந்த சாலையில் புதிதாக பாலம் கட்டுவதற்காக மாற்று வழி என்று ஒன்றை நம்மை பயன்படுத்த சொல்லுகிறார்கள். மாற்றுவழி இன்னும் எவ்வளவு காலம் இருக்கும் என்றால் விடை மிகவும் எளியது. அந்தப் பாலம் கட்டி முடிக்கப்படும் வரை இந்த மாற்று வழி பயன்படுத்தப்படும். இதுதான் இட ஒதுக்கீட்டுக்கும் பதில். இன்னும் சில அறிவு ஜீவிகள் சாதிச் சான்றிதழை ஒழித்துவிட்டால் சாதியை ஒழித்து விட முடியும் என்று கூச்சல் போடுகின்றனர். இது எப்படி இருக்கிறது என்றால் ஒருவனுடைய வருமானச் சான்றிதழை ஒழித்துவிட்டால் அவன் பணக்காரன் ஆகிவிடுவான் என்று சொல்வது போல் இருக்கிறது. அதனால் ஜாதிச் சான்றிதழ் என்பது மறுக்கப்பட்ட உரிமையை கொடுப்பதற்காக மட்டும் தானே ஒழிய அதனை எடுத்துக்கொண்டு நெற்றியிலோ அல்லது முதுகிலோ ஒட்டிக் கொண்டு செல்வதற்காக அல்ல. இவர்கள் சொல்லுவதை போல் சாதி சான்றிதழை ஒழித்துவிட்டால் சாதியை ஒழித்து விட முடியாது. சாதி என்பது வெளித் தோற்றத்தில் இல்லை. அது மனிதனுடைய மூளையில் கட்டுண்டு கிடக்கின்றது.
சாதி சான்றிதழை ஒழித்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என்று சொல்லும் அறிவு ஜீவிகள், சாதி முதலில் தோன்றியதா? சாதி சான்றிதழ் முதலில் தோன்றியதா? என்று கேட்டால் என்ன சொல்லுவார்கள்? சாதி சான்றிதழ் தான் முதலில் தோன்றியது என்றா சொல்லுவார்கள்?. இல்லை. இல்லை. சாதி தான் முதலில் தோன்றியது என்றுதான் சொல்லுவார்கள். மேலும், சாதி என்பது சாதி சான்றிதழிலோ அல்லது இட ஒதுக்கீட்டிலோ தானா உயிர் வாழ்கிறது. இல்லை. அது மக்களின் வாழ்வியலில் உயிர் வாழ்கிறது.
புரியும்படி சொன்னால், ஒவ்வொரு சாதிக்கும் ஒரு இடுகாடு (மயானம்) உள்ளதே (கிராமங்களில், அறிவியல் வளர்ச்சியால் நகரங்களில் மின்சார மயானம் வந்துவிட்டது. இதனால்தான், பெரியார் கிராமம், நகரம் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது என்று சொன்னார்), அதில் உயிர் வாழ்கிறது. ஒவ்வொரு சாதிக்காரரும் ஒவ்வொரு விதமான தாலி கட்டிக் கொள்கிறார்களே அதில் உயிர் வாழ்கிறது. மாட்டுக்கறி உணவில் சாதி உயிர் வாழ்கிறது, இது எல்லாவற்றிற்கும் மேலாக, தன் மகளோ, மகனோ வேற்று சாதி பையனையோ, பெண்ணையோ காதலித்து விட்டால், அதை ஏற்காமல் நிராகரிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் திருமணம் செய்து கொண்டால், கௌரவக் கொலை செய்யும் வன்முறையில் சாதி உயிர் வாழ்கிறது. இதை யாராவது மறுக்கமுடியுமா? நிலைமை இப்படி இருக்க, இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால், சாதியை ஒழித்துவிடலாம் என்று எந்த அடிப்படையில் சொல்லுகின்றனர். இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால், எல்லா சாதிக்காரர்களும் ஒரே இடுகாட்டில் பிணத்தை புதைப்பார்களா? இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால், எல்லா சாதிக்காரர்களும் ஒரே மாதிரியான தாலி கட்டிக் கொள்வார்களா? இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால், ஒரு சாதி இந்து ஒரு தலித்துக்கு பெண் கொடுத்து விடுவாரா? மீறி அவர்கள் திருமணம் செய்து கொண்டால், கொலை செய்ய குறைந்த பட்சம் முயற்சியாவது செய்யாமல் இருப்பாரா? ஆகவே, சாதி என்பது, மக்களின் எண்ணத்தில் உயிர் வாழ்கிறது, வாழ்வியலில் உயிர் வாழ்கிறது.
மேலும் இவர்கள் சம நீதியையும் சமூக நீதியையும் குழப்பிக் கொள்கிறார்கள்.

சமூகநீதி |
சமநீதி என்பது ஒரு பள்ளத்தையும் ஒரு சமமான தளத்தையும், சமமாக்க வேண்டுமென்று, இரண்டிற்கும் ஒரு ஒரு கூடை மண்ணை அள்ளிப் போடுவதற்கு சமம். இதுதானே சமநீதி. பள்ளத்திற்கு எப்படி ஒரு கூடை மண்ணோ அதேபோல சம தளத்திற்கும் ஒரு கூடை மண் தான் என்று தந்திரமாக சொல்லக்கூடும். ஆனால் அப்படி செய்தால் இரண்டும் சமமாக வாய்ப்பே இல்லை. ஒன்று சமதளத்தில் மண்ணை கொட்டுவதை நிறுத்தி விட்டு பள்ளத்தில் கொட்டவேண்டும். இல்லையென்றால் சமதளத்தில் ஒரு கூடை மண்ணை போடும்போது பள்ளத்தில் ஐந்து கூடை மண்ணை அள்ளிக் கொட்ட வேண்டும். இதற்குப் பெயர் சமூக நீதி.
No comments:
Post a Comment