இந்த உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் இரண்டு வகையான உணவுப் பழக்க வழக்கங்கள் உள்ளது. அவை,
1. புழால் (Non-veg), நம்ம பாஷையில் சொல்வதானால் அசைவம்.
2. மரக்கறி (Veg), நம்ம பாஷையில் சொல்வதானால் சைவம்.
புழால் உணவைப் பொறுத்தவரை, மாட்டுக்கறியே பிரதானமான உணவாகவும் உள்ளது.
மேலும், புழால் உணவு உண்பவர்களே உலகில் அதிகமாக இருப்பதாக ஏதோ ஒரு புள்ளி விபரத்தில் படித்ததாக நினைவு.
அது இருக்கட்டும் இந்திய ஒன்றியத்தை பொறுத்தவரை என்ன நிலை. இங்கும் புழால் உண்பவர்களே அதிகம். பொறுத்திடுக, அதிகம்தான் ஆனால், புழால் உணவு வகைகளில் வேறு எதற்கும் இல்லாத மகிமை மாட்டுக்கறிக்கு உண்டு.
ஆம், இங்கே மாட்டுக்கறியில் சாதி உள்ளது, மதம் உள்ளது இவை இரண்டையும் ஒட்டிப் பிறக்கின்ற அரசியல் உள்ளது.
அப்படி என்ன சாதி, மதத்தை கண்டாய்? உனக்கு பிடித்தால், திண்ணு தொல இல்லாவிட்டால் திண்ணாமல் இருந்து தொல. அத விட்டுட்டு சும்மா ஏதேதோ பேசிக்கிட்டு என்று சிலர் திட்டக்( திட்டுதல், வைதல், ஏசுதல்) கூடும்.
அப்படி திட்டுபவர்கள்கூட பின்னால் நான் சொல்லும் கருத்தை ஏற்றுக்கொள்ளவும் கூடும்.ஆனால், ஏற்கவேண்டும் என்கிற அவசியமில்லை.
சரி இந்தியாவில் உள்ள உணவுப் பழக்க வழக்கங்களை சற்றே விரிவாக பார்க்கலாம்.
நான், ஏற்கனவே "இந்த உலகில் இரண்டு வகையான உணவுப் பழக்க வழக்கங்கள் உள்ளது" என்று சொல்லியிருக்கிறேன். அப்படி தான் இருக்க முடியும். ஒன்று காய்கறி வகைகள் சாப்பிட வேண்டும் இல்லையென்றால் புழால் அதாவது, சிக்கன் (கோழி), மட்டன்(ஆடு), பீஃப்(மாடு) போன்ற என்னற்ற கறி வகைகள் சாப்பிட வேண்டும்.
இந்த நிலை இந்தியாவில் இல்லை. இங்கு உணவுப்பழக்கம் மூன்று வகையாக உள்ளது.
1. மரக்கறி (vegetarian) அதாவது சைவ உணவு.
2. புழால் ( Non-vegetarian) அதாவது அசைவ உணவு- மாட்டுக்கறி தவிர்த்து (excluding beef).
3. புழால் (Non-vegetarian) அதாவது அசைவ உணவு- மாட்டுக்கறி உட்பட (including beef).
இவ்வாறாக உலக இயல்புக்கு மாறாக இந்தியாவில் மூன்று வகையான உணவுப் பழக்க வழக்கங்கள் உள்ளது.
என்ன பிதற்றுகிறாய்?
ஒருவருக்கு மற்ற கறிகள் பிடித்து, கோழிக்கறி பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக,
1. புழால் (Non-vegetarian) அதாவது அசைவ உணவு- கோழிக்கறி தவிர்த்து (excluding chicken). என்று ஒரு பிரிவை மறுபடியும் ஏற்படுத்துவாயா? என்றும்கூட கேட்கலாம்.
மோற்சொன்ன மூன்று வகையான உணவுகளையும் உண்பவர்கள் யார் என்று தெரிந்தால், இந்த அரசியலை புரிந்து கொள்ளலாம்.
1. மரக்கறி;
காய்கறி உணவு.
உண்பவர்கள்: பார்ப்பனர்கள் & வகையராக்கள் ( என்று நம்பப் படுகிறது).
அவர்களைத் தவிர மற்றவர்கள் அணைவரும் புழால் உணவு தான் உண்கிறார்களா?
இல்லவே இல்லை. அவர்களைத் தவிர ஏராளமான பேர் மரக்கறி உண்பதுண்டு. ஆனால், அவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் புழால் உண்டு, பிறகு ஒவ்வாமையின் காரணமாக கைவிட்டவர்களாக இருக்கலாம் அல்லது ஜீவகாருண்ய சீலர்களாக இருக்கலாம். அதனால் அவர்கள் புழால் உண்ணாமல் இருக்கலாம்.
ஏனப்பா! மேற்சொன்ன இரண்டு மட்டும் தான் வகைகளா? எங்களுக்கு பிடிக்கவில்லை, அதனால் நாங்கள் உண்ணவில்லை. இப்படியும் ஒரு வகை இருக்கிறதே உனக்குத் தெரியாதா?
ஆமாம், பிறந்ததிலிருந்தே பிடிக்காமல் போய்விடும்.
நமக்கு ஒரு விசயம் பிடிக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? அதனை நாம் எப்போதாவது செய்திருப்போம் அல்லது அனுபவித்திருப்போம். அதன் விளைவாக, அதன் சுவை பிடிக்கவில்லை, அதன் மணம் பிடிக்கவில்லை இன்னும் ஏராளான காரணங்கள் சொல்லலாம்.
ஆனால், ஒரு விசயத்தைச் செய்யாமலோ அல்லது அனுபவிக்காமலோ அது எனக்கு பிடிக்காது என்று சொன்னால் அது கொள்கை ரீதியான முடிவே தவிர வேறொன்றாக இருக்க வாய்ப்பில்லை.
இங்கே இதுதான் முக்கியம் இது பார்ப்பன வகையறாக்களின் கொள்கை ரீதியான முடிவு. நாங்கள் உயிரினங்கள் வதைக்கப்படுவதை எதிர்கிறோம் என்ற காரணம் கூட சொல்லலாம், ஜீவகாருண்ய சீலர்கள் போல.
எப்படியோ, அவர்கள் புழால் உண்பதில்லை என்பதற்கு காரணம் கொள்கையே தவிர பிடிக்கவில்லை என்பதல்ல.
2. புழால்;
ஆடு, கோழி, கொக்கு, குருவி, காடை, கவுதாரி, பன்றி இன்னும் பல மாட்டுக்கறி தவிர்த்து.
உண்பவர்கள்: இடைநிலைச் சாதிகள்(பிற்ப்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்) சாதிகள் அணைத்தும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் தவிர்த்து. நம்ம பாஷையில் SC/ST மக்கள் தவிர்த்து.
இன்னும் சொல்லப் போனால், இன்றைக்கு நாங்களெல்லாம் ஆண்ட சாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் மக்கள்.
சரி, இவர்களில் எவரும் மரக்கறி உணவு மட்டும் உண்பவர்கள் இல்லையா?
இருக்கலாம், அவர்களுக்கு மேற்சொன்ன விதிகள் பொருந்தும்.
புழால் பிடிக்கவில்லையெனில் ஏற்கனவே முயற்ச்சித்திருக்க வேண்டும். முயற்ச்சிதிருக்கவில்லையெனில் கொள்கை ரீதியான முடிவே.
மேலும், இவர்களில் எவரும் மாட்டுக்கறி உண்பதில்லையா?
உண்பார்கள், வீட்டில் உள்ளவர்களுக்கத் தெரியாமல்.
வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரிந்தோ அல்லது வீட்டோட அணைவருமோ உண்பதில்லையா?
இருக்கலாம் ஆனால், விதிவிலக்குகள் எப்போதும் விதி ஆகாது.
சரி நாம் இந்த இரண்டாம் தலைப்பிற்கான வகையறாக்களை பார்ப்போம்.
இவர்கள் மாட்டுக்கறியைத் தவிர மற்ற அணைத்து கறி வகைகளையும் சகட்டு மேனிக்கு திண்பார்கள். ஏன் என்று கேட்டால், முன்முயற்சி ஏதும் செய்யாமலேயே பிடிக்கவில்லை என்று சொல்லுவார்கள். சிலர் உண்மையை ஒப்புக் கொள்வார்கள். அது எங்களுக்கு தெய்வம் போன்றது என்று.
இதுதான் உண்மையான காரணமும் கூட. அது என்ன மாடு மட்டும் அதிலேயும் குறிப்பாக பசு மாடு மட்டும். இங்குதான் சாதி வருகிறது. பார்பனியம் வருகிறது.
எப்படி பார்ப்பனியம் வருகிறது?
இந்த வகையறாக்கள் எல்லாம் யார் என்று பார்ப்போமேயானால்,
தன்னுடைய வீட்டில் நடக்கும் அணைத்து நல்ல காரியங்களுக்கும் பார்ப்பனரிடம் நல்ல நேரம் கேட்டுவிட்டு, பிறகு அவர்களின் தலைமையிலோ அல்லது முன்னிலையிலோ எப்படியோ, ஆனால் அவர்கள் இல்லாமல் நடக்கவே நடக்காது.
உதாரணமாக, குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் எழுதுவது, பெயர் வைப்பது, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகு விழா, திருமண விழா இன்னும் விடுபட்ட அணைத்திற்கும் பார்ப்பனரே கதாநாயகனாக இருப்பார்.
மேலும் அடிக்கடி எதாவது புது வதந்திகளை பரப்புவதுண்டு.
நானறிந்த உதாரணம், ஒருமுறை அணைத்து பெண்களும் தங்களுடைய நாத்தனார்(கணவனின் சகோதரிகள்) களுக்கு மஞ்சள் புடவை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று சொல்லப் பட்டது. அது எங்கிருந்து வந்தது? யார் சொன்னது? என்ற எதும் தெரியாது. அடுத்த வெள்ளிக்கிழமை ஊருல உள்ள எல்லாப் பெண்களும் (என் அம்மா உட்பட) மஞ்சள் புடவையுடன் திரிந்தார்கள். யார் சொன்னது? என்றெல்லாம் தெரியாது. யார் சொன்னால் என்ன? மஞ்சள் என்றாலே மங்களகரம் தானே, அதனால் நல்லதுக்காகதான் இருக்கும் என்ற எண்ணம். இதுதான் இரண்டாம் வகையறா.
3. புழால்;
மாட்டுக்கறி உட்பட அனைத்தும்.
குறிப்பாக சொல்வதானால், மாட்டுக்கறிதான் பிரதான உணவு.
உண்பவர்கள்: தாழ்த்தப்பட்ட மக்கள்.இவர்கள் யாரென்று பார்த்தால், இவர்களே இந்த மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள். அதாவது, மேற்ச்சொன்ன எந்தவிதமான பார்ப்பனிய கலப்பும் இங்கே இருக்காது அல்லது பார்ப்பனிய கலப்பினை ஏற்றுக் கொள்வதில்லை.
இவர்களிடம் பார்ப்பனியம் இல்லையா?
எனக்கு தெரிந்து இல்லை. ஒருவேளை எங்கேனும் இருக்குமேயானால், அதற்கும் அவர்கள் பொறுப்போ அல்லது காரணமோ அல்ல. இந்த மண்ணில் சாதி விதையை தூவி விட்ட பார்ப்பனரும், சாதியை வளர்த்தெடுத்த வளர்த்துக் கொண்டிருக்கின்ற இடைநிலைச் சாதி மக்களுமே காரணம்.
மேலும் தாழ்த்தப்பட்ட மக்களை கீழத்தெரு என்று கிராமத்திலும், காலனித்தெரு என்று டவுன்களிலும், சேரி என்று சென்னை போன்ற சிட்டிகளிலும் அழைக்கும் நிலையை எவரெல்லாம் உருவாக்கினாரகளோ அவர்கள் அணைவருமே காரணம்.
இவ்வாறாக மூன்று விதமான உணவு முறைகள் இந்திய மக்களிடையே உள்ளது.
மாட்டுக்கறியைப் பொறுத்தமட்டில், தமிழ்நாடு பரவாயில்லை, இங்கு மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால், வடநாட்டில் அதுதான் முக்கியமான அரசியல். அங்கு மாட்டுக்கறி வைந்திருந்தார் என்று சொல்லி அக்லக் எனபவர் கொலையே செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் மாட்டுக்கறி ஒரு உக்கிரமான அரசியல்.
No comments:
Post a Comment