Tuesday, April 30, 2019

வங்கக் கடலை குடிநீராக்க முயற்சி

வங்கக் கடல் நீரை மந்திரம் சொல்லி குடிநீராக்குவதற்காக ஒன்னு போச்சு ( சாமியார்). அது பரவாயில்லை, அது அப்படி தான் பன்னும். விட்டால், இந்த உலகமே நான் மந்திரம் ஓதுவதால் தான் இயங்குகிறது என்று சொன்னாலும் சொல்லும்.

ஆனால், பிரச்சினை என்னவெனில், அதன் பின்னால் பத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் சென்றுள்ளனர். அதுதான் வருத்தமளிக்கிறது.

அறியாமை மற்றும் மூடநம்பிக்கையே மதவாதிகளின் அல்லது மதங்களின் முதலீடு அல்லது மூலதனம்.

மக்கள் அது பின்னால் சென்றது கூட பரவாயில்லை. ஒரு ஆர்வத்தின் காரணமாகவோ அல்லது குடிநீர் பற்றாக்குறையின் காரணமாகவோ கூட சென்றிருக்கலாம்.

ஆனால், அது மந்திரம் சொல்லியும் குடிநீராக மாறவில்லை (எப்படி மாறும்?). அதன் பின்னர், தொலைக்காட்சிக்கு அது பேட்டி குடுத்தது. அப்போதாவது, ஏன் இந்த பொழப்பு பொழக்கிற னு கேள்வி கேட்டு அந்த மக்கள், நல்ல பாடம் புகட்டியிருக்காலாம்.

அதுவும் நடக்கவில்லை. அப்பொழுதும் அந்த மக்கள் அப்படியே, அது பேட்டி கொடுப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்றனர்.

கல்வி (அறிவு) க்கு கரையில்லை
அறியாமைக்கு எல்லையில்லை.

ஒருசிலதுகள் அப்படி செய்ததற்கு, மதவாதிகள் அணைவரையும் பழிப்பதா? என்று கேட்கலாம்.

அப்படியானால், குறைந்தபட்சம் நாங்களெல்லாம் உன்னதமான மதவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களாவது. அதை கண்டித்திருக்கலாமே!

அறியாமையும் மூடத்தனமும் கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும்.


No comments:

Post a Comment