Thursday, May 2, 2019

பலமான மோ(ச)டி அரசு

இந்திய துணைக்கண்டத்தின் பிரதமரான திரு.நரேந்திர மோடி அவர்கள் 1.5.2019 அன்று மதியம் 3 மணி அளவில், ஒரு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது சொல்லுகின்றார்,

"தீவிரவாதிகள் பலவீனமான அரசை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று.

அதன் அர்த்தம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைத்தால் அது பலவீனமான ஆட்சியாக இருக்கும். அதனால், தீவிரவாதிகள் எளிதாக தாக்குதல் நடத்துவார்கள்.

ஆனால், நம்முடைய அரசு பலமான அரசாகும். அதனால் நமது கட்சி (பா.ஜ.க) க்கு வாக்களியுங்கள், என்பதுதான் அதன் அர்த்தம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த பிரச்சாரத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்புதான் நக்சலைட் தாக்குதலால் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதில் முரண்பாடு என்னவெனில், 1 மணி நேரத்திற்கு முன்பும் அவர்தான் பிரதமர். அதுவும் பலமான பிரதமர். அவருடைய பலமான அரசுதான் ஆட்சியில் இருந்தது. பேசிக் கொண்டிருந்த அந்த நேரத்திலும் அவர்தான் பிரதமர். அவருடைய பலமான அரசுதான் ஆட்சியில் இருந்தது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவையே உலுக்கிய, புல்வாமா தாக்குதல் நடந்த போதும் அவர்தான் பிரதமர். அவருடைய பலமான அரசுதான் ஆட்சியில் இருந்தது.

அண்ட புழுகன், ஆகாச புழுகன் கதை சொல்லுவார்கள்.

முதலில் நீ சொல்லு என்று அணட புழுகன் சொல்லுவானாம்.

அதற்கு ஆகாச புழுகன்: நம்ம ஊருல இருந்துகிட்டு, எனக்கு இமயமலையில மேயிற(மேய்ந்து கொண்டிருக்கின்ற) எறும்புகள் தெரியுதுனு சொன்னானாம்.

அதற்கு அண்ட புழுகன்: அட போயா, எனக்கு அந்த எறும்புகளுக்கு பக்கத்துல மேயிற, அதனுடைய குட்டி எறும்புகளெல்லாம் தெரியுதுயா னு. சொன்னானாம்.



No comments:

Post a Comment