Friday, May 3, 2019

மழை வேண்டி வருண யாகம்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர்  பேராசிரியர் அய்யா சுப.வீரபாண்டியன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், 

தமிழ்நாட்டில்யாகம் வளர்த்தால் ஒடிசாவில் புயல் அடிக்கிறது. மிகவும் வலிமையான யாகம் போலிருக்கிறது என்று கேலியாக எழுதியிருந்தார்.




அது ஒன்றுமில்லை அவர்கள் மந்திரத்தை மறந்திருக்கவோ அல்லது மாற்றியோ சொல்லியிருக்கக் கூடும்.

வருண பகவானுக்குறிய மந்திரங்களைச் சொல்லுவதற்கு பதிலாக காயத்ரி மந்திரத்தை சொல்லியிருக்கக் கூடும்.

ஓம் பூர் புவஸ்வக தத்ஸவிதுர் வரேன்யம்
ப்ரகோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன ப்ரசோதயாத்

இதுவும் கூட புயலுக்கான மந்திரம் இல்லையே!

ஒருவேளை அவர்கள், வாயு பகவானுக்குறிய மந்திரத்தை சொல்லியாருக்கக் கூடும்.

அதான் வாயு பகவான் போகின்ற போக்கில் ஒரு காட்டு காட்டிவிட்டார் போலும்.

அவர்களுக்கு இன்னும் பயிற்சி தேவை.

அப்படியே வாயு மந்திரம் சொல்லியிருந்தாலும், அது ஏன் ஒடிசாவிற்கு செல்ல வேண்டும்.

இது தேவலோகத்தில் இன்னும் தொழில்நுட்பம் வளர்ச்சியடையவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. முதலில் அவர்கள், வாயு பகவானுக்கு மட்டுமல்ல ஏனைய பகவானார்களுக்கும் GPS கருவி அனுப்ப வேண்டும்.

ஒருவேளை, GPS கருவி அனுப்பி வைக்கப்படுமானால், அவர்களும் சரியான பகவானுக்குரிய மந்திரத்தை சொல்வார்களானால், அந்த இலாகாவிற்குறிய பகவான் துள்ளியமான இடத்தில் அந்த துறைக்குறிய வேலையை முடிப்பதற்கு ஏதுவாக அமையும்.




No comments:

Post a Comment