Monday, April 22, 2019

யாப்பிலக்கணம்

தமிழ் இலக்கணத்தில் மிகவும் கடினமானதாக உணரப்படும் இலக்கணம் யாப்பிலக்கணம் ஆகும்.

யாத்தல் என்றால் கட்டுதல் என்ற பொருள்படும்.

யாப்பிலக்கணம் என்றால், ஒரு செய்யுளைக் கட்டுவதற்கான (செய்வதற்கான) இலக்கணம் என்று பொருள்படும்.

உதாரணமாக, நாம் ஒரு உரைநடை எழுதும்போது இலக்கணம் கடைபிடிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதாவது, நாம் ஒரு வரலாறு எழுதும் பட்சத்தில், நடந்தேறிய நிகழ்வுகளை, தகவல் பிழை மற்றும் எழுத்துப்பிழை இல்லாமல் மட்டும் பதிவு செய்தால் போதுமானது. இலக்கணம் பற்றிய ஆராய்ச்சி தேவையில்லை.

ஆனால், ஒரு செய்யுளோ அல்லது அந்த வரலாற்றையே செய்யுளாகவோ எழுதும் பட்சத்தில், எழுத்துப்பிழையின்றி எழுதினால் மட்டும் போதாது. செய்யுள் என்பது இலக்கணத்துடன் தான் அமைய வேண்டும்.

இவ்வாறாக ஒரு செய்யுளை இலக்கணத்துடன் கட்டுவது (செய்வது) யாத்ததல் எனப்படும்.

இந்த யாத்தலுக்கான இலக்கணமே யாப்பிலக்கணம் ஆகும்.

யாப்பிலக்கணத்தின் உறுப்புகள்

1. எழுத்து

2. அசை

3. சீர்

4. தளை

5. அடி        மற்றும்

6. தொடை    ஆகியவை ஆகும்.

அதாவது செய்யுள் என்பது, மேற்சொன்ன எழுத்து, அசை, சீர், தலை, தொடை ஆகிய உறுப்புகளைக் கொண்டே அமைய வேண்டும்.





No comments:

Post a Comment