Tuesday, April 23, 2019

பூவின் பருவப்பெயர்கள்

பொதுவாக நாம் பூக்களை இரண்டே நிலைகளில் அடைத்து விடுவதுண்டு.

அதாவது, பூ மற்றும் மொட்டு என்ற இரண்டே நிலைகளில் குறிப்பிடுவதுண்டு.

உதாரணமாக, 

மல்லிகை மொட்டு, பருத்தி மொட்டு, மல்லிப்பூ, செம்பருத்திப்பூ போன்றவை.


ஆனால், தமிழில் பூவானது ஏழு படிநிலைகளைக் கொண்டது. இந்த செய்தியை பெரியார் பிஞ்சு இதழில் படிக்க நேர்ந்தது. அவை,

அரும்பு

ஒரு பூவின் தோற்றநிலையைக் குறிக்கிறது.

மொட்டு

ஒரு பூவின் கூம்பு நிலையைக் குறிக்கிறது.

முகை

ஒரு பூ விரியத் தொடங்கும் நிலையைக் குறிக்கிறது.

அலர்

ஒரு பூ மணம் வீசும் நிலையைக் குறிக்கிறது.

மலர்

இது நமக்குப் பழக்கப்பட்ட சொல்தான். இது ஒரு பூவின் மலர்ந்த நிலையைக் குறிக்கிறது.

வீ

ஒரு பூவின் முற்றிலும் விரிவடைந்த அல்லது வாடும் நிலையைக் குறிக்கிறது.

செம்மல்

ஒரு பூ மலர்ந்த சில நாட்களுக்குப் பிறகு விழக்கூடிய நிலையைக் குறிக்கிறது.





No comments:

Post a Comment