Monday, April 1, 2019

சிவபெருமானுக்கு சம்பந்தி

தமிழரின் நாகரிகம் பற்றி பல இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிறிந்தாலும், திருவெங்கை கலம்பகம் ஒரு இடத்தில் மிகவும் கவனத்தை ஈர்க்கிறது. தன் மகளை பெண் கேட்டு வந்த சக்கரவர்த்தியின் பரிவாரங்களை, தமிழனை பற்றி இழிவாக பேசியதற்காக விரட்டியடித்தான் ஒரு குறுநில மன்னன் என்று கூறுகிறது.

அதன் பாடலை சொல்லி அதற்கான விளக்கத்தை பாமர தமிழில், தோழர் லக்ஷ்மண பெருமாள் பேசியிருப்பார்.

தமிழரின் முதல் நாகரிகம் குறிஞ்சி. அதில் வாழ்ந்தவர்கள் குறவர்கள். அதிலிருந்துதான் பிறகு முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற நாகரிகங்கள் தோன்றியன. அப்படி பார்த்தால் தமிழர்கள் அணைவரும் குரவர்கள் தான். இதை சொல்வதற்கு காரணம் உண்டு. இன்றளவும் கிராமப்புறங்களில், பிள்ளைகளை திட்டும் பொழுது "கொறப்பயலே(கொச்சை) என்ற சொல் கட்டாயம் இடம்பெறும். மேலும், சாலைகளில் சென்று கொண்டிருக்கும் பொழுது, சாலையோரத்தில் குடிலமைத்து தங்குகின்ற நரிக்குறவர்களை பார்த்தால், "அங்க பாரு கொறப்பயலுக இருக்குறத", "அங்க பாரு கொறப்பயலுக சாப்புடுரத" என்பன போன்ற வார்த்தைகளும் இடம்பெறும்.

இவ்வளவுக்கும், குறவர்களை கீழ்மையாக நினைக்கும் நம்மாளுங்கல்ல பெரும்பான்மையோர் ரேஷன் கடைகயில் தான் அரிசி வாங்கி சாப்பிடுவான். ஆனால், குறவர்கள் மளிகை கடையில் கிலோ 40 ரூபாய் என்று விற்கப்படும் அரிசியை வாங்கிச் சாப்பிடுவார்கள். ஏனென்றால், அவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது (நான் அறிந்த வரையில்). ஏதோ சாலையோரத்தில் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பார்கள். அப்படியானால் அவர்கள் இப்படி நினைக்கலாமா? "நீங்கள் ரேஷன் கடைகயில் ஓசிக்கு அரிசி வாங்கி சாப்பிடுகிறார்கள், நாங்கள் கிலோ 40 ரூபாய் கொடுத்து வாங்கி சாப்பிடுகிறோம். உங்களை விட நாங்கள் உயர்ந்தவர்கள்" என்று. ஆனால், அவர்கள் அப்படியெல்லாம் நினைக்க மாட்டார்கள். அதைப்பற்றி சிந்தனை கூட செய்ய மாட்டார்கள்.

தமிழ் இலக்கியங்கள் மூலம் தமிழரின் முதல் நாகரிகம் குறிஞ்சி என்றும் அங்கு வாழ்ந்தவர்கள் அணைவரும் குறவர்கள் என்றும் தெரிந்து கொள்கின்றோம். அப்படியானால், இன்றைக்கு இருக்கின்ற தமிழர்கள் யாவரும் குறவர்கள் என்பது திண்ணம். பொருத்திடுக, தலைப்பிக்ற்குள் செல்லலாம். வடநாட்டிலிருந்து நம்மை ஆண்ட சக்கரவர்த்தியின் மகன் ஒருவன் நாட்டைச் சுற்றிப் பார்க்க செல்கிறான். அப்பொழுது குற்றாலம் போன்ற அருவியொன்றில் ஒரு பெண் குளித்துக் கொண்டிருப்பது கண்டு அவள் மீது காதல் கொள்கிறான்.

இந்த விஷயம் மாஹாராஜாவின் காதுக்கு எட்டியது. அவருக்கு என்ன ஒரு மன்னன் எத்தனை பேரை வேனும்னாலும் வச்சுகிறலாம். தசரதன் அறுபதினாயிரம் பேரை வச்சிருந்தான்ல, ஆற்றின் மணலை கூட எண்ணி விடலாம், தசரதனின் மனைவிகளை என்ன முடியாது என்று சொல்லும் அளவுக்கு வைத்திருந்தான். அறுபதினாயிரம் என்றால், கிட்டத்தட்ட ஒரு முனுசிபாலிட்டியே வச்சி நடத்திருக்கான். அந்த மாதிரி விஷயம் மஹாராஜா காதுக்கு சென்றதும், புடிச்சிருந்தா கட்டுங்கனு சொல்லிட்டான்.
மஹாராஜா நமக்கு கப்பம் கட்டுற குறவர் இனத்து பெண்.

யாராக இருந்தாலும் கட்டுங்க பாத்துகிறலாம். என்று சொன்னவுடன் பரிவாரங்கள் பெண் கேட்க வருகின்றன. வந்தவுடன் மஹாராஜாவின் தூதுவன் குறவனை(குறிஞ்சி நிலத்து மன்னன்) பார்த்து:

டேய்.

சொல்லுங்க சாமி.

நீ கொடுத்து வச்சவன்டா.

சரிங்க சாமி.

நீ எப்படி பட்ட ஆளு, நம்ம மஹாராஜா எப்படி பட்ட ஆளு. மறுபடியும், நம்ம மஹாராஜா எப்படி பட்ட ஆளுனு தெரியுமாடா?

தெரியாது சாமி.

சொல்லுறேன் கேட்டுக்கோ.

சொல்லுங்க சாமி.

அரிச்சந்திரன் தெரியுமா? கதி இழந்தனும் வாழனை இழந்தனும் படைத்த நிதி இழந்தனும் இனிவரும் கதி இழப்பினும் கட்டுரை இழக்கில்லைனு சொல்லி, சுடுகாட்டுக்கு போனதுக்கு பிறகும் பொய் சொல்லாம இருந்தாரே அரிச்சந்திரன் அவர் பரம்பரையில் வந்தவரு.

சரிங்க சாமி.

ராமன் தெரியுமா? ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று வாழ்ந்தாரே அவர் பரம்பரையில் வந்தவரு.

சரி சாமி.

நிடத நாட்டு மன்னன் நளச்சக்கரவரத்தி தெரியுமா? அவரு வழியில் வந்தவருக்கு.

சரி சாமி.

தர்மராஜன் தெரியுமா? அவரு வழியில் வந்தவரு.

சரி சாமி.

அப்பேற்பட்ட நம் அரசர் கேவலம் நீ ஒரு தமிழ்ச் சாதியை சேர்ந்தவன்.......னு சொன்னவுடனேயே நம்ம ஆளுக்கு கோவம் வந்துருச்சு,

யோவ் நிறுத்துயா ஏதோ தமிழர்கள் எங்க கஷ்ட காலம் நாங்கள் தனித்தனியா பிரிஞ்சு கெடக்கோம், நீ மேல உக்கந்துகிட்டு எங்களை அம்பலம் பன்னிக்கிட்டு இருக்க உன்னய எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்தி பேசிக்கோ. ஆனால் என்னய பத்தி தாழ்த்தி பேசுனியா நான் சும்மா இருக்க மாட்டேன்.  உங்கள் யோக்யதை எனக்கு தெரியாதா?

என்ன தெரியும், நான் எவ்ளோ பெரிய ஆளுங்கள சொல்லிருக்கேன். நீ என்ன சொல்லிறப்போற.

சொல்லுறேன் கேட்டுக்கோ என்று நம்ம ஆளு ஆரம்பிக்கிறான்.

எதோ அரிச்சந்திரன சொன்னியல்ல?

ஆமா.

பொண்டாட்டியையும் புள்ளையையும் காசி காசி மாநகரத்துல ஏலத்துக்கு வித்துட்டு போனானே அவன்தானய்யா?

ஆமா அவன்தான்.

பொறகு என்னமோ ராமன சென்னியல்ல?

ஆமா.

அவன் பன்னதெல்லாம் சரியா? அவன் பொண்டாட்டிக்காக இருக்குற கொரங்குகளையெல்லாம் கொன்று, எவ்ளோ வேளை பன்னுனான். வாலிய கொண்டது சரியா? அவன்தனே ராமன்? சம்பூகனை கொன்றது சரியா?

ஆமா அவன்தான் அவன்தான்.

அப்புறம் என்னமோ நளச்சக்கரவரத்திய சொன்னியே, கஷ்ட காலத்துல புருசனும் பொண்டாட்டி (தமயந்தி)யும் ஒரு சேலையை சுத்திக்கிட்டு ரெண்டு பேரும் படுத்திருந்தாங்க. இரவோட இரவாக கத்தரிச்சிட்டு ஓடிபோய்ட்டான். அப்போ கத்திரிப்பானே கண்டுபிடிக்கல. அவன்தானய்யா நளச்சக்கரவர்த்தி?

ஆமா அவனேதான்.

நளன்-தமயந்தி


பொறகு என்னமோ தர்மராஜன பத்தி சொன்னியல்ல?

ஆமா.

அறுபத்தி நாலு தேசத்து அரசர்கள் கூடியிருந்த அவையில அவன் பொண்டாட்டி சேலையை உரிஞ்சாங்க, பாத்துகிட்டு சும்மா இருந்தான் ஒன்னும் சொல்ல முடியாம. அவன்தானயா தர்மராஜன்?

ஆமா அந்த ஆளு தான்.

நான் கேக்குறேன், இதுல எவனாவது கடைசி வரைக்கும் பொண்டிய வச்சு வாழ்ந்திருக்கானா? நான் யாரு தெரியுமா?

யாரு?

சிவபெருமானுக்கு சம்பந்தி (முகனுக்கு வள்ளியை பெண் கொடுத்தவர் குறவர் இனத்தை சார்ந்தவர்). அவரு பய்யன் முருகனுக்கு எங்க பொண்ணு வள்ளியை கொடுத்துருக்கோம். எதுக்கு கொடுத்தோம்?

எதுக்கு கொடுத்திங்க?

எங்கள் மூதாதையர் வேடர் கண்ணப்ப நாயனார் எச்சில் இலையில சாப்பிட்டாங்கிறதுக்காக, என்னதான் இருந்தாலும் நம்ம எச்சில் இலையயில சாப்புட்டுட்டான், பொண்ணு கேக்குறான், குடுத்து தொலையிவோம் அப்டின்னு குடுத்தோம்.

எந்த பொண்ண குடுத்தோம்?

எந்த பொண்ண குடுத்திங்க?

வள்ளிக்கிழங்கு தோன்டும்போது அனாததையாக கிடந்த பெண் வள்ளி(வள்ளிக்கிழங்கு தோன்டும்போது கிடைத்த பெண் என்பதால், வள்ளி என்று பெயர்). அப்படி நாங்கள் வளர்த்த பெண்ணைத்தான் குடுத்தமே ஒழிய, எங்க சொந்த பொண்ணை குடுக்கல. எங்கள் சொந்த பொண்ணை குட்க்குற அளவுக்கு சிவபெருமான் குடும்ப ஒன்னும் பெரிய மனுசன் குடும்பம் இல்லை என்று பாடல் வடிவில் கூறினான் அந்த குறுநில மன்னன். அது இலக்கண அடிப்படையில் அமைந்துள்ளது. அது புரியும் அளவுக்கு எளிய வடிவில் இதோ,

விற்றது யார் கலபாதியோடு வானத்திலே அலைய விட்டதார்
வெஞ்சிறைப்புக விட்டதார்
துகில் உரியவிட்டு விமித்தது யார்
உற்ற தாரமும் வேண்டுமென்று நீ மன்னர் பெண்கொள ஒண்ணுமோ
உமியடா மணமென்ற வாயை கிழித்தோலை காற்றில் உருட்டா
வெற்றி தந்திடும் வேங்கை 
மாநகர் வேடர்யாம்
விமலரானவர் எமையடுத்து சிறிது
எச்சில் சேர்ந்ததாலே ஓர் பெண் வளர்ப்பில் ஈந்தனம் பெற்ற பெண்ணை
குடுப்பமோ பேய் பிடித்த தூதரே!

என்று சொன்னவுடன் ஓடியே போய்விட்டான். டேய் ஆளுதான் குள்ளமா இருக்கான் ஆனா விஷயம் நிறைய வச்சிருக்கான்டா என்று சொல்லி சென்றுவிட்டனர். இதை தோழர் லக்ஷ்மணன பெருமாள் பேசியபோது மிகவும் ஆர்வமாக இருந்தது. அதன் விளைவுதான் இந்த சிவபெருமானுக்கு சம்பந்தி.




No comments:

Post a Comment