நெடுநல்வாடை என்பது சங்க இலக்கியங்களின் பத்துப் பாடல்களில் ஒன்றாகும். இது முதல் தமிழ் சங்கத்தில் பங்கேற்ற, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய, பெரும் புலவர் நக்கீரனால், தலையானம் கானத்து செருவென்ற நெடுஞ்செழிய பாண்டியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது.
நெடுநல்வாடை என்பது நீண்ட நல்ல வாடை காற்றை பற்றி கூறக்கூடிய பாட்டு என்று அர்த்தம்.
அதாவது தலைவியானவள் தலைவனைப் பிரிந்து துன்பத்தில் வாடி கொண்டிருப்பதால் அது அவளுக்கு துன்பம் தரும் நீண்ட வாடையாகவும், போர் புரியச் சென்றிருந்த தலைவனுக்கு அது நல்ல வாடையாகவும் அமைந்ததால் நெடுநல்வாடை என்ற பெயரை பெற்றது.
இந்தப் பதிவு நயவுரை நம்பி எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்கள் எழுதிய நெடுநல்வாடையின் உரையிலிருந்து எழுதப்படுகின்றது. நெடுநல்வாடை என்பது அகப்பாடல் சார்ந்த இலக்கியமாகும். அகப்பாடல் என்பதில், மனிதனின் அகவாழ்க்கையான காதல் பற்றி குறிப்பிடப்படும். அதுபோல தலைவன், தலைவி, தோழி போன்ற சொற்களே, பெயர்களுக்கு பதிலாக பயன்படுத்தப்படும்.
நெடுநல்வாடையில் " வேம்பு தலை யாத்த நோன்காழ்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வேப்பம்பூவை தலையில் சூடி தலைவன் சென்றான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வேப்பம்பூ என்பது பாண்டிய மன்னனுக்கு அடையாளமாக விளங்குவது. குறிப்பால் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் என்று உணர்த்தியதால், இது அகப்பாடலானது. நெடுநல்வாடை 188 அடிகளைக் கொண்டது.
தலைவி தலைவனை பிரிந்து துன்பத்தில் இருக்கிறாள், அவளுடைய அந்த துன்பம் தீர வேண்டுமானால், போருக்கு சென்ற தலைவன் வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்ற வேண்டுகோளை கொற்றவையை நோக்கி செவிலித்தாய் வைப்பதாக நக்கீரனார் வடிவமைத்துள்ளார்
.
.
வாடைக்காற்று என்பது வடக்கிலிருந்து வீசும் காற்றாகும்.
தெற்கிலிருந்து வீசுவது தென்றல் காற்றாகும்.
தெற்கிலிருந்து வீசுவது தென்றல் காற்றாகும்.
கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல் காற்றாகும்.
மேற்கிலிருந்து வீசுவது கச்சான் காற்று ஆகும்.
இவ்வாறாக, நெடுநல்வாடையில் வடக்கிலிருந்து வீசக்கூடிய அந்த வாடைக்காற்றினால் ஏற்பட்ட கொடுமையை எவ்வாறு இருந்தது என்று கண்முன்னே காட்சிப்படுத்தியுள்ளார் நக்கீரனார். அவற்றில் சில,
"மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை
கன்றுகோ ளழியக் கடிய வீசிக்
குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்"
அதாவது, விலங்குகள் எல்லாம் மேய்தலை விட்டுவிட்டன, குரங்கு குளிரால் நடுங்கிற்று, காற்று வேகமாக அடித்ததால் பறவைகள் கீழே விழுந்தன, பசுக்கள் எல்லாம் தங்களுடைய கன்றுகள் பால் குடிக்காதபடி அவற்றை உதைத்தன என்று நக்கீரனார் விலக்குகின்றார்.
மேலும் நெடுநல்வாடையில் வானியல் பற்றி குறிப்பிடப்படுகிறது. இது தமிழர்களிடையே அப்பொழுதே வானியல் கலை இருந்தது என்பதை தெளிவாக காட்டுகிறது.
பாண்டியனின் மிகப்பெரிய அரண்மனையில் உள்ள அந்த அந்தப்புரத்தில் தந்தத்தால் செய்யப்பட்ட கட்டிலில் தலைவி படுத்திருக்கிறாள். தலைவனைப் பிரிந்து இருக்கின்ற துயரம் தாங்க முடியாததால் அவள் அணிகலன்கள் எதையும் அணியவில்லை.
கட்டிலின் மீது இருந்து வானத்தில் சூரியனை சேர்ந்திருக்கும் ரோகினியை கண்டு இதனை போல தலைவனை பிரியாமல் வாழ்வதற்கு நமக்கு வழியிலேயே என்று ஏங்குகிறாள். ஆனால் யுத்தகளத்தில் தங்கியுள்ள பாண்டிய மன்னனோ காமத்தை வென்றவர். அன்பினை மறந்து கடமை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.
போர்க்களத்தில் காயம்பட்ட வீரர்களைப் பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக பாசறையை விட்டு வெளியே செல்கிறார். மன்னனைத் தொடர்ந்து யானைகளும் குதிரைகளும் வர அவற்றின் மீது ஏறி அவர் செல்லவில்லை. வீரன் ஒருவனின் தோள் மீது கை வைத்து கொண்டு நடந்து சென்று அங்குள்ள வீரர்களுக்கு ஆறுதல் சொல்லுகின்றார்.
மேலும், மறுநாள் நடக்க இருக்கும் இடத்தில் வெல்வதற்கான அந்த வழிமுறைகள் என்னவென்று திட்டமிடுகிறார். வாடை காற்று வீசிக்கொண்டே இருக்கிறது.
இந்த நூலில் தலைவனை நினைத்து வருந்தும் பாண்டிமாதேவியின் துன்பத்தை வர்ணிக்கக்கூடிய பகுதியும் மன்னனின் போர்ப் பாசறை நிகழ்ச்சியையும் வர்ணிப்பதாக அமைந்துள்ளது.
வானத்திலிருந்து மேகம் பூமி குளிரும்படி பெரும் மழை பொழிந்தது. அதனால் உண்டான பெரும் வெள்ளத்தைக் கண்டு வெறுத்துப் போன இதயங்கள் தங்கள் கால்நடைகளை வேறு இடத்திற்கு ஓட்டிக் கொண்டு சென்றார்கள். தாம் பழகிய இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்ல நேர்ந்ததை எண்ணி வருந்தினார்கள். காந்தள் மலர்களால் தொகுத்து கட்டப்பட்ட அவர்களுடைய தலை மாலைகள் மழை நீரால் அழகிழந்து. கடும் குளிரில் வாடிய அவர்கள் தீயில் தம் கைகளை காட்டி கன்னத்தில் வைத்துக் கொண்டும் அவ்வாறு வைத்தும் குளிர் நீங்காமல் இருந்ததால் அவர்களுடைய பற்கள் பறை கொட்ட வருந்தினார்கள்.
இத்தகைய குளிர்காலத்தில் முசுண்டை பூக்களும் பீர்க்கன் பூக்களும் மலர்ந்திருந்தன. சேறு மிகுந்த மணற்பரப்பில் நாரைகளும் கொக்குகளும் மழைநீரில் கயல் மீன்களை எதிர்பார்த்து இருந்தன.
நெற்கதிர்கள் முற்றி விளங்கியது. கமுக மரத்தின் பாளைகளில் பச்சைக் காய்கள் முற்றியது. சோலைகளில் உள்ள மரக்கிளைகளில் நீர் துளிகள் விழுந்தன.
தெருக்களில் உள்ள மக்கள் கள்ளை நிறைய குடித்து அந்த மகிழ்ச்சியில் மழைத்துளிகளை பொருட்படுத்தாமல் திரிந்து கொண்டிருந்தனர்.
பெண்கள் மாலை நேரம் வந்ததை அறிந்து வீடுகளில் விளக்கேற்றி நெல்லையும் மலரையும் தூவி தெய்வத்தை வணங்கினார்கள்.
இவ்வாறாக இவ்வாறாக வாடை காற்றினால் ஏற்பட்ட துன்பத்தையும், தலைவனைப் பிரிந்து துன்பத்தில் வாடும் தலைவியின் காதலையும், போர்க்களத்தில் உள்ள தலைவனின் கடமையையும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் நக்கீரனார்.
மேலும் பத்துப்பாட்டு இலக்கியங்களை இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment