Wednesday, May 15, 2019

நீதிதேவன் மயக்கம் (காட்சி-1)

               ‌‌              காட்சி-1 

இருண்ட வானம் (இடி மின்னலுடன் காற்றுப் பலமாக அடிக்கிறது. இந்தப் பேரிரைச்சலுக்கிடையே ஏதோ, குரல் கேட்டுக் கொண்டிருக்கிறது)

ஆண்டவன்: நீதிதேவா! நீதிதேவா!

(பதில் ஏதும் இல்லை. மீண்டும் அதிகாரத் தொனியில் அழைக்கிறார்)

ஆண்டவன்: நீதிதேவா! நான் அழைப்பது உன் காதில் விழவில்லையா? நீதிதேவா?

(நீதிதேவன், முன்வந்து ஆகாயத்தைப் பார்த்து, வணங்கி நிற்கிறார்.)

ஆண்டவன்: நீதிதேவா! பூலோகத்தில் புதுக் கருத்துகள் பரவிவிட்டனவாம். பழைய நிகழ்ச்சிகளுக்கு, நாம் கூறின முடிவுகள், தீர்ப்புகள் தவறு என்று புகார் கிளம்பிவிட்டது. ஆகவே இனிப் பழைய தீர்ப்புகள், செல்லுபடியாகா என்று கூறிவிடுவார்கள் போல் இருக்கிறது. இதை உத்தேசித்துப் புனர் விசாரணை நீதிமன்றம் நியமித்திருக்கிறேன். இராவணன் குற்றவாளிதான். இலங்கை அழிந்தது நியாயமே. இராவணன் இரக்கமற்ற அரக்கன் என்பதுதானே கம்பரின் குற்றச்சாட்டுகள். அதனால் அந்த வழக்கை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள். உடனே நீதிமன்றம் கூட ஏற்பாடுகள் நடக்கட்டும்.
             
                         [காட்சி முடிவு]

No comments:

Post a Comment