நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும், வருமொழியின் முதலெழுத்து யகரமாவும் இருக்குமிடத்து, இரண்டும் புணரும்போது நிலைமொழியின் இறுதியில் உள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும்.
இவ்வாறு திரியும் இகரம், தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவே ஒலிக்கும்.
உதாரணம்
நாடு + யாது = நாடியாது
பஞ்சு + யாது = பஞ்சியாது
கண்டேன் + யான் = கண்டேனியான்
கொக்கு + யாது = கொக்கியாது
நாடியாது, பஞ்சியாது, கண்டேனியான், கொக்கியாது போன்ற சொற்களில் உள்ள இகரம் அரை மாத்திரை அளவே ஒலிக்கக் கூடியது.
இதேபோல், மியா என்னும் அசைச்சொல்லில் வரும் மி என்ற எழுத்தும் அரை மாத்திரை அளவே ஒலிக்கக் கூடியது.
உதாரணம்
கேள் + மியா = கேண்மியா
No comments:
Post a Comment