இலக்கியவாதிகள் வரலாறு மற்றும் புராணம் போன்றவற்றை எழுதும் போது சுவாரஸ்யத்தின் பொருட்டு, தங்களுடைய கற்பனையை சற்று சேர்த்து புனைவது வழக்கம். வரலாற்றை பொருத்தமட்டில் அதன் உண்மைதன்மை மாறாமல், தங்களுக்கு பிடித்த வரலாற்று நாயகர்களளின் குணத்தை மிகைப்படுத்தி எழுதுவது எழுத்தாளர்களின் சுதந்திரம் போலும். அது பரவாயில்லை, வரலாற்று தரவுகள் தவறு என்று தோன்றினால் வரலாற்று ஆசிரியர்களால் மறுக்கப்படதவற்றை படித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால், புராணம் என்பது அப்படி இல்லை. அவை நடந்தவை என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
புராணம் என்று சொல்லும் போதே அது புனையப்பட்டது என்றாகிறது. அதனால், புனையப்பட்டதை புனைவதில் பிழை ஒன்றும் இல்லை என்று நினைத்து ஆளாளுக்கு புனைந்து தள்ளுகின்றனர். இந்திய துணைக்கண்டத்தில் ஏறக்குறைய இருபதுக்கும் மேற்பட்ட ராமாயணங்கள் உள்ளன.
இவற்றிற்கெல்லாம் மூலமானது வால்மீகம் தான். இந்த மூலமானது சமக்கிருத மொழியால் ஆனது. மற்ற அணைத்து ராமாயணங்களும் அந்தந்த பிராந்திய மொழிகளால் ஆனது. அப்படி சில ராமாயணங்கள்:
வால்மிகி - சமக்கிருதம்
கம்பர் - தமிழ்
துளசிதாசர் - அவதி (ஹிந்தியின் ஒரு பிரிவு)
இவ்வாறாக ஏராளமான ராமாயணங்கள் உள்ளன. சரி நாம் கவிச்சக்கரவர்த்திக்கு வருவோம். நாம் அனைவரும் படித்த கம்பராமாயணம் ஆறு காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
1. பால காண்டம்
2. அயோத்திய காண்டம்
3. ஆரணிய காண்டம்
4. கிட்கிந்த காண்டம்
5. சுந்தர காண்டம்
6. யுத்த காண்டம்
யுத்த காண்டம் என்பது இராவண வதத்துடன் முற்றுப் பெறுகிறது. ராமாயணமே அவ்வளவு தானா?..
சீதையை மீட்ட பின் ராமன் அயோத்தி திரும்பவில்லையா?..
சீதையை மீட்ட பின் ராமன் அயோத்தி திரும்பவில்லையா?..
சீதையை காட்டிற்கு அனுப்பவில்லையா?
சீதைக்கு லவன், குசன் பிறக்கவில்லையா?..
இது எதுவுமே கம்பராமாயணத்தில் இல்லையே!..மூலமான வால்மீகத்தில் ஏழாவதாக ஒரு காண்டம் உண்டு. அது உத்தர காண்டம். சமக்கிருத மூலத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்த கம்பன், புனைவுகள் செய்ததை கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒரு பகுதியையே(காண்டம்) விட்டுவிட்டதன் காரணம் என்ன. புனைவு செய்தேனும், உத்தர காண்டத்தை எழுதியிருக்கலாமே. பகவான் ராமனை காப்பாற்றும் கடமையை ஏற்று, பகவத் கீதையின் கர்ம யோகத்தை நெஞ்சில் நிறுத்தி எழுதினார் போலும். ஏனெனில், உத்தர காண்டத்தில் தான் சம்பூகன் வதம் நிகழ்த்தப்பட்டது. ஏன்?..

ஏனெனில், சம்பூகன் குலத்தில் தாழ்ந்த சூத்திரன். அவன் குலதர்மப்படி அவன் பிராமண, ஷத்ரிய, வைஸ்யர்களுக்கு சேவகம் செய்தே வாழ வேண்டும். தவம் புரியக் கூடாது. அது மேல் சாதியான பார்ப்பனர்களுக்கு உரித்தான காரியம். அப்படியிருக்கையில் ஒரு சூத்திரன் தவம் செய்தால், தர்மத்தை(வர்ணசிரமம்) காப்பதற்காகவே அவதரித்த பகவான் ராமன் சும்மா விடுவாரோ?..
அதான் அவன் தலையை வெட்டிய விட்டார். இதை சொல்ல கம்பருக்கு இருந்த தயக்கம் என்னவென்றால், அவர் பார்ப்பனியத்தால் ஆட்கொள்ளப்பட்டார் என்பதே உண்மை. உத்தர காண்டத்தில் தான் ராமராஜ்ஜியம் நடந்தது. மற்ற ஆறு காண்டத்தில் ராமன் ஆட்சியில் இல்லை. காடு, மலை, கணவாய் எல்லாம் சுற்றித் திரிந்தான். ராமராஜ்ஜியம் என்றாலே அது வர்ணாசிரமத்தை பாதுகாக்கும் மநுதர்ம ராஜ்ஜியம் தான். " முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தல்" என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு அதைதான் கம்பர் செய்திருக்கிறார். என்ன செய்வது க(கா)விச்சக்கரவர்த்தி அல்லவா.
No comments:
Post a Comment