Wednesday, April 17, 2019

மெய்யெழுத்து

தமிழில் உயிரெழுத்துகளைப் போலவே, மெய்யெழுத்துகளும் தனித்து ஒலிக்கக் கூடியவை.

மெய்யெழுத்துக்கள் ஒற்றெழுத்துகள் என்றும் அழைக்கப்படுகின்றன. தமிழில் " க் " முதல் " ன் " வரை உள்ள 18 எழுத்துகளும் மெய்யெழுத்துள் ஆகும். அவையாவன,

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.

ஆகியவை ஆகும்.

மெய்யெழுத்துகள் அவற்றின் ஒலிக்கும் தன்மையை பொறுத்து, மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

1. வல்லினம்

2. மெல்லினம் மற்றும்

3. இடையினம்


வல்லினம்

வல்லின மெய்கள் மார்பிலிருந்து பிறப்பவை ஆகும். இவை "வல்"லென்று ஒலிப்பதால் இப்பெயர் பெற்றது. இவை வல்லொற்றுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. 18 மெய்யெழுத்துகளில் கீழ்க்காணும் 6 எழுத்துகள் வல்லினம் ஆகும். அவை,

க், ச், ட், த், ப், ற்  ஆகியவை ஆகும்.


உதாரணம்:


க் - தேக்கன்


ச் - பச்சை


ட் - பட்டம்


த் - பத்து


ப் - கப்பல் 


ற் - கற்சிலை


மெல்லினம்

மெல்லின மெய்கள் மூக்கிலிருந்து பிறப்பவை ஆகும். இவை மெல்லிய ஓசையை உடையவையதலால் இப்பெயர் பெற்றது. இவை மெல்லொற்றுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. கீழ்க்காணும் 6 எழுத்துகளும் மெல்லினம் ஆகும். அவை,

ங், ஞ், ண், ந், ம், ன்   ஆகியவை ஆகும்.


உதாரணம்:


ங் - சங்கம்


ஞ் - சஞ்சாரம்


ண் - எண்ணம்


ந் - அந்தம்


ம் - அம்மா


ன் - முடிமன்ன்


இடையினம்


இடையின மெய்கள்; வல்லின மற்றும் மெல்லின மெய்களுக்கு இடைப்பட்ட கழுத்திலிருந்து பிறப்பதால் இப்பெயர் பெற்றது. இவை இடையொற்றுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. கீழ்காணும் 6 எழுத்துகளும் இடையினம் ஆகும். அவை, 

ய், ர், ல், வ், ழ், ள்  ஆகியவை ஆகும்.


உதாரணம்:


ய் - வாய்மை  


ர் - தேர் 


ல் -  ல்லாள் 


வ் - வ்விடம் 


ழ் - தமிழ் 


ள் - வெள்ளம்





<<பின்செல்க





No comments:

Post a Comment