எல்லா தாவரங்களிலும் உள்ள, எல்லா பருவத்திலும் உள்ளவற்றை நாம் இலை என்ற பொதுப்பெயரிலேயே அழைப்பது வழக்கம்.
உதாரணமாக,
துளசி இலை, வாகை இலை, தூதுவளை இலை.
இதேபோல், சமீபத்தில் துளிர்த்ததும் இலைதான், வாடிய நிலையில் இருந்தாலும் இலைதான்.
இஙகே நாம் இலையின் பருவப் பெயர்கள் மற்றும் மாற்றுப் பெயர்கள் பற்றி பார்க்கலாம்.
இலையின் பருவப் பெயர்கள்
கொழுந்து - துளிர் விடும் பருவம்
தளிர் - இளமைப் பருவம்
இலை - முற்றிய நிலை
பழுப்பு - பகுதியாக வாடிய நிலை
சருகு - முற்றிலுமாக வாடிய அல்லது உதிர்ந்த நிலை
இலையின் மாற்றுப் பெயர்கள்
மரம், செடி, கொடி போன்ற அனைத்து தாவரத்தினுடையதும் இலை கிடையாது. மாற்றுப் பெயர்கள் உண்டு அவை,
தோகை - கரும்பு, சோளம், கம்பு
தாள் - நெல், புல்
ஓலை - பனை, தென்னை
No comments:
Post a Comment