Saturday, April 27, 2019

பெண்களின் பருவப் பெயர்கள்

அந்தப் பொம்பள, அந்தப் புள்ள, பொட்டப் புள்ள, கிழவி அல்லது கெழவி, பெண், பெண் குழந்தை போன்றவற்றில் ஏதேனும் ஒரு பெயரின் மூலம் பெண்களின் பருவத்தை, தமிழகத்தின் பல்வேறு வட்டார வழக்குகளில் பயன்படுத்துவதுண்டு.

ஆனால், பெண்களின் சரியான பருவத்திற்கு ஏற்றவாறு, தமிழில் பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.


அவற்றைப் பற்றி நாம் இங்கு காண்போம்.

பேதை

1 அகவை முதல் 8 அகவை வரை உள்ள பருவம்.

பெதும்பை

9 அகவை முதல் 10 அகவை வரை உள்ள பருவம்.

மங்கை

11 அகவை முதல் 14 அகவை வரை உள்ள பருவம்.

மடந்தை

15 அகவை முதல் 18 அகவை வரை உள்ள பருவம்.

அரிவை

19 அகவை முதல் 24 அகவை வரை உள்ள பருவம்.

தெரிவை

24 அகவை முதல் 29 அகவை வரை உள்ள பருவம்.

பேரிளம்பெண்

30 அகவைக்கும் மேற்பட்ட பருவம்.







No comments:

Post a Comment