குதிரை வண்டியிலிருந்து விழுந்த அனுபவம்!
1929 ஆம் ஆண்டில் பம்பாய் அரசாங்கம் தீண்டத்தகாதவர்களின் குறைகளைக் கேட்டறிந்து விசாரணை செய்ய ஒரு கமிட்டியை நியமித்தது. அக்கமிட்டியில் நானும் ஓர் அங்கத்தினராக நியமிக்கப்பட்டேன். தீண்டத்தாதவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, ஒடுக்குமுறை, கொடுமை பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க இந்தக் கமிட்டி இராஜதானி முழுவதும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. கமிட்டி உறுப்பினர்கள் குழுக்களாகப் பிரிந்து பயணம் செய்ய முடிவு செய்தோம்.
எனக்கும், மற்றொரு உறுப்பினருக்கும் கண்டேஷ் பகுதியின் இரண்டு மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டன. நானும் என் சகதோழரும் எங்களது பணி முடிந்தபின் பிரிந்து சென்றோம். யாரோ ஓர் இந்து சாமியாரைக் காண அவர் சென்றார். பம்பாய் செல்ல நான் ரயிலில் புறப்பட்டேன். துலியா அருகே உள்ள ஒரு கிராமத்தில் தீண்டத்தகாதவர்களின் மீது மற்ற ஜாதி இந்துக்கள் அறிவித்திருந்த சமூகப் புறக்கணிப்பு வழக்கு பற்றி விசாரிக்கச் செல்வதற்காக சாலிஸ்கான் இரயில் நிலையத்தில் நான் இறங்கினேன். சாலிஸ்கானைச் சேர்ந்த தீண்டத்தகாதவர்கள் இரயில் நிலையத்துக்கு வந்து அன்றிரவு அவர்களுடன் தங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இந்தச் சமூகப் புறக்கணிப்பு வழக்கை விசாரித்து விட்டு நேரடியாகப் பம்பாய் செல்வது என்பதுதான் எனது திட்டமாக இருந்தது. ஆனால் வந்தவர்கள் நான் தங்கவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டியதால் இரவில் தங்க ஒப்புக் கொண்டேன். அந்தக் கிராமத்திற்குச் செல்ல நான் துலியாவில் இரயில் ஏறினேன். அந்தக் கிராமத்திற்குச் சென்ற நான் அங்கு நிலவும் சூழ்நிலையைப் பற்றி அறிந்துகொண்டு அடுத்த இரயிலிலேயே சாலிஸ்கானுக்குத் திரும்பிவிட்டேன்.
எனக்கும், மற்றொரு உறுப்பினருக்கும் கண்டேஷ் பகுதியின் இரண்டு மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டன. நானும் என் சகதோழரும் எங்களது பணி முடிந்தபின் பிரிந்து சென்றோம். யாரோ ஓர் இந்து சாமியாரைக் காண அவர் சென்றார். பம்பாய் செல்ல நான் ரயிலில் புறப்பட்டேன். துலியா அருகே உள்ள ஒரு கிராமத்தில் தீண்டத்தகாதவர்களின் மீது மற்ற ஜாதி இந்துக்கள் அறிவித்திருந்த சமூகப் புறக்கணிப்பு வழக்கு பற்றி விசாரிக்கச் செல்வதற்காக சாலிஸ்கான் இரயில் நிலையத்தில் நான் இறங்கினேன். சாலிஸ்கானைச் சேர்ந்த தீண்டத்தகாதவர்கள் இரயில் நிலையத்துக்கு வந்து அன்றிரவு அவர்களுடன் தங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இந்தச் சமூகப் புறக்கணிப்பு வழக்கை விசாரித்து விட்டு நேரடியாகப் பம்பாய் செல்வது என்பதுதான் எனது திட்டமாக இருந்தது. ஆனால் வந்தவர்கள் நான் தங்கவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டியதால் இரவில் தங்க ஒப்புக் கொண்டேன். அந்தக் கிராமத்திற்குச் செல்ல நான் துலியாவில் இரயில் ஏறினேன். அந்தக் கிராமத்திற்குச் சென்ற நான் அங்கு நிலவும் சூழ்நிலையைப் பற்றி அறிந்துகொண்டு அடுத்த இரயிலிலேயே சாலிஸ்கானுக்குத் திரும்பிவிட்டேன்.
சாலிஸ்கான் இரயில் நிலையத்தில் தீண்டத்தகாதவர்கள் எனக்காகக் காத்திருப்பதைக் கண்டேன். எனக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அவர்களின் வீடுகள் உள்ள மஹர்வாடா என்ற இடம் இரயில் நிலையத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது; அந்த இடத்தை அடைய ஓர் ஆற்றைக் கடந்து செல்லவேண்டும். ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் இருந்தது. மஹர் வாடா நடந்து செல்லும் தூரத்திலேயே இருந்தது. உடனடியாக நான் அங்கு அழைத்துச் செல்லப் படுவேன் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் என்னை உடனே அழைத்துச் செல்வதாகத் தெரியவில்லை; ஏன் என்னைக் காக்க வைத்தனர் என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை.
அரை மணி நேரத்திற்குப் பின்னர் ஒரு குதிரை வண்டி இரயில் நடைமேடைக்கு அருகே கொண்டுவரப்பட்டு, நான் அதில் ஏறிக் கொண்டேன். வண்டி ஓட்டியும் நானும் மட்டும்தான் அந்த வண்டியில் இருந்தோம். மற்றவர்கள் ஒரு குறுக்கு வழியே நடந்து சென்றனர். 200 அடி தூரம்
அரை மணி நேரத்திற்குப் பின்னர் ஒரு குதிரை வண்டி இரயில் நடைமேடைக்கு அருகே கொண்டுவரப்பட்டு, நான் அதில் ஏறிக் கொண்டேன். வண்டி ஓட்டியும் நானும் மட்டும்தான் அந்த வண்டியில் இருந்தோம். மற்றவர்கள் ஒரு குறுக்கு வழியே நடந்து சென்றனர். 200 அடி தூரம்
அந்தக் குதிரை வண்டி சென்றபோது, ஒரு மோட்டார் காருடன் அது மோதப் பார்த்தது. தினமும் சவாரிக்கு வண்டி ஓட்டிச் செல்லும் வண்டிக்காரர் இவ்வளவு அனுபவமற்றவராக இருக்கிறாரே என்று நான் வியப்படைந்தேன். அங்கே இருந்த போலீஸ்காரர் உரக்கக் கத்தியதால், காரின் ஓட்டுநர் காரைப் பின் வாங்கியதால், விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
ஒருவாறாக ஆற்றின்மீது உள்ள பாலத்தின் அருகில் நாங்கள் வந்தோம். பாலங்களின் மீது உள்ளதுபோன்று அதன் மீது ஓரத்தில் தடுப்புச் சுவர் எதுவுமில்லை. அந்தப் பாலம் நாங்கள் வந்து கொண்டிருந்த பாதையிலிருந்து செங்குத்தாக இருந்தது. பாதையிலிருந்து பாலத்திற்கு வரும்போது வளைவில் திரும்ப வேண்டும். ஆனால் பாலத்தின் முதல் பக்கவாட்டுக் கல் அருகே வரும்போது, நேராகச் செல்வதற்குப் பதில் குதிரை திரும்பி ஓடியது. குதிரை வண்டியின் சக்கரம் பக்கவாட்டில் இருந்த கல்லின் மீது வேகமாக மோதியதில் நான் தூக்கி எறியப்பட்டு, பாலத்தின் மீதிருந்த கல் தரையில் வந்து விழுந்தேன்.
குதிரையும் வண்டியும் பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்துவிட்டன. வேகமாக நான் விழுந்ததால், அசைய முடியாமல் இருந்தேன். ஆற்றின் அக்கரையில் மஹர்வாடா இருந்தது. என்னை அழைக்க இரயிலடிக்கு வந்திருந்தவர்கள் எனக்கு முன் அங்கு வந்து சேர்ந்திருந்தனர். என்னை அவர்கள் தூக்கி விட்டு, ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் அழுகை மற்றும் புலம்பலுக்கிடையில் மஹர்வாபாவுக்குக் கொண்டு சென்றனர். கீழே விழுந்ததில் எனக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. எனது கால் எலும்பு முறிந்து பல நாட்கள் என்னால் நடக்க முடியாமல் போனது. இவையெல்லாம் எப்படி நடந்தன என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தினமும் அந்தப்பாலத்தில் முன்னும்பின்னும் சென்று வந்து கொண்டிருந்த குதிரை வண்டி, அதற்கு முன் வண்டியை பாலத்தில் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல எப்போதும் தவறியதேயில்லை.
விசாரித்தபோது, எனக்கு உண்மைகளைச் சொன்னார்கள். இரயிலடியில் ஏற்பட்ட தாமதத்திற்குக் காரணம் தீண்டத்தகாத ஒரு பயணியைத் தனது வண்டியில் அழைத்து வர குதிரை வண்டிக்காரன் விரும்பாததுதான். அது அவனது கவுரவத்திற்குக் குறைவானதாம். நான் அவர்களிடம் இருப்பிடத்திற்கு நடந்து வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை மஹர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒரு சமரசம் செய்து கொள்ளப்பட்டது: குதிரை வண்டிக்காரன் வண்டியை வாடகைக்குத் தருவது என்றும் ஆனால் வண்டியை அவன் ஒட்டி வரமாட்டான் என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மஹர்களால் வண்டியை வாடகைக்கு எடுக்க முடிந்ததே தவிர, அதனை ஓட்டமுடியாது என்பதால், வேறு ஒருவரை வண்டி ஒட்டச் செய்யலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். இதுதான் சரியான தீர்வு என்று அவர்கள் கருதினார்கள்.
என்றாலும், பயணியின் கவுரவத்தை விட அவரது பாதுகாப்புதான் முக்கியமானது என்பதை மஹர்கள் மறந்து விட்டார்கள் போலும். பாதுகாப்புதான் முக்கியம் என்று அவர்கள் நினைத்திருந்தால், என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல இயன்ற வண்டி வட்டியைக் கொண்டு வந்திருப்பார்கள். உண்மையைக் கூறுவதானால் அவர்களில் எவர் ஒருவராலும் அந்த வண்டியை ஓட்ட முடியாது; ஏனென்றால் அது அவர்கள் தொழிலல்ல. எனவே அவர்களுள் ஒருவரை வண்டி ஓட்டி வரும்படி கேட்டிருக்கிறார்கள். வண்டியில் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்ட அவருக்கு, வண்டி ஓட்டுவதில் சிரமம் எதுவுமில்லை என்று நினைக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் புறப்பட்டபின்னர்தான் தன் பொறுப்பை உணர்ந்த அவர் குதிரையைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பதற்றம் அடைந்துவிட்டார். என் கவரவத்தைக் காப்பாற்ற முயன்ற சாலிஸ்கான் மஹர்கள் என் உயிருக்கே ஆபத்து ஏற்படும்படி செய்துவிட்டார்கள். அனைத்து தீண்டத்தகாதவர்களையும் விட அவர் பார்-அட்-லாவாக இருந்தாலும் சரி, தானே உயர்ந்தவன் என்று, ஒரு வேலைக்காரனை விட மேலானவன் அல்லாத அந்தக் குதிரை வண்டிக்காரனான இந்துநினைத்திருந்தான் என்பது பின்னர் எனக்குத் தெரியவந்தது.
மகமதியரும் தீண்டாமை பாராட்டினர்!
நான் ஒப்புக் கொண்டால் ஒரு சுற்றுலா செல்ல விரும்புவதாக, எங்கள் இயக்கத்தின் சகதோழர்கள் சிலர் 1934-ல் தெரிவித்தார்கள்; நானும் ஒப்புக் கொண்டேன். வெரூலில் உள்ள புத்தமதக் குகைகளையும் நமது சுற்றுப் பயண திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. நாசிக்குச் சென்று மற்றவர்களுடன் நான் சேர்ந்து கொள்வது என்று ஏற்பாடு ஆயிற்று. வெரூல் செல்ல நாம் அவுரங்காபாத் செல்ல வேண்டும் அய்தராபாத் மேதகு நிஜாம் அவர்களின் மகமதிய சமஸ்தானத்தின் ஆளுமைக்குட்பட்ட ஒரு நகரம் அவுரங்காபாத். அவுரங்காபாத் செல்லும் முன் தவுலாபாத் என்னும் மற்றொரு நகரத்தை நாம் கடக்க வேண்டும்; இதுவும் நிஜாமின் அய்தராபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. தவுலா. பாத் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நகரம்; புகழ் பெற்ற இராம்தியோ ராய் என்ற இந்து மன்னரின் தலைநகராக அது ஒரு காலத்தில் விளங்கியது. தவுலாபாத் கோட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நினைவுச் சின்னம் என்பதால், அப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அதைக் காணத் தவறுவதில்லை, அதன்படி தவுலாபாத் கோட்டையைப் பார்ப்பது என்பது எங்கள் பயணத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டது.
சில சுற்றுலாக் கார்களையும் பேருந்துகளையும் நாங்கள் வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். நாங்கள் மொத்தம் 30 பேர் இருந்தோம். நாங்கள் நாசிக்கில் இருந்து புறப்பட்டு அவுரங்காபாத் செல்லும் வழியில் உள்ள யியோலாவுக்குச் சென்றோம். எங்களது சுற்றுப் பயணத்தை நாங்கள் வேண்டுமென்றே வெளிப்படையாக அறிவிக்கவில்லை . நாட்டின் புறநகர்ப் பகுதிகளில் தீண்டத்தகாத மக்கள் எதிர்கொள்ள வேண்டிய இடையூறுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் மஹர்கள் என்பது வெளியில் தெரியாதவாறு பயணம் செய்ய விரும்பினோம். நாங்கள் தங்குவது என்ற முடிவு செய்த இடங்களில் இருக்கும் எங்கள் மக்களுக்கு மட்டும் நாங்கள் எங்கள் பயணத் திட்டத்தைத் தெரிவித்திருந்தோம். அதனால் நிஜாம் சமஸ்தானத்தில் பல கிராமங்களை நாங்கள் கடந்து சென்றபோது எங்கள் மக்கள் எவரும் வந்து எங்களைச் சந்திக்கவில்லை.
ஆனால் நாங்கள் வருகிறோம் என்று தவுலாபாத் நண்பர்களுக்குத் தெரிவித்து இருந்ததால், எங்களை எதிர்பார்த்து அவர்கள் நகரின் வாயிலில் நின்று கொண்டிருந்தனர். வண்டியிலிருந்து இறங்கி, தேநீரும் சிற்றுண்டியும் அருந்திவிட்டு, பின்னர் கோட்டையைக் காணச் செல்லலாம் என்று அவர்கள் கூறினார்கள். எங்களுக்கு அப்போது தேநீர் மிகவும் தேவையாக இருந்தபோதும், இருட்டும் முன் கோட்டையைக் காண, போதிய நேரம் தேவை என்று கருதியதால் அதனை நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் உடனே கோட்டைக்குப் புறப்பட்ட நாங்கள் திரும்பி வரும்போது தேநீர் அருந்துவதாக அவர்களிடம் கூறினோம். அதன்படி எங்கள் ஓட்டுநர்களை விரைந்து செல்லும்படி கூறினோம்; கோட்டை வாயிலுக்குச் சில நிமிடங்களில் நாங்கள் வந்து சேர்ந்தோம்.
அந்த மாதம் மகமதியர்களுக்குப் புனிதமான ரம்ஜான் மாதமாக இருந்தது. கோட்டை வாயிலுக்கு எதிரில் விளிம்பு வரை நீர் நிறைந்த ஒரு குளம் இருந்தது. அதனைச் சுற்றி ஒரு கல்நடைபாதை இருந்தது. பயணத்தின்போது எங்கள் உடைகளும், உடலும், முகமும் தூசு படிந்து அழுக்காகி இருந்த படியால், நாங்கள் முகம் கழுவிக் கொள்ள விரும்பினோம். அதிகமாக யோசனை செய்யாமல், சிலர் அந்தக் குளத்தின் கரையில் நின்று கொண்டே தங்களின் முகம், கை, கால்களைக் கழுவிக் கொண்டனர். பின்னர் நாங்கள் கோட்டை வாயிலுக்குச் சென்றோம். கோட்டையினுள் ஆயுதந்தாங்கிய இராணுவ வீரர்கள் இருந்தனர். பெரிய கதவுகளைத் திறந்து அவர்கள் எங்களை உள்ளே செல்ல விட்டனர்.
கோட்டையினுள் செல்வதற்கு அனுமதி பெற என்ன செய்ய வேண்டுமென்று நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தபோது, எங்களுக்குப் பின்னாலிருந்து, "அந்தத் தீண்டத்தகாதவர்கள் குளத்தை அசுத்தப்படுத்தி விட்டார்கள்' என்று கத்திக் கொண்டு நரைத்துப் போன தாடி கொண்ட ஒரு வயது முதிர்ந்த மகமதியர் வந்தார். உடனே அங்கிருந்த மகமதிய இளைஞர்கள், முதியவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து கொண்டு எங்களைத் திட்டத் தொடங்கினர். “தீண்டத்தகாதவர்களுக்கு
மிகவும் திமிராகிவிட்டது. தங்களின் இழிந்த ஜாதியையும், தாங்கள் அடங்கி ஒடுங்கி இருக்கவேண்டும் என்பதையும் அவர்கள் மறந்துவிட்டார்கள். அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்” என்று எங்களை அவர்கள் பயமுறுத்துவது போல் பேசிக்கொண்டே போனார்கள்.
நாங்கள் வெளியூர்க்காரர்கள் என்றும், உள்ளூர்ப் பழக்க வழக்கங்கள் பற்றி எங்களுக்குத் தெரியாது என்றும் நாங்கள் கூறினோம். அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த உள்ளூர்த் தோழர்கள் மீது அவர்கள் கோபம் திரும்பியது. “இந்தக் குளத்தைத் தீண்டத்தகாதவர்கள் பயன்படுத்த முடியாது என்று நீங்கள் ஏன் இந்த வெளியூர்க்காரர்களுக்குக் கூறவில்லை” என்ற கேள்வியை அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
நாங்கள் குளத்துக்குப் போனபோது அவர்கள் அங்கே வந்தே சேரவில்லை. எங்கள் தவறு அல்ல என்று அவர்கள் மறுப்புத் தெரிவித்தார்கள். எதையும் கேட்காமல் செய்தது எங்கள் குற்றம்தான் அது. ஆனால் மகமதியர்கள் எனது விளக்கத்தைக் கேட்கத் தயாராக இருக்கவில்லை. எங்களை அவர்கள் தொடர்ந்து இழிவான சொற்களில் திட்டிக்கொண்டே இருந்தது எங்களை வெறுப்படையச் செய்தது. வெகு எளிதாக அங்கே கலகம் ஏற்பட்டு அதனால் மரணம் கூட சம்பவித்திருக்கலாம். என்றாலும் நாங்கள் ஒருவாறு எங்களைக் கட்டுப்படுத்திக் கொண்போம். எங்களது சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்துவிடும் என்பதால் எந்தக் குற்றவியல் வழக்கிலும் சிக்கிக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை.
இணைப்புகள்
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-7
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-6
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-5
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-4
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-3
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-2
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-1
இணைப்புகள்
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-7
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-6
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-5
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-4
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-3
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-2
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-1
No comments:
Post a Comment