அரைமணி நேரம் கழித்து வந்த ஸ்டேஷன் மாஸ்டர் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று எங்களை கேட்டார். மாட்டுவண்டி வாடகைக்குக் கிடைத்தால், கோர்கான் வெகு தொலைவு இல்லை என்பதால், நாங்கள் உடனே புறப்படுவதாக கூறினோம். வாடகை சவாரிக்கு வரும் மாட்டு வண்டிகள் பல அங்கிருந்தன. ஆனால் நாங்கள் மஹர்கள் என்று ஸ்டேஷன் மாஸ்டரிடம் நான் கூறிய செய்தி அனைத்து மாட்டு வண்டி காரர்களுக்கும் தெரிந்து விட்டபடியால், தீண்டத்தகாதவர்களை தங்கள் வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்று தங்களை இழிவு படுத்திக் கொள்ளவோ, தங்களை சுத்தப் படுத்திக் கொள்ளவோ அவர்களில் எவரும் விரும்பவில்லை. இரண்டு மடங்கு கட்டணம் தருவதாக நாங்கள் கூறிய போதும், பயன் ஏதுமில்லை. எங்களுக்காகப் பேசிக் கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் என்ன செய்வது என்று தெரியாமல் பேசாமல் நின்று கொண்டிருந்தார்.
திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது; எங்களைப் பார்த்து "உங்களால் வண்டி ஓட்ட முடியுமா?" என்று கேட்டார். எங்கள் இயலாமைக்கு ஒரு தீர்வு காண அவர் முயல்கிறார் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. எங்களால் வண்டி ஓட்ட முடியும் என்று நாங்கள் கூவினோம். இந்தப் பதிலைக் கேட்ட அவர் வண்டிக்காரர்களிடம் சென்று, " வண்டிக்கு இரண்டு பங்கு வாடகை கொடுத்து விட்டு அவர்களே வண்டியை ஓட்டி வருவார்கள்; நீ வண்டியின் பின்னே நடந்து செல்லலாம்" என்று கூறினார்.
திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது; எங்களைப் பார்த்து "உங்களால் வண்டி ஓட்ட முடியுமா?" என்று கேட்டார். எங்கள் இயலாமைக்கு ஒரு தீர்வு காண அவர் முயல்கிறார் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. எங்களால் வண்டி ஓட்ட முடியும் என்று நாங்கள் கூவினோம். இந்தப் பதிலைக் கேட்ட அவர் வண்டிக்காரர்களிடம் சென்று, " வண்டிக்கு இரண்டு பங்கு வாடகை கொடுத்து விட்டு அவர்களே வண்டியை ஓட்டி வருவார்கள்; நீ வண்டியின் பின்னே நடந்து செல்லலாம்" என்று கூறினார்.
இந்த ஏற்பாடு தனக்கு வாடகை சம்பாதித்து கொடுப்பதுடன், தன்னை தீட்டைச் செய்யாமல் காப்பாற்றும் என்று கருதிய ஒரு வண்டிக்காரன் இதற்கு ஒப்புக் கொண்டான். புறப்பட நாங்கள் தயாராகும்போது மாலை 6.30 மணி ஆகிவிட்டது. இருட்டுவதற்கு முன் நாங்கள் கோர்கானை அடைய முடியும் என்ற உறுதிமொழி எங்களுக்கு அளிக்கப்படும் வரை ரயில் நிலையத்தை விட்டு போகாமல் இருக்கவே நாங்கள் ஆவலாய் இருந்தோம்.
அதனால் பயண தூரம் மற்றும் கோர்கானை எந்த நேரத்திற்குள் சென்று அடையலாம் என்ற விவரங்களை மாட்டு வண்டிக்காரரிடம் நாங்கள் கேட்டோம். பயண நேரம் 3 மணிக்கு மேல் ஆகாது என்று அவர் எங்களுக்கு உறுதி அளித்தார். அவரது சொற்களை நம்பி, எங்களது சுமைகளை மாட்டு வண்டியில் வைத்து விட்டு, ஸ்டேஷன் மாஸ்டருக்கு நன்றி கூறிவிட்டு, நாங்கள் மாட்டு வண்டியில் ஏறிக் கொண்டோம். எங்களில் ஒருவர் வண்டி மாட்டின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக்கொள்ள வண்டியை ஓட்ட தொடங்கினோம். வண்டிக்காரர் வண்டிக்கு பின்னால் நடந்து வந்தார். ரயில் நிலையத்துக்கு அருகில் ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அங்கங்கே தண்ணீர் சிறிதளவு குட்டை குட்டையாக நின்றுகொண்டு இருந்ததைத் தவிர ஆறு முற்றிலுமாக வறண்டிருந்தது. அதைத் தாண்டிச் சென்றால் தண்ணீர் கிடைக்காது என்பதால், அங்கே தங்கி எங்களது உணவை முடித்துக் கொண்டு செல்லலாம் என்று வண்டிக்காரர் கூறினார்.
நாங்களும் ஒப்புக்கொண்டோம். வண்டி வாடகையில் ஒரு பகுதியை தனக்கு தரும்படி கேட்ட வண்டிக்காரர் கிராமத்திற்குச் சென்று தனது உணவை முடித்துக் கொண்டு வருவதாக கூறினார். என் அண்ணன் அவருக்கு சிறிது பணம் கொடுத்தார்; விரைவில் வந்து விடுவதாகக் கூறி வண்டிக்காரர் புறப்பட்டுச் சென்றார். எங்களுக்கும் பசி அதிகமாக இருந்ததால், உணவு உன்ன வாய்ப்பு கிடைத்தது பற்றி நாங்கள் மகிழ்ந்தோம்.
நாங்களும் ஒப்புக்கொண்டோம். வண்டி வாடகையில் ஒரு பகுதியை தனக்கு தரும்படி கேட்ட வண்டிக்காரர் கிராமத்திற்குச் சென்று தனது உணவை முடித்துக் கொண்டு வருவதாக கூறினார். என் அண்ணன் அவருக்கு சிறிது பணம் கொடுத்தார்; விரைவில் வந்து விடுவதாகக் கூறி வண்டிக்காரர் புறப்பட்டுச் சென்றார். எங்களுக்கும் பசி அதிகமாக இருந்ததால், உணவு உன்ன வாய்ப்பு கிடைத்தது பற்றி நாங்கள் மகிழ்ந்தோம்.
வழியில் உணவு உண்பதற்காக நல்ல உணவை தயாரிக்கும்படி எங்கள் பக்கத்து வீட்டுக்காரப் பெண்களை எங்கள் அத்தை ஏற்பாடு செய்திருந்தார். உணவுக் கூடையைத் திறந்து நாங்கள் உண்ணத் தொடங்கினோம். கழுவுவதற்கு எங்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டதால், ஆற்றில் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு எங்களில் ஒருவர் சென்றார். ஆனால் அங்கிருந்தது தண்ணீரே அல்ல. தண்ணீர் குடிக்க வந்த பசுக்கள், காளைகள் மற்றும் இதர கால்நடைகளின் மூத்திரம், சாணம் கலந்த சேறு போல் இருந்தது ஆற்றுநீர். மனிதரின் பயன்பாட்டுக்கு உகந்ததாகவே அந்த தண்ணீர் இருக்கவில்லை. நாற்றம் தாங்க முடியாததாக இருந்தபடியால், நாங்கள் அதைக் குடிக்கவில்லை.
அதனால் வயிறு நிரம்பும் முன் சாப்பிடுவதை இடையில் நாங்கள் நிறுத்த வேண்டியதாயிற்று. வண்டிக்காரர் வருகைக்காக நாங்கள் காத்திருந்தபோதும், நீண்ட நேரம் கழித்த பின்னும் அவர் வரவே இல்லை. அவர் வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர எங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் அவர் வந்து சேர்ந்தபின் நாங்கள் புறப்பட்டோம். நான்கு, ஐந்து மைல் தூரம் நாங்கள் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தோம்; வண்டிக்காரர் உடன் நடந்து வந்தார். பின்னர் அவர் திடீரென வண்டியில் குதித்து உட்கார்ந்து கொண்டு மூக்கணாங்கயிற்றை வாங்கிக் கொண்டு வண்டி ஓட்ட தொடங்கிவிட்டார். வண்டியில் எங்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்தால் அசுத்தம் ஆகி விடுவோம் என்ற பயத்தினால் வாடகைக்கு வண்டியை ஓட்டி வர மறுத்த அந்த மனிதன், தன் மதக்கோட்பாடுகளை எல்லாம் கைவிட்டு விட்டு வண்டியில் எங்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்த அவரது நடவடிக்கை பற்றி நாங்கள் எண்ணி வியந்தோம்.
ஆனால் இது பற்றி அவரிடம் எந்த கேள்வியும் கேட்க எங்களுக்குத் துணிவு வரவில்லை. எங்களது இலக்கான கோர்கானை எவ்வளவு விரைவாக அடையமுடியுமோ அவ்வளவு விரைவாக அடைவதிலேயே நாங்கள் ஆர்வம் கொண்டிருந்தோம். சிறிது நேரம் வண்டி செல்வதையே நாங்கள் கவனித்துக் கொண்டிருந்தோம். ஆனால் விரைவில் எங்களைச் சுற்றி இருள் சூழ்ந்து கொண்டது. இருளைப் போக்கும் விளக்குகள் எதுவும் சாலையில் இல்லை. சாலையில் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. நாங்கள் தனிமையில் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்த இயன்ற ஒரு ஆணையோ, பெண்ணையோ அல்லது கால் நடையையோ கூட நாங்கள் சாலையில் எங்களை கடந்து செல்வதையோ எதிர் வருவதையோ பார்க்கவில்லை.
ஆனால் இது பற்றி அவரிடம் எந்த கேள்வியும் கேட்க எங்களுக்குத் துணிவு வரவில்லை. எங்களது இலக்கான கோர்கானை எவ்வளவு விரைவாக அடையமுடியுமோ அவ்வளவு விரைவாக அடைவதிலேயே நாங்கள் ஆர்வம் கொண்டிருந்தோம். சிறிது நேரம் வண்டி செல்வதையே நாங்கள் கவனித்துக் கொண்டிருந்தோம். ஆனால் விரைவில் எங்களைச் சுற்றி இருள் சூழ்ந்து கொண்டது. இருளைப் போக்கும் விளக்குகள் எதுவும் சாலையில் இல்லை. சாலையில் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. நாங்கள் தனிமையில் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்த இயன்ற ஒரு ஆணையோ, பெண்ணையோ அல்லது கால் நடையையோ கூட நாங்கள் சாலையில் எங்களை கடந்து செல்வதையோ எதிர் வருவதையோ பார்க்கவில்லை.
எங்களைச் சூழ்ந்திருந்த தனிமை எங்களுக்கு அச்சத்தை அளித்தது. எங்களது ஆவல் அதிகமாக ஆக, ஆக நாங்கள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டோம். மாசூரிலிருந்து வெகு தூரம் 3 மணி நேரத்துக்கும் மேலாக பயணம் செய்து விட்டோம். ஆனால் கோர்கான் வந்த அடையாளமே தெரியவில்லை. எங்களுக்குள் ஒரு விந்தையான எண்ணம் எழுந்தது. வண்டிக்காரர் எங்களை ஏதோ தனியான இடத்துக்கு கொண்டு சென்று எங்களைக் கொன்று விட சதித்திட்டம் தீட்டி இருப்பாரோ என்று நாங்கள் ஐயப்பட்டோம். நாங்கள் நிறைய தங்க நகைகள் போட்டிருந்தது எங்கள் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. கோர்கானுக்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்றும், ஏன் கோர்கானை அடைய இவ்வளவு தாமதம் ஆகிறது என்றும் நாங்கள் அவரை கேட்டோம். கோர்கானுக்கு இன்னும் அதிக தூரமில்லை; விரைவில் நாம் அங்கு சென்றடைந்து விடுவோம் என்றே அவர் சொல்லிக் கொண்டிருந்தார். இரவு 10 மணி ஆனபோதும் கோர்கான் வராததால் சிறுவர்களாகிய நாங்கள் அழத்தொடங்கியவுடன் வண்டி திட்டமும் தொடங்கிவிட்டோம். எங்களது அழுகையும், புலம்பலும் வெகு நேரம் நீடித்தது. வண்டிக்காரர் எந்த பதிலும் கூறவில்லை. திடீரென்று சிறிது தூரத்தில் விளக்கு ஒன்று எரிவதை நாங்கள் கண்டோம். "அந்த விளக்கை பார்த்தீர்களா? சுங்கச்சாவடி விளக்கு அது. இரவு நாம் அங்கே தங்குவோம்" என்று வண்டிக்காரர் கூறினார். எங்களுக்கு சிறிது ஆறுதல் ஏற்பட்டதில் எங்கள் அழுகை நின்றது.
அந்த விளக்கு, தொலைவில் இருப்பதாகவே தோன்றியது; அதை நாங்கள் விரைவில் அடைய முடியும் என்று தோன்றவில்லை. சுங்கச்சாவடி குடிசையை அடைய இரண்டு மணி நேரம் ஆனது. இந்த இடைவெளி எங்கள் ஆவலை அதிகரிக்கச் செய்ததால், நாங்கள் வண்டிக்காரரிடம், அந்த இடத்தை அடைய ஏன் இவ்வளவு தாமதம் ஆகிறது, நாம் அதே சாலையில் சென்று கொண்டிருக்கிறோமா என்பது போன்ற பலவிதமான கேள்விகளையும் கேட்டு கொண்டே வந்தோம்.
இறுதியில் நடு இரவு நேரத்தில் வண்டி சுங்கச்சாவடி குடிசையை வந்தடைந்தது. அது ஒரு மலை அடிவாரத்தில் அமைந்திருந்தது; ஆனால் மலையின் அந்தப் பக்கத்தில் இருந்தது. நாங்கள் அங்கு சென்றடைந்தபோது, இரவு தங்குவதற்காக வந்திருந்த பல மாட்டு வண்டிகள் அங்கு இருந்ததை நாங்கள் கண்டோம். எங்களுக்குப் பசி அதிகமாக இருந்ததால், நாங்கள் உணவருந்த விரும்பினோம். ஆனால் மறுபடியும் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. எனவே எங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று வண்டிக்காரரிடம் நாங்கள் கேட்டோம். சுங்கம் வசூலிப்பவர் ஒரு இந்து என்றும், நாங்கள் மஹர் என்ற உண்மையைக் கூறினால் எங்களுக்கு தண்ணீர் கிடைக்காது என்று வண்டிக்காரர் எங்களை எச்சரித்தார். எனவே" நீங்கள் மகமதியர் என்று சொல்லிக் கொண்டு தண்ணீர் கிடைக்குமா என்று பாருங்கள்" என்று கூறினார். அதன்படி சுங்கம் வசூலிப்பவர் இடம் நான் சென்று எங்களுக்கு சிறிது தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டேன். நீங்கள் யார் என்று அவர் கேட்டார். நாங்கள் மகமதியர்கள் என்று நான் அவரிடம் கூறினேன். எனக்கு உருது நன்றாகத் தெரியும் என்பதால், நான் அவரிடம் உருதில் பேசினேன். எனவே நான் உண்மையில் மகமதியன் என்று அவர் கருதுவார் என்று எண்ணினேன். ஆனால் என் தந்திரம் பலிக்கவில்லை. " உனக்காக யார் தண்ணீர் வைத்திருக்கிறார்கள்? மலைமேல் கண்ணீர் உள்ளது. வேண்டுமானால் நீயே போய் எடுத்துக்கொள். என்னிடம் தண்ணீர் எதுவும் இல்லை" என்று கறாராகக் கூறிவிட்டார். வண்டிக்கு திரும்பி வந்த நான் என் அண்ணனிடம் செய்தியைக் கூறினேன். என் அண்ணன் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியாது. எல்லோரும் படுத்து உறங்குங்கள் என்று மட்டுமே அவர் எங்களிடம் சொன்னார்.
மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு, வண்டி தரையில் சாய்த்து வைக்கப்பட்டது. வண்டிக்குள் இருந்த பலகை மேல் எங்கள் படுக்கைகளை விரித்துக் கொண்டு நாங்கள் படுத்துக் கொண்டோம். ஒரு பாதுகாப்பான இடத்துக்கு நாங்கள் வந்து சேர்ந்து விட்டோம் என்பதால் நடந்ததைப் பற்றி நாங்கள் வருத்தப்படவில்லை. ஆனால் அண்மையில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி எங்களால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. எங்களிடம் நிறைய உணவு இருந்தது; எங்களைச் பசியும் வாட்டிக் கொண்டிருந்தது; என்றாலும் உணவருந்தாமல் நாங்கள் உறங்கவேண்டி நேர்ந்தது. எங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதே இதற்கு காரணம்; நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதே எங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போனதற்கு காரணம்.
அதுதான் அன்றிரவு இறுதியாக எங்கள் மனதில் தோன்றிய சிந்தனையாகும். பாதுகாப்பான இடத்திற்கு நாம் வந்து சேர்ந்து விட்டோம் என்று நான் சொன்னேன். என்றாலும் என் அண்ணன் அவ்வாறு கருதவில்லை என்று தெரிந்தது.
நாம் நால்வரும் ஒரே நேரத்தில் உறங்குவது சரியல்ல என்றும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறியவர், ஒரு நேரத்தில் இரண்டு பேர் மட்டும் உறங்கலாம் இரண்டு பேர் விழித்துக் கொண்டிருக்கலாம் என்று யோசனை சொன்னார். இவ்வாறு அந்த இரவை நாங்கள் அந்த மலை அடிவாரத்தில் கழித்தோம்.
இணைப்புகள்
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-7
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-6
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-5
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-4
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-3
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-2
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-1
இணைப்புகள்
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-7
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-6
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-5
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-4
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-3
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-2
'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-1
No comments:
Post a Comment