சாதி, மதத்தை ஏற்காத அல்லது எதிர்க்கின்ற தமிழர்களே திராவிடர்கள்.
சாதி மதத்தை ஏற்காத தமிழர்களை, சாதி மதத்தை ஏற்காத தமிழர்கள் என்றே சொல்லலாமே! என்று கேட்பீர்களானால், இந்தக் கட்டுரையை முழுமையாகப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மொழியை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அடையாளப் படுத்தப்பட்டதே திராவிட இனம்.
பண்பாடு அல்லது கலாச்சாரம் என்பது, வாழ்வியலின் அணைத்துப் பகுதிகளுமாகும்.
உதாரணமாக, அய்யா பழ.கருப்பையா போன்றவர்களிடம் கேட்டால், எல்லாவற்றையும் தண்ணீர் ஊற்றி கழுவுவது திராவிட கலாச்சாரம் என்றும் எல்லாவற்றையும் தீயிட்டு பொசுக்குவது ஆரியக் கலாச்சாரம் என்று சொல்லுவார்.
அதாவது, நம்மவர்கள் கும்பத்திற்கு தண்ணீர் ஊற்றுவது, சிலைகளுக்கு அபிசேகம் என்ற பெயரில் தண்ணீர் ஊற்றுவது, பெண் பருவமடைந்தால் தண்ணீர் ஊற்றுவது. இது போன்று இன்னும் பல சடங்குகளில் தண்ணீர் ஊற்றுவதே வழக்கம். ஏனென்றால், நாம் வாழ்வது வெயில் பிரதேசம்.
ஆனால், ஆரியர்கள், அதாவது பார்ப்பனர்கள், யாகம் வளர்த்தல் என்ற பெயரில் அணைத்தையும் தீயிலிட்டு கொளுத்துவார்கள். ஏனெனில் அவர்கள் குளிர் பிரதேசங்களில் இருந்து இங்கே வந்தவர்கள். இவ்வாறு பழ.கருப்பையா அவர்கள் கூறுவார்கள்.
இப்படியாக பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டே திராவிட இனம் அடையாளப் படுத்தப்பட்டது.
சரி எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு அடையாளப் படுத்தப்பட்டது?
என்னளவில் இந்தக் கேள்விக்கே இடமில்லை, மற்றும் அர்த்தமற்றது.
நேற்றைக்குக் கூட அடையாளப் படுத்தப்பட்டிருக்கடும், இன்றைக்குக் கூட அடையாளப் படுத்தப்பட்டிருக்கட்டும், இவ்வளவு ஏன்? இந்த நிமிடம் கூட அடையாளப் படுத்தப்பட்டிருக்கட்டும். அதுவல்ல முக்கியம். அதன் அரசியல் நிலைப்பாடு என்ன? சமுதாயத்தைப் பற்றிய அதன் கருத்து என்ன? இவைகளே முக்கியம் என்று சிந்தனா சக்தி உள்ள அணைவரும் விளிக்க முற்படுவர்.
(பழைய கற்காலம், புதிய கற்காலம், உலோகக் காலம் என்றெல்லாம் நாம் வரலாறு படிக்கிறோம். மனிதன் முதலில் கற்களை ஆயுதமாக பயன்படுத்தினான். பின்னர் இரும்பு போன்ற உலோகங்களைப் பயன்படுத்தினான். ஆனால், பழைய கற்காலம், பதிய கற்காலம் என்றெல்லாம் அவன் வாழ்ந்த காலத்தில் பெயர் வைக்கவில்லை. நாம் தான் வைத்துக் கொண்டோம்.)
(பழைய கற்காலம், புதிய கற்காலம், உலோகக் காலம் என்றெல்லாம் நாம் வரலாறு படிக்கிறோம். மனிதன் முதலில் கற்களை ஆயுதமாக பயன்படுத்தினான். பின்னர் இரும்பு போன்ற உலோகங்களைப் பயன்படுத்தினான். ஆனால், பழைய கற்காலம், பதிய கற்காலம் என்றெல்லாம் அவன் வாழ்ந்த காலத்தில் பெயர் வைக்கவில்லை. நாம் தான் வைத்துக் கொண்டோம்.)
சமுதாயத்தைப் பொறுத்தமட்டில், சாதி, மதத்தை ஏற்காத அல்லது எதிர்க்கின்ற தமிழர்களே திராவிடர்கள்.
அரசியலைப் பொறுத்தமட்டில், சமுக நீதி அரசியலே திராவிட அரசியல். எளிதாகச் சொன்னால், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு சமுதாயத்தில், இட ஒதுக்கீடு என்பதே சமுக நீதி.
பிறப்பின் அடிப்படையில் அணைவரும் சமமே என்று பறைசாற்றுவதே திராவிட கருத்தியல்.
சரி நாம், திராவிடர்களுக்கு வருவோம். இப்பொழுது தமிழ் நாட்டில் சில போலி தமிழ் தேசியவாதிகள் பலர் கிளம்பியுள்ளனர்.
அவர்கள் சொல்லுவது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் எங்கள் முப்பாட்டர்கள்.
ஆனால், தமிழ்நாடு என்பது இந்த மூன்று சேர, சோழ, பாண்டிய நாடுகள் மட்டும் இல்லை.
மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய கொங்கு நாடும், துளு நாடும் என்ற ஆராய்ச்சிப் புத்தகத்தில் பண்டைய தமிழ்நாடு என்பது, சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, துளு நாடு, தொண்டை (அ) அருவா நாடு, கொங்கு நாடு என்று ஆறு நாடுகளாகப் பிரிந்து இருந்தது.
சரி நாம் ராஜராஜ சோழனை எடுத்துக் கொள்வோம். இது தமிழ் பெயர் இல்லை. அவனுடைய உண்மையான பெயர் அருள்மொழி வர்மன். அருள்மொழி பரவாயில்லை. அது என்ன வர்மன்? சரி விட்டுவிடுவோம். கேட்டால் அது சுத்தமான தமிழ் பெயர் என்பார்கள். ராஜராஜ சோழன், இராசராச சோழன் என்று தமிழ் பெயர் ஆனது போல.
பிறப்பின் அடிப்படையில் அணைவரும் சமமே என்று பறைசாற்றுவதே திராவிட கருத்தியல்.
சரி நாம், திராவிடர்களுக்கு வருவோம். இப்பொழுது தமிழ் நாட்டில் சில போலி தமிழ் தேசியவாதிகள் பலர் கிளம்பியுள்ளனர்.
அவர்கள் சொல்லுவது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் எங்கள் முப்பாட்டர்கள்.
ஆனால், தமிழ்நாடு என்பது இந்த மூன்று சேர, சோழ, பாண்டிய நாடுகள் மட்டும் இல்லை.
மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய கொங்கு நாடும், துளு நாடும் என்ற ஆராய்ச்சிப் புத்தகத்தில் பண்டைய தமிழ்நாடு என்பது, சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, துளு நாடு, தொண்டை (அ) அருவா நாடு, கொங்கு நாடு என்று ஆறு நாடுகளாகப் பிரிந்து இருந்தது.
சங்க காலத் தமிழகம் |
சரி ராஜராஜன் என்றால் என்ன? மன்னருக்கெல்லாம் மன்னன். சருங்கச் சொன்னால், மாமா மன்னன் என்று அர்த்தம். அதாவது, மன்னன் என்றால், சாதா மன்னன். மாமா மன்னன் என்றால், பல மன்னர்களை வென்ற, மன்னருக்கெல்லாம் மன்னர் என்றால் மாமா மன்னன் என்று அர்த்தம்.
இவனுக்கு மற்றொரு பெயரும் உண்டு. அப்படி எந்த மன்னர்களை வென்று மாமா மன்னன், மும்முடிச்சோழன், ராஜராஜ சோழன் போன்ற பட்டங்களைப் பெற்றான் என்றால், வேறு யாரையும் இல்லை. அங்குட்டு இருந்த பாண்டியனையும், இங்குட்டு இருந்த சேரனையும் தான்.
அப்படியானால், தஞ்சாவூர் பக்கம் உள்ளவர்கள் ராஜராஜ சோழனை முப்பாட்டன் எனறு சொன்னால், ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், மதுரைப் பக்கம் உள்ளவர்களும் முப்பாட்டன் என்கிறார்கள். அவன் உங்களுக்கு முப்பாட்டன் இல்லை. உங்கள் முப்பாட்டனை தூக்கிப் போட்டு நொங்கு எடுத்தவன். இன்னமும் சுருங்கச் சொன்னால், உங்கள் முப்பாட்டன் பாண்டியனை வச்சு செஞ்சவன்.
இப்படியாக பாண்டியனையும், சேரனையும் வச்சு செஞ்சுதான் மாமா மன்னன், மும்முடிச் சோழன், ராஜராஜ சோழன் என்றெல்லாம் பெயர் பெற்றான்.
சரி அவன் ஆட்சி காலத்தில், உலகப் பொதுமறை என்று சொல்லப்படுகின்ற திருக்குறளை ஏதேனும் மக்களுக்கு அறிமுகம் செய்ததுண்டா? அதுசரி பெயரையே ராஜராஜ சோழன் என்று வைத்துக் கொண்டவன் அல்லது ஏற்றுக் கொண்டவன் எப்படி திருக்குறளை வளர்த்திருப்பான்? அவன் பார்ப்பனியத்திற்கு அடிமையாகவே இருந்தான்.
சரி நாம், திராவிடர்களுக்கு வருவோம். சேரன் தமிழ் மன்னன் தான் என்பதை போலித் தமிழ் தேசியவாதிகள் ஒப்புக் கொள்வார்கள் என்றே கருதுகிறேன்.
சேரன் ஆண்ட பகுதி எது? என்று பார்த்தால் இன்றைய மலையாளம் பேசும் மக்கள் வசிக்கும் கேரளா ஆகும்.
அப்படியானால், சேரன் ஆளும்போது அங்கும் தமிழர்கள்தான் ஆளப்பட்டவர்கள். ஏனெனில், சமஸ்கிருத மொழி கலப்பால் தமிழிலிருந்து படிப்படியாக உருவம் பெற்றதே மலையாளம்.
சேரன் ஆண்ட பகுதி இப்போது மலையாள தேசத்தில் இருப்பதால், சேரனை நாம் மலையாளி என்று அடையாளப் படுத்த முடியாது.
அப்படியானால், திராவிடம் என்பது நிலத்தின் அடிப்படையில் தான் சொல்லப்பட்டதா? ஆம். ஆனால், ஒரு காலத்தில். ஆனால், மொழியில் சமஸ்கிருத கலப்பும், பண்பாட்டில் பார்ப்பனிய கலப்பும் ஏற்ப்பட்ட பின்பு, நிலத்தை அடிப்படையாக வைத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஆகவே, போலித் தமிழ் தேசியவாதிகள் சொல்வதுபோல், கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தமிழகம் ஆகிய அணைத்தும் சேர்ந்ததே திராவிடம் என்று சொல்லுவதில் அர்த்தமில்லை.
அதே நேரத்தில், அந்தந்த பகுதிகளைச் சார்ந்தவர்கள் வரலாற்றை அறிந்து, நான் திராவிடன் என்று சொல்லுவாரெனில், அது மறுப்பதற்கு இல்லை. ஆனால், அவர்கள் அப்படிச் சொல்லுவதில்லை. ஏனெனில், அப்படிச் சொன்னால், தமிழ் மொழியையும் அவர்கள் உயர்வாகக் கருத வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாவார்கள்.
பெத்த ஆத்தாளுக்கு, புள்ளங்க மேல எவ்வளவுதான் அன்பு இருந்தாலும். ஆத்தாவோட பசிக்கு புள்ள சாப்பிட்டால், ஆத்தாளுக்கு பசி தீர்ந்து விடாது இல்லையா?
சரி நாம், திராவிடர்களுக்கு வருவோம். ஆகவே, சாதி, மதத்தை ஏற்காத தமிழர்களே திராவிடர்கள்.
நான் முன்பே சொல்லியது போல், சாதி, மதத்தை ஏற்காத தமிழர்களை, சாதி, மதத்தை ஏற்காத தமிழர்கள் என்றே சொல்லலாமே? என்று கேட்டால்; நாம் சிலபேரை பார்த்திருப்போம், புரட்சித் தமிழன், பச்சைத் தமிழன், தமிழன், செந்தமிழன்(அந்த நபர் அல்ல, அது அவர் தந்தையின் பெயர் என்பது தெரியும். இது பொதுவாக சொல்லப்பட்டது.) என்ற அடைமொழிக்குப் பின்னால் தன்னுடைய பெயரை எழுதுவார்கள் அல்லது சொல்வார்கள்.
அப்படியானால், பச்சைத் தமிழன் பச்சையாகவும், செந்தமிழன் சிவப்பாகவும், புரட்சித் தமிழன் எப்பொழுதும் புரட்சி செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
பெயரை மட்டும் எழுதினாலோ அல்லது சொன்னாலோ போதுமானது தான். சரி யாருக்கோ நீங்கள்; நான் தமிழன் என்று அடையாளப் படுத்திக் காட்டுவதற்காக அப்படி எழுதுவதாக வைத்துக் கொள்ளலாம்.
அப்படியானால், தமிழன் என்று எழுதிவிட்டு, பிறுகு பெயரை எழுதினால், போதுமானதுதானே. உதாரணமாக, தமிழன் குப்புச்சாமி என்று எழுதினால், நீங்கள் தமிழன் என்று அடையாளப் படுத்திவிட்டீர்கள் அல்லவா?
பின்னர் ஏன் பச்சைத் தமிழன், புரட்சித் தமிழன், செந்தமிழன் போன்ற வாசகங்கள்?
விளக்கம் கேட்டால் நாடி, நரம்பு, ரத்தம், சதை அனைத்திலும் தமிழ் பற்று ஊறியுள்ள தமிழன் தான், புரட்சித் தமிழன் அல்லது பச்சைத் தமிழன் அல்லது செந்தமிழன் என்றெல்லாம் விளக்கம் கொடுக்க முற்படுவார்கள்.
அப்படியானால் நாடி, நரம்பு, ரத்தம், சதை அனைத்திலும் தமிழ்ப்பற்று ஊறியுள்ள தமிழனை; நாடி, நரம்பு, ரத்தம், சதை அனைத்திலும் தமிழ் பற்று ஊறியுள்ள தமிழன் என்றே அழைக்கலாமே?
ஏன் புட்சித் தமிழன், செந்தமிழன், பச்சைத்தமிழன் என்றெல்லாம் தேவையில்லாமல் அழைத்துக்கொண்டு.
சரி தமிழனுக்கும் திராவிடனுக்கு என்ன வித்தியாசம்?
Kuppusami chettiar primary school என்று ஒரு பள்ளிக்கூடத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தால், திராவிடர் என்பவர் முதலில் chettiar என்பதை அழிக்கச் சொல்லுவார். பிறகு அதனை குப்புசாமி தொடக்கப்பள்ளி என்று தமிழில் எழுதச் சொல்லுவார்.
ஆனால், தமிழர் என்பவர் முதலில், kuppusami chettiar primary school என்பதை, குப்புசாமி செட்டியார் தொடக்கப்பள்ளி என்று தமிழில் எழுதச் சொல்லுவர் என்பதோடு சரி. செட்டியார் என்பதை அழிக்கச் சொல்லமாட்டார்.
ஆமாம், பின்னே செட்டியார் என்பதை அழித்துவிட்டால், குப்புசாமி என்பவர் தமிழரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது. கர்நாடகாவில் குமாரசாமி இருப்பதுபோல, ஆந்திராவில் எங்காவது ஒரு குப்புசாமி இருக்கலாம்ல.
தமிழை வைத்துதான் நாங்கள் வயிறு வளர்க்கிறோம். அதுக்கும் வேட்டு வைத்தால் எப்படி என்று கேட்பார்கள்.
அந்த வகையில், இவர்களுக்கு பாரதியார், ராஜாஜி, சுப்பிரமணிய சுவாமி, எச்.ராஜா போன்ற பார்ப்பனர்கள்
எல்லாம் தமிழர்கள். அதாவது தமிழை நீச்ச பாஷை என்றவர்கள் (பாரதியும் தான். அவன் தமிழை ஆங்கிலத்தோடு ஒப்பிடும்போது யாமறிந்த மொழிகளிலே என்று சொல்லுவான். அதுவே, சமஸ்கிருத்த்தோடு அதனை ஒப்பிட முடியாது என்பான்.)
இவர்கள் சாதியை வைத்து தமிழர்களை கண்டுபிடிப்பவர்கள். அப்படியென்றால் கூட பார்ப்பனர்கள் எப்படி தமிழர்களானார்கள் என்று தெரியவில்லை. அவர்களும் தங்களை தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளுவார்கள். குறைந்தபட்சம் தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம் போன்ற தமிழ் பாடல்களைக் கூட கோவில்களில் பாடமாட்டார்கள்.
தங்களை தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் எந்த பார்ப்பனரும் தங்களை திராவிடர்கள் என்று சொல்லுவதில்லை.
இரண்டாவது முறை, இவர்கள் தமிழ் விந்துவை வைத்து தமிழர்களை கண்டுபிடிக்கிறார்கள்.
ஆம். என் தந்தை தமிழராகவும், தாய் ஒரு கன்னடராகவும் இருக்கும் பட்சத்தில், நான் தமிழன்தானாம்.
இதுவே, என் தாய் தமிழராகவும் என் தந்தை கன்னடராகவும் இருக்கும் பட்சத்தில் நான் கன்னடராம்.
அப்படியானால், இது தமிழ் விந்து கண்டுபிடிக்கும் செயல்தானே. இது ஒரு ஆணாதிக்க மனோபாவம். தந்தை தமிழரென்றால் மட்டும் பிறக்கும் குழந்தையும் தமிழனாம்.
ஆனால், மேடையில் ஏறி பொய் சொல்ல ஆரம்பிக்கும்போது, இது என் தாய்நாடு, இது என் தாய்மொழி என்று வாய் அளப்பது. இவர்கள் பெண் சுதந்திரம் பற்றி வேறு பேசிக் கொள்ளுகிறார்கள்.
மன்னராட்சி காலத்திலிருந்து பார்பானருக்கு அடிமைப்பட்டு கிடந்த தமிழனை தலை நிமர்த்தியது திராவிடம். உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகறியச் செய்தது திராவிடம். சமஸ்கிருத கலப்பில் இருந்த சொற்களை தனித்தமிழ் சொற்களாக்கியது திராவிடம்.
தமிழை, தமிழனை வளர்த்து திராவிடம். இவர்கள் என்னமோ திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது போன்றே சித்தரிக்கின்றனர்.
அது உண்மை இல்லை. ஏனென்றால், திராவிடத்தின் நீட்சியே தமிழ் தேசியம். ஆகவே, தமிழ் தேசியத்திற்கு திராவிடம் எதிரல்ல. ஆனால், போலித் தமிழ் தேசியத்திற்கு கண்டிப்பாக எதிரானது. பார்ப்பனியத்திற்கு அடிமைப்பட்டு, வயிர் வளர்ப்பதற்காக உள்ள இந்த போலித் தமிழ் தேசியத்திற்கு திராவிடம் எதிரானது தான்.
No comments:
Post a Comment