Monday, April 8, 2019

'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-1

விசாவுக்காக காத்திருக்கிறேன் என்பது அண்ணல் அம்பேத்கருடைய ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். தான் ஒரு தீண்டத்தகாதவனாக இருந்ததற்காக அவர் மனம் பட்ட பெரும் வேதனைகளை அவரது சொந்த வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகளால் விவரிக்கிறார். அதற்காக தனது இளமைக் காலத்தில் அவர் மீது சுமத்தப் பட்ட அவமானங்களை நினைத்துப் பார்க்கிறார். அந்த அவமானங்கள் எவ்வாறு தனது அயல்நாட்டு கல்வியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் கூறுகிறார்.

Sunday, April 7, 2019

நெடுநல்வாடை

நெடுநல்வாடை என்பது சங்க இலக்கியங்களின் பத்துப் பாடல்களில் ஒன்றாகும். இது முதல் தமிழ் சங்கத்தில் பங்கேற்ற, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய, பெரும் புலவர் நக்கீரனால், தலையானம் கானத்து செருவென்ற நெடுஞ்செழிய பாண்டியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது.

நெடுநல்வாடை என்பது நீண்ட நல்ல வாடை காற்றை பற்றி கூறக்கூடிய பாட்டு என்று அர்த்தம்.

Saturday, April 6, 2019

கண்ணகி சிலையும் தி.மு.கழகமும்

தமிழகத்தில் வடமொழி கலப்பினால் சிதிலமடைந்து கிடந்த தமிழ் மொழியும் பார்ப்பனியத்தால் வீழ்ந்து கிடந்த இனப்பற்றும் திராவிட இயக்கங்களின் எழுச்சிக்கு பிறகே மறுமலர்ச்சியடைந்தன. குறிப்பாக தி.மு.கழகத்தின் எழுச்சிக்கு பிறகு தமிழ் இலக்கியங்களில் முதன்மையான திருக்குறள் வெகுஜனப்படுத்தப்பட்டது. இதற்கு அடித்தளமிட்டவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். 1949 ஆம் ஆண்டே அவர் திருக்குறள் மாநாட்டினை நடத்தினார். என்னதான் சில குறள்களில் மாற்று கருத்து இருந்தாலும் இதனை செய்ய அவரால் மட்டுமே முடிந்தது.

Friday, April 5, 2019

சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் பார்ப்னியம்

கண்ணகி என்ற பெயரை கேட்டவுடனேயே " மதுரையை எரித்த கண்ணகி" என்பது நினைவுக்கு வந்துவிடும். அசோகன் என்றவுடன் "அசோகர் மரம் நட்டார்" என்பது நினைவுக்கு வருவது போல. கண்ணகி சிலருக்கு "மதுரையை எரித்தவள்". சிலருக்கு "வீரத்தமிழச்சி". இன்னும் சிலருக்கு "அப்பத்தா". இது போன்று ஏராளான முகங்கள் உள்ளன. இவை எல்லாம் மற்றவர்களின் பார்வைக்கு.

ஆனால், இங்கு நாம் கண்ணகியினுள்ளே குடிகொண்டிருந்த பார்ப்பனிய முகத்தைப் பற்றி பார்ப்போம்.

ஆனால், அது கண்ணகியின் பார்ப்பனியமா? அல்லது கண்ணகியின் வழியாக தன்னுடைய பார்ப்பனியத்தை வெளிக்காட்டினாரா நம்ம புலவர் இளங்கோவடிகள் என்பது அவரவர்களின் பார்வைக்கு இருக்கட்டும். ஏனெனில் இது நம்ம இளங்கோவின் கற்பனையே. அப்படி என்னதான் அந்த ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.

Thursday, April 4, 2019

அட்சய திருதியை

நாம் என்னதான் படித்திருந்தாலும், மூடநம்பிக்கைகளுக்கு ஒன்றும் பஞ்சமில்லை. பணம் குடுத்தாலோ அல்லது வாங்கினாலோ வாசலில் நின்று செய்யக்கூடாதாம். ஒன்று வாசலுக்கு உள்ளே நின்று செய்ய வேண்டும் இல்லையென்றால் வாசலுக்கு வெளியே நின்று செய்ய வேண்டும். ஆனால் வாசலில் மட்டும் நின்று செய்ய கூடாதாம். இந்த வரிசையில் ஒன்றுதான் அட்சய திருதியை. அன்று தங்கம் வாங்கினால், தங்கம் பெருகுமாம். காரணம் என்னவேண்டுமானாலும் இருக்கட்டும். எதுவாக இருந்தாலும் மூடநம்பிக்கை தான், அதாவது அன்றைக்கு தான் நகை வாங்க வேண்டும் என்பதற்கு என்ன காரணம் சொன்னாலும் அது மூடநம்பிக்கையின் வெளிப்பாடே.