Tuesday, May 7, 2019

வினைச்சொல்

ஒரு தொழிலின் காலம் காட்டும் சொல் வினைச்சொல் எனப்படும்.

உதாரணம்

ஓடுதல் என்பது ஒரு தொழிற் பெயர் ஆகும்.

ஓடினான், ஓடுகின்றான், ஓடுவான் போன்ற இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய ஏதேனும் ஒரு காலத்தை குறித்தால் அது வினைச்சொல் எனப்படும்.

Monday, May 6, 2019

சிறுபாணாற்றுப்படை

பாணர்கள் இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என மூன்று வகைப்படுவர். சிறிய யாழை இசைப்பவர்கள் சிறுபாணர் எனப்படுவர்.

இந்த நூல் 269 அடிகளைக் கொண்டது. சிறிய யாழ் கொண்ட பாணரை ஆற்றுப்படுத்தி பாடியதால் இந்த நூலுக்கு சிறுபாணாற்றுப்படை என்று பெயர் வந்தது.

Saturday, May 4, 2019

பெயர்ச்சொல்

பொருள் விளங்கச் சொல்வது பெயர்ச்சொல் ஆகும்.

அதாவது, ஒன்றன் பெயரை உணர்த்துவது அல்லது, ஒன்றன் பெயர் விளங்கச் சொல்வது பெயர்ச்சொல் ஆகும்.

பெயர்ச்சொல்லானது, பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.

சொல்லிலக்கணம்

ஒரு எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துகள் சேர்ந்து வந்தோ பொருள் தந்தால் அது சொல் எனப்படும்.

சொல் என்ற சொல்லுக்கு, சொல், பதம், கிழவி, மொழி என்ற மாற்றுச் சொற்களும் உண்டு. ஆனால், அவற்றை உரிய இடத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஔகாரக்குறுக்கம்

ஔகாரம் (ஔ) என்பது ஒரு ஔநெடில் எழுத்து ஆகும். நெடில் எழுத்துக்கான கால அளவு இரண்டு மாத்திரைகள் ஆகும்.

ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுது மட்டுமே இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும்.
செய்யுளின் சீர்களில் வரும்போது, இரண்டு மாத்திரை அளவு ஒலிப்பதில்லை.