Wednesday, May 15, 2019

நீதிதேவன் மயக்கம் (காட்சி-1)

               ‌‌              காட்சி-1 

இருண்ட வானம் (இடி மின்னலுடன் காற்றுப் பலமாக அடிக்கிறது. இந்தப் பேரிரைச்சலுக்கிடையே ஏதோ, குரல் கேட்டுக் கொண்டிருக்கிறது)

ஆண்டவன்: நீதிதேவா! நீதிதேவா!

(பதில் ஏதும் இல்லை. மீண்டும் அதிகாரத் தொனியில் அழைக்கிறார்)

ஆண்டவன்: நீதிதேவா! நான் அழைப்பது உன் காதில் விழவில்லையா? நீதிதேவா?

நீதிதேவன் மயக்கம்

அறிஞர் அண்ணா அவர்களால் 1947 ஆம் ஆண்டு எழுதப்பட்டு, திராவிட நாடு பத்திரிகையில் வெளிவந்த நீதிதேவன் மயக்கம் என்னும் நாடகம், விவாதப் புலமைக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

இன்றளவும் இந்த நாடகம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலும் மாணவர்களுக்கு பாடமாக இருப்பது(இடையில் திட்டமிட்டு நீக்கப்பட்டு, பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டது), அண்ணாவின் விவாதப் புலமைக்கு உதாரணமாக இருக்கிறது.

அகப்பொருள் இலக்கணம்

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் பற்றி பாடப்படுவது அகப்பொருள் இலக்கணம் ஆகும்.

பொதுவாக அகப்பொருள் இலக்கியங்களில், பாட்டுடைத் தலைவன் பெயரும், தலைவி பெயரும் வெளிப்படையாக சொல்லப்படுவது இல்லை.

தலைவன், தலைவி, தோழி, செவிலி போன்ற சொற்களே பயன்படுத்தப்படுகின்றன.

காதல் உணர்வு அணைவரும் பொதுவானது என்பதால், தலைவன், தலைவி என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறது.

அகப்பொருள் திணைகள்

திணை என்றால், ஒழுக்கம் அல்லது பிரிவு என்று பொருள்படும்.

புரியும்படி சொன்னால், விடுதலை என்ற ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இரண்டு நபர்களைக் கருதுவோம். அவர்களில் ஒருவர் அமைதி போராட்டத்தின் மூலம் விடுதலை வேண்டும் என்றும், மற்றொருவர் ஆயுத போராட்டத்தின் மூலம் விடுதலை வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள்.

இங்கே, நோக்கம் இருவருக்கும் ஒன்றுதான் என்றாலும், அதனை அடையும் வழி வேறு வேறாக உள்ளது.

இதேபோல், காதல் என்பது அணைவருக்கும் பொதுவானது என்றாலும், ஒவ்வொரு நிலத்திற்குமான ஒழுக்கம் மாறுபடுகின்றது.

இப்படியாக கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என்ற ஏழு திணைகளை அகத்திணகளாக தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

இவற்றில்,

கைக்கிளை என்பது ஒருதலைக் காமத்தையும்,

பெருந்திணை என்பது பொருந்தாக் காமத்தையும், அதாவது, வயதான ஆணுக்கு வயது குறைந்த பெண்ணுடன் ஏற்படும் காதல் அல்லது, வயதான பெண்ணுக்கு வயது குறைந்த ஆணுடன் ஏற்படும் காதல்.

ஆகவே, இவை இரண்டும் தமிழர் வாழ்வியலுக்கு பெருமையை ஏற்படுத்துவதாகக் கருதப்படுவது இல்லை.

ஏனைய குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவை அன்பின் ஐந்திணைகள் என்று விளிக்கப்படுகின்றன.

அகப்பொருள் இலக்கணம் பின்வருமாறு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1. முதற்பொருள்

2. கருப்பொருள்

3. உரிப்பொருள்

1. முதற்பொருள்

நிலம் மற்றும் காலம் ஆகியவற்றைக் குறிப்பது முதற்பொருள் ஆகும்.

நிலம்

ஐந்து திணைகளையும் அவற்றிற்குறிய நிலத்தையும் குறிக்கும்.

குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த நிலமும்

முல்லை - காடும் காடு சார்ந்த நிலமும்

மருதம் - வயலும் வயல் சார்ந்த நிலமும்

நெய்தல் - கடலும் கடல் சார்ந்த நிலமும்

பாலை - மணலும் மணல் சார்ந்த நிலமும்

காலம்

ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய பெரும்பொழுதையும் சிறுபொழுதையும் குறிக்கிறது.

காலம் பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பெரும்பொழுது

ஒரு ஆண்டில் உள்ள பன்னிரு திங்களின்(மாதம்) கூறுபாடு பெரும்பொழுது ஆகும்.

ஒவ்வொரு பெரும்பொழுதும் இரண்டு திங்களை உள்ளடக்கியது.

இளவேனில் - சித்திரை மற்றும் வைகாசி

முதுவேனில் - ஆனி மற்றும் ஆடி

கார் - ஆவணி மற்றும் புரட்டாசி

கூதிர் - ஐப்பசி மற்றும் கார்த்திகை

முன்பனி - மார்கழி மற்றும் தை

பின்பனி - மாசி மற்றும் பங்குனி

சிறுபொழுது

ஒரு நாளின் கூறுபாடு சிறுபொழுது ஆகும். ஒரு நாளினை ஆறு கூறாகப் பிரித்து சிறுபொழுது வகைப்படுத்தப் பட்டுள்ளது.

ஒவ்வொரு சிறுபொழுதும் நான்கு மணி நேர அளவைக் கொண்டது. இவ்வாறாக ஆறு சிறுபொழுதும் சேர்ந்து இருபத்து நான்கு மணி நேரம் அல்லது ஒரு நாள் ஆகும்.

வைகறை - 2 மணி முதல் 6 மணி வரை

காலை - 6 மணி முதல் 10 மணி வரை

நண்பகல் - 10 மணி முதல் 2 மணி வரை

ஏற்பாடு - 2 மணி முதல் 6 மணி வரை

மாலை - 6 மணி முதல் 10 மணி வரை

யாமம் - 10 மணி முதல் 2 மணி வரை

ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது.

ஐந்திணைகளின் முதற்பொருள்
(படத்தின் மீது தொடவும் அல்லது கிளிக் செய்யவும்)

2. கருப்பொருள்

கருப்பொருள் என்பது ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தெய்வம், உணவு, தொழில், மக்கள், விலங்கு, பறவை போன்றவற்றை உள்ளடக்கியது.

இப்படியாக மொத்தம் பதினான்கு வகையான கருப்பொருள்கள் உள்ளன.

1. தெய்வம்

2. விலங்கு

3. புள்(பறவை)

4. உயர்ந்தோர்

5. அல்லோர்( உயர்ந்தோர் அல்லாதோர்)

6. உணவு

7. பூ

8. நீர்

9. ஊர்

10. மரம்

11. தொழில்

12. பறை

13. யாழ்

14. பண்

ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய கருப்பொருள்கள்.

ஐந்திணைகளின் கருப்பொருள்கள்
(படத்தின் மீது தொடவும் அல்லது கிளிக் செய்யவும்)

3. உரிப்பொருள்


உரிப்பொருள் என்பது ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய ஒழுக்கத்தைப் பற்றி கூறுவதாகும்.

ஒழுக்கங்கள்

புணர்தல் - ஒன்று சேர்தல்

ஊடல் - தலைவன் தலைவி மீது கோபம் கொள்ளுதல்

இருத்தல் - பிரிவை ஏற்றுக் கொண்டு வருகைக்காக காத்திருத்தல்.

பிரிதல் - தலைவன் தலைவியைப் பிரிதல்

இரங்கல் - பிரிவை தாங்காமல் தலைவி வருந்துதல்

அகத்திணை பாடல்கள் எந்த திணையைச் சார்ந்து என்று உரிப்பொருள் மூலமே சரியாக துல்லியமாக அறிய முடியும்.

ஏனெனில், உரிப்பொருள் மயங்காது, கருப்பொருள் மயங்கும், முதற்பொருளில் நிலம் மயங்காது ஆனால், பெரும்பொழுதும் சிறுபொழுதும் மயங்கும். இது திணை மயக்கம் எனப்படும்.

உதாரணமாக, முதற்பொருளைப் பொறுத்தமட்டில், குறிஞ்சித்திணைக்கு உரிய சிறுபொழுது யாமம் ஆகும். ஆனால், ஏனைய ஐந்து சிறுபொழுதுகளும்(வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை)  குறிஞ்சி நிலத்தில் ஏற்படும். இதுபோலவே ஏனைய திணைகளுக்கும்.

கருப்பொருளைப் பொறுத்தமட்டில், குறிஞ்சித்திணைக்கு உரிய பறவைகள் கிளி மற்றும் மயில் ஆகும். ஆனால், மற்ற பறவைகளும்(பருந்து, கழுகு, நாரை முதலியவை) குறிஞ்சி நிலத்தில் இருக்கக் கூடும்.

ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய உரிப்பொருள்.

குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்

நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்



Saturday, May 11, 2019

யார் திராவிடர்கள்?

சாதி, மதத்தை ஏற்காத அல்லது எதிர்க்கின்ற தமிழர்களே திராவிடர்கள்.

சாதி மதத்தை ஏற்காத தமிழர்களை, சாதி மதத்தை ஏற்காத தமிழர்கள் என்றே சொல்லலாமே! என்று கேட்பீர்களானால், இந்தக் கட்டுரையை முழுமையாகப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சரி, திராவிடம் என்றாள் என்றால் என்ன?

Friday, May 10, 2019

பொருளிலக்கணம்

பண்டைய தமிழர்களின் வாழ்வியலுக்கு அடிப்படையாக அமைந்த அல்லது தேவைப்பட்ட அனைத்து பொருள்கள் பற்றியும் சொல்லுவது பொருளிலக்கணம் ஆகும்.

பொருளிலக்கணம்; அகப்பொருள் மற்றும் புறப்பொருள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.