Sunday, April 28, 2019

திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை (Dravidian Manifesto)

திராவிட இயக்கத்தின் முக்கிய கொள்கைகளான சுயமரியாதை, பகுத்தறிவு, சமுகநீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 23. 02. 2019 அன்று தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் 33 அம்சங்களைக் கொண்ட திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை (Dravidian Manifesto) ஒன்றை வெளியிட்டார்.

Saturday, April 27, 2019

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-6

பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்

ஒட்டு மொத்தமாய்ப் பாட்டாளிகளுடன் கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கும் உறவு என்ன?

கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு எதிரான ஒரு தனிக் கட்சியாய் இருக்கவில்லை. அவர்கள் பாட்டாளி வர்க்கம் அனைத்துக்குமுள்ள நலன்களை அன்றி தனிப்பட்ட நலன்கள் எவையும் இல்லாதவர்கள். பாட்டாளி வர்க்க இயக்கத்தை வடிவமைக்க அவர்கள் தமக்கெனக் குறுங்குழுக் கோட்பாடுகள் எவற்றையும் வகுத்துக் கொள்ளவில்லை. ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளிடமிருந்து கம்யூனிஸ்டுகளை வேறுபடுத்திக் காட்டுகிறவை பின்வருவன மட்டுமே தான்;

பெண்களின் பருவப் பெயர்கள்

அந்தப் பொம்பள, அந்தப் புள்ள, பொட்டப் புள்ள, கிழவி அல்லது கெழவி, பெண், பெண் குழந்தை போன்றவற்றில் ஏதேனும் ஒரு பெயரின் மூலம் பெண்களின் பருவத்தை, தமிழகத்தின் பல்வேறு வட்டார வழக்குகளில் பயன்படுத்துவதுண்டு.

ஆனால், பெண்களின் சரியான பருவத்திற்கு ஏற்றவாறு, தமிழில் பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இலையின் பருவப் பெயர்கள் மற்றும் மாற்றுப் பெயர்கள்

எல்லா தாவரங்களிலும் உள்ள, எல்லா பருவத்திலும் உள்ளவற்றை நாம் இலை என்ற பொதுப்பெயரிலேயே அழைப்பது வழக்கம்.

உதாரணமாக,

துளசி இலை, வாகை இலை, தூதுவளை இலை.

'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-6

குதிரை வண்டியிலிருந்து விழுந்த அனுபவம்!

1929 ஆம் ஆண்டில் பம்பாய் அரசாங்கம் தீண்டத்தகாதவர்களின் குறைகளைக் கேட்டறிந்து விசாரணை செய்ய ஒரு கமிட்டியை நியமித்தது. அக்கமிட்டியில் நானும் ஓர் அங்கத்தினராக நியமிக்கப்பட்டேன். தீண்டத்தாதவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, ஒடுக்குமுறை, கொடுமை பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க இந்தக் கமிட்டி இராஜதானி முழுவதும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. கமிட்டி உறுப்பினர்கள் குழுக்களாகப் பிரிந்து பயணம் செய்ய முடிவு செய்தோம்.