Thursday, April 11, 2019

எழுத்திலக்கணம்

ஒரு மொழியின் ஒலி மற்றும் வரி வடிவமே எழுத்து ஆகும்.

ஒரு எழுத்தை உச்சரிக்கும்போது தோன்றும் ஒலியே அதன் ஒலி வடிவமாகும்.

ஒரு எழுத்தின் எழுத்து வடிவமே அதன் வரி வடிவமாகும்.

எழுத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

1. முதலெழுத்து       மற்றும்

2. சார்பெழுத்து      ஆகும்.



Wednesday, April 10, 2019

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-1

உழைக்கும் மக்கள் அல்லது பாட்டாளி வர்க்கத்திற்கான பொருளாதார தீர்வை அறிவியல்பூர்வமாக அணுகிய பொருளாதார மற்றும் சமூக அறிஞர் காரல் மார்க்ஸ் ஆவார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பல்வேறு மொழிகளில், பல்வேறு பதிப்புகளில் வெளியிடப்பட்டது.

1872 ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பு.

1882 ஆம் ஆண்டு ரஷ்ய பதிப்பு.

1883ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பு.

1888 ஆம் ஆண்டு ஆங்கில பதிப்பு.

1890ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பு.

1892 ஆம் ஆண்டு போலிஷ் பதிப்பு.

1893 ஆம் ஆண்டு இத்தாலிய பதிப்பு.

குறிஞ்சிப் பாட்டு

பத்துப்பாட்டில் ஒன்றான குறிஞ்சிப் பாட்டினை பெரும்புலவர் கபிலர் பாடியுள்ளார். இவர் பறம்பின் கோமான் என்று போற்றப்படும் வேள்பாரியின் உயிர்த்தோழர் ஆவார். இவர் "குறிஞ்சிக்கு ஒரு கபிலர்" என்று போற்றப்படக்கூடியவராவார். அதாவது குறிஞ்சியை பாடுவதில் இவருக்கு நிகர் இவரே. குறிஞ்சிப்பாட்டு 261 அடிகளைக் கொண்டது. குறிஞ்சிப் பாட்டில் 99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளது.

'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-2

அரைமணி நேரம் கழித்து வந்த ஸ்டேஷன் மாஸ்டர் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று எங்களை கேட்டார். மாட்டுவண்டி வாடகைக்குக் கிடைத்தால், கோர்கான் வெகு தொலைவு இல்லை என்பதால், நாங்கள் உடனே புறப்படுவதாக கூறினோம். வாடகை சவாரிக்கு வரும் மாட்டு வண்டிகள் பல அங்கிருந்தன. ஆனால் நாங்கள் மஹர்கள் என்று ஸ்டேஷன் மாஸ்டரிடம் நான் கூறிய செய்தி அனைத்து மாட்டு வண்டி காரர்களுக்கும் தெரிந்து விட்டபடியால், தீண்டத்தகாதவர்களை தங்கள் வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்று தங்களை இழிவு படுத்திக் கொள்ளவோ, தங்களை சுத்தப் படுத்திக் கொள்ளவோ அவர்களில் எவரும் விரும்பவில்லை. இரண்டு மடங்கு கட்டணம் தருவதாக நாங்கள் கூறிய போதும், பயன் ஏதுமில்லை. எங்களுக்காகப் பேசிக் கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் என்ன செய்வது என்று தெரியாமல் பேசாமல் நின்று கொண்டிருந்தார்.

Monday, April 8, 2019

இயற்பகை நாயனாரின் ஆணாதிக்கம்

இயற்பகை நாயனார் என்பவர் 63 நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரைப் பற்றிய குறிப்பு தேவாரத்தின் ஏழாம் திருமுறையில் சுந்தரமூர்த்தி நாயனாரால் இயற்றப்பட்ட திருத்தொண்டத்தொகையில் காணப்படுகிறது. தேவாரம் என்பது சைவ சமய கடவுளாகிய சிவபெருமானை பற்றி பாடப்பட்ட பன்னிரண்டு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளின்  தொகுப்பாகும். இவற்றில் முதல் மூன்று திருமுறைகள் பாடியவர் திருஞானசம்பந்தர், அடுத்த மூன்று திருமுறைகளைப் பாடியவர் அப்பர் என்கிற திருநாவுக்கரசர் மற்றும் இறுதியான ஏழாம் திருமுறையை பாடியவர் சுந்தரமூர்த்தி நாயனார் ஆவார். இது சிவபெருமானுடைய அடியார்களைப் பற்றி பாடுவதால் இப்பெயர் பெற்றது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்பகை நாயனாரைப் பற்றி சொல்லப்படும் ஒரு கதையைப் பார்ப்போம்.