இந்த நெருக்கடிகளின் போது, இதற்கு முந்திய எல்லாச் சகாப்தங்களிலும் அடி முட்டாள்தனமாய்த் தோன்றியிருக்கும்படியான ஒரு கொள்ளை நோய் - அமித உற்பத்தி என்னும் கொள்ளை நோய் - மூண்டு விடுகிறது. திடுமென சமுதாயம் பின்னோக்கி இழுக்கப்பட்டுச் சிறிது காலத்துக்குக் காட்டுமிராண்டி நிலையில் விடப்படக் காண்கிறோம். பெரும் பஞ்சம், சர்வநாச முழுநிறைப் போர் ஏற்பட்டு வாழ்க்கைத் தேவைப் பொருள்கள் எவையும் கிடைக்காதபடி செய்து விட்டாற் போலாகிறது ; தொழிலும் வாணிபமும் அழித்தொழிக்கப்பட்டு விட்டதாய்த் தோன்றுகிறது - ஏன் இப்படி? ஏனென்றால் நாகரிகம் மிதமிஞ்சி விட்டது, வாழ்க்கைத் தேவைப் பொருள்கள் அளவு மீறிவிட்டன. தொழிலும் வாணிபமும் எல்லை கடந்து விட்டன. சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சிக்திகள் முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சிக்கு இனி உதவுவதாய் இல்லை. மாறாக, அவை இந்த உறவுகளுக்குப் பொருந்தாதபடி அளவு மீறி வலிமை மிக்கவையாகிவிட்டன. இந்த உறவுகள் அவற்றின் வளர்ச்சிக்குத் தடையாகி விட்டன.
Thursday, April 18, 2019
சார்பெழுத்து
சார்பெழுத்துகள் என்பவை தனித்து ஒலிக்கக் கூடியவை அல்ல. இவை, முதலெழுத்துகளான உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்துளைச் சார்ந்தே ஒலிப்பதால் இவை சார்பெழுத்துகள் என்று வழங்கப்படுகின்றன. சுருங்கச் சொல்வதெனில் பிறவற்றைச் சார்ந்து பிறப்பதால் இவை சார்பெழுத்துகள் ஆயின.
Wednesday, April 17, 2019
மெய்யெழுத்து
தமிழில் உயிரெழுத்துகளைப் போலவே, மெய்யெழுத்துகளும் தனித்து ஒலிக்கக் கூடியவை.
மெய்யெழுத்துக்கள் ஒற்றெழுத்துகள் என்றும் அழைக்கப்படுகின்றன. தமிழில் " க் " முதல் " ன் " வரை உள்ள 18 எழுத்துகளும் மெய்யெழுத்துள் ஆகும். அவையாவன,
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
ஆகியவை ஆகும்.
மெய்யெழுத்துகள் அவற்றின் ஒலிக்கும் தன்மையை பொறுத்து, மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
1. வல்லினம்
2. மெல்லினம் மற்றும்
3. இடையினம்
மெய்யெழுத்துக்கள் ஒற்றெழுத்துகள் என்றும் அழைக்கப்படுகின்றன. தமிழில் " க் " முதல் " ன் " வரை உள்ள 18 எழுத்துகளும் மெய்யெழுத்துள் ஆகும். அவையாவன,
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
ஆகியவை ஆகும்.
மெய்யெழுத்துகள் அவற்றின் ஒலிக்கும் தன்மையை பொறுத்து, மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
1. வல்லினம்
2. மெல்லினம் மற்றும்
3. இடையினம்
Monday, April 15, 2019
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-3
உற்பத்திக் கருவிகள் அனைத்தின் அதிவேக அபிவிருத்தியின் மூலமும், போக்குவரத்துச் சாதனங்களில் பிரமாதமான மேம்பாட்டின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் எல்லாத் தேசங்களையும், மிகவும் அநாகரிகக் கட்டத்தில் இருக்கும் தேசங்களையும் கூட, நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது. தன்னுடைய பண்டங்களின் மலிவான விலைகளை அது சக்தி வாய்ந்த பீரங்கிகளாய்க் கொண்டு, சீன மதிலை ஒத்த எல்லாத் தடை மதில்களையும் தகர்த்திடுகிறது ; அநாகரிகக் கட்டத்தில் இருப்போருக்கும் அந்நியர்பால் உள்ள முரட்டுப் பிடிவாத வெறுப்பைப் பணிய வைக்கிறது.
ஏற்காவிடில் அழியவே நேருமென்ற நிர்ப்பந்தத்தின் மூலம் அது எல்லாத் தேசங்களையும் முதலாளித்துவப் பொரு ளுற்பத்தி முறையை ஏற்கச் செய்கிறது ; நாகரிகம் என்பதாய்த் தான் கூறிக் கொள்வதைத் தழுவும்படி, அதாவது முதலாளித்துவமயமாகும்படி எல்லாத் தேசங்களையும் பலவந்தம் செய்கிறது. சுருங்கக் கூறுமிடத்து, அப்படியே தன்னை உரித்து வைத்தாற் போன்றதோர் உலகைப் படைத்திடுகிறது அது.
Sunday, April 14, 2019
உயிரெழுத்து
தமிழில் "அ" முதல் "ஔ" வரை உள்ள 12 எழுத்துகளும் உயிரெழுத்துகளாகுளம். அவை,
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ.
ஆகியவை ஆகும்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ.
ஆகியவை ஆகும்.
உயிரெழுத்துகள்,
1. குறில் எழுத்துகள் மற்றும்
2. நெடில் எழுத்துகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)