Friday, May 3, 2019

மழை வேண்டி வருண யாகம்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர்  பேராசிரியர் அய்யா சுப.வீரபாண்டியன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், 

தமிழ்நாட்டில்யாகம் வளர்த்தால் ஒடிசாவில் புயல் அடிக்கிறது. மிகவும் வலிமையான யாகம் போலிருக்கிறது என்று கேலியாக எழுதியிருந்தார்.

பட்டினப்பாலை

கடியலூர் உருத்திர கண்ணனாரால் பாடப்பட்டது பட்டினப்பாலை. இந்த நூலில் சோழ வளநாடும் காவிரி ஆறும் காவிரிப் பூம்பட்டினமும் சோழ மன்னன் திருமாவளவனின் வலிமையும் வள்ளல் தன்மையும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட நூல்களை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு எனச் சான்றோர்கள் தொகை நூல்களாக தொகுத்து உள்ளார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-7

தனிச் சொத்தை ஒழித்ததும் எல்லாச் செயற்பாடுகளும் நின்று போய்விடும். அனைத்து மக்களும் சோம்பேறித் தனத்தால் பீடிக்கப்படுவர் என்பதாய் ஆட்சேபம் கூறப்படுகிறது.

இது மெய்யானால், முதலாளித்துவ சமுதாயம் நெடுநாட்களுக்கு முன்பே முழுச் சோம்பேறித்தனத்தில் மூழ்கி மடிந்திருக்க வேண்டும். ஏனெனில் முதலாளித்துவ சமுதாயத்தின் உறுப்பினர்களில் உழைப்போர் சொத்து ஏதும் சேர்ப்பதில்லை, சொத்து சேர்ப்போர் உழைப்பதில்லை. மூலதனம் இல்லாமற் போகும் போது கூலியுழைப்பு இருக்க முடியாதென்ற ஓர் உண்மையையே திருப்பித் திருப்பிப் பலவாறாய்ச் சொல்லும் கூற்றே ஆகும் இந்த ஆட்சேபம் அனைத்தும்.

Thursday, May 2, 2019

'விசா'வுக்காக காத்திருக்கிறேன்-7

ஒவ்வொருவரும் அவரவர் மதத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அங்கிருந்த ஒரு மகமதிய இளைஞர் கூறிக் கொண்டே இருந்தான். ஒரு பொதுக் குளத்திலிருந்து தீண்டத் தகாதவர்கள் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பதையே அவன் குறித்துக் கூறினான். எனது அமைதியை இழந்த நான் அவனிடம் கோபமான குரலில், அதுதான் உன் மதம் உனக்குப் போதிக்கிறதா? ஒரு தீண்டத்தகாதவன் முஸ்லிமாக மாறி விட்டால், இக்குளத்திலிருந்து அவன் தண்ணீர் எடுப்பதை நீ தடுப்பாயா?' என்று கேட்டேன். இந்த நேரடியான கேள்விகள் அந்த மகமதியர்களைப் பாதித்தன. எந்தப் பதிலும் அளிக்காமல் அவர்கள் அமைதியாக நின்றனர். 

பலமான மோ(ச)டி அரசு

இந்திய துணைக்கண்டத்தின் பிரதமரான திரு.நரேந்திர மோடி அவர்கள் 1.5.2019 அன்று மதியம் 3 மணி அளவில், ஒரு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது சொல்லுகின்றார்,